|
இதற்கு பிள்ளையார் நோன்பு என்று பெயர். கார்த்திகை மாதத் தேய்பிறை பிரதமமை முதல் மார்கழி மாத வளர்பிறை சஷ்டி வரையுள்ள 21 நாட்கள் விரதமாகும். இந்நோன்பை மேற்கொள்பவர்கள் 21 இழையிலாகிய நூலைக் காப்பாக ஆண்கள் வலது மணிக்கட்டிலும் பெண்கள் இடது மணிகட்டிலும் அணிய வேண்டும்.
இந்த 21 நாட்களிலும் விநாயகருக்கு திருமஞ்சனம் முதலானவற்றைச் சிறந்த முறையில் செய்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக 21 பணியாரங்களை நிவேதனம் செய்ய வேண்டும். முதல் 20 நாட்களும் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு கட்டுப்பாடான நியதியுடன் விநாயகர் கதைகளைக் கேட்டுத் தியானத்தில் ஈடுபட வேண்டும்.
21 ஆவது நாள் உண்ணாமல் மறுநாள் காலையில் அன்னதானம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.
|