|
சூரியனுக்குரிய நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதமிருந்து வணங்க வேண்டும். இதனை ஆதிவிரதமென்றும் கூறுவார்கள். சூரியனுக்கு அதிபதி சிவன் என்பதால் சிவன் கோவில்களில் அர்ச்சனை செய்து வழிபடுவதோடு நவக்கிரக சன்னதியை வலம் வந்து சூரிய பகவானை நோக்கி வழிபட வேண்டும்.
"காசினி இருளை நீக்கும் கதிரொளி ஆகியெங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த தேசிகா
எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி"
என்று தோத்திரம் சொல்லி வணங்க வேண்டும். இவ்வாறு வணங்குவதால் உடற்பிணி கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்கும். சாதகத்தில் கிரக தோசமுள்ளவர்களும் மற்றும் சூரிய திசை நடப்பவர்களும் ஞாயிறு விரதமிருத்தால் பலன் கிடைக்கும்..அன்றைய தினம் சிகப்பு துணி, கோதுமை தானம் கொடுக்கலாம்.
|