| பிரதோஷ விரதம் இருக்கும் முறை |
|
வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று காலையில் எழுந்து நீராடி, சிவநாம சிந்தனையுடன் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும்.
பிரதோஷ வேலை என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரையுள்ள காலமாகும். பிரதோஷ வேளையில் சிவலிங்க மூர்த்தத்தை இடப தேவரின் இரு கொம்புகளுக்கிடையே கண்டு வணங்க வேண்டும். ஐந்தெழுத்தை ஜபம் செய்ய வேண்டும்.
பிரதோஷ நேரத்தில் தேவியுடன் கூடிய சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதை வணங்க வேண்டும். நமசிவாய என்னும் ஐந்தெழுத்தை ஓத வேண்டும்.
முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாவது சுற்றில் செய்யப்படும் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்து கேட்க வேண்டும்.
மஹா பிரதோஷ பலன்:
மது, மங்கை, கொள்ளை, பொய் கூறுதல், இவற்றினால் பல்வேறான பாவங்கள், மஹா பாதகம் ஏற்படும். இந்த பாதகத்தை துடைத்து நன்னெறி அடைய சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினத்தன்று முழு உபவாசம் இருந்து பிரதோஷ நேரத்தில் வழிபடுதல் வேண்டும்.
மேலும் ஒருவருடம் கோவிலுக்கு சென்ற பலனும் கிடைக்கும்.
|