|
உமாதேவியின் அருள்வேண்டி இருக்கும் விரதம் உமா சுக்கிரபார விரதமாகும். இவ்விரதத்தினைச் சுக்கினை;முதன்முதலில் கடைபிடித்தான். எனவே தன் பெயரால் இவ்விரதம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
அதுமுதல் தேவியின் வரத்தினால் வெள்ளிக்கிழமை சுக்கிர வாரமென்னும் பெயர் பெற்றது. சித்திரை மாதம் பிரதமைத்துதியுடன் கூடிய சுக்கிர வாரத்திலே உமா தேவியைத் தியானித்தல் வேண்டும்.
அதிகாலை நீராடி முடித்ததும் கும்பத்திலே நீர் நிறைத்து உமாதேவி அக்கும் பத்தில் எழுந்தருளியிருப்பதாக எண்ணி வழிபட வேண்டும். ஆலயதரிசனம் செய்தலும் வேண்டும்.
அன்று பால், பழம் மட்டும் சாப்பிடுவது உத்தமம்.
|