|
வாஸ்து பகவான் விழித்திருக்கும் நேரம்
வாஸ்து தேவன் ஒரு சஞ்சார நியதியை அடிப்படையாகக் கொண்டு பூலோகத்தைச் சுற்றி வருவதாக ஐதீகள் கூறுகிறது. பூவுலகத்தை பன்னிரண்டு ராசிகளாக பிரித்து பன்னிரண்டு ராசிகளுக்கும் பன்னிரண்டு மாதங்களை நிர்ணயம் செய்து மாதம் ஒரு ராசியில் படுக்கை நிலையில் வாஸ்து தேவன் சஞ்சரிக்கிறார். எனவே புதிதாக வீடு கட்ட நினைபவர்கள் தாம் கட்டிட வேலையைத் தொடங்கும் மாதத்தில் வாஸ்து தேவனின் சஞ்சார நிலை என்னவென்று பார்க்க வேண்டும்.
வாஸ்து தேவன் படுக்கை நிலையில் சஞ்சரிக்கிறார். அப்படி சஞ்சரிக்கும் போது அவருடைய சிரசு, முதுகு, கால் ஆகிய மூன்று உறுப்புகளையும் விலக்கி விட்டு வயிற்று பாகத்திற்குரிய சுபம் மாதத்தினை கணித்து வீடுகட்டும் பணியை தொடங்குவது சிப்றபு. ஜோதிட சாஸ்திரத்தில் வான் மடலத்தில் உள்ள மற்ற கிரகங்கள் பற்றி குறிபிட்டாலும் மனிதர்கள் வசிக்கும் பூமியை பற்றி எதுவும் குறிப்பிட படவில்லை. ஆனால் வாஸ்து சாஸ்திரத்தில் பூமிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவே வாஸ்து வழிமுறைகளை கடைபிப்டிபது அவசியமாகும். வாஸ்து விஞ்ஞானமும் ஜோதிடமும் கலந்த ஒரு விஷயம். இதுகூறும் நியதிகளுக்கு விஞ்ஞான பூர்வமான ஆதரங்களும் உள்ளன என்றும் சிலர் கருதுகின்றனர். வாஸ்து பகவான் வருடத்தின் குறிபிட்ட நேரத்தில் விழித்திருபார். அந்த நேரத்தில் வீடு கட்டும் பணியையோ அல்லது கடை, தொழிற்கூடங்கள் போன்ற பிறகட்டிடங்கள்கட்டும் பணியையோ தொடங்கும் போது அந்த கட்டிடப்பணி தடையின்றி சிறப்பாக நடைபெறுவதுடன் கட்டிடத்தில் உள்வர்களின் வாழ்வு செழிக்கும்.
வாஸ்து பகவான் விழித்திருக்கும் நேரம் வருமாறு:
தை மாதம்- 12ந்தேதி காலை 9.47-11.47 மணி வரை,
மாசி மாதம்- 22ந் தேதி காலை 9.38-11.08 மணி வரை.
சித்திரை மாதம்- 10ந் தேதி காலை 8.00 -9.30 மணி வரை.
வைகாசி மாதம்- 21 தேதி காலை 9.04-10.34 மணி வரை.
ஆடி மாதம்-11ந் தேதி காலை 8.02-9.32 மணி வரை.
ஆவணி மாதம்-6ந் தேதி மதியம் 2.24-3.54 மணி வரை வரை.
ஐப்பசி மாதம் -11ந்தேதி காலை 6.50 -8.20 மணி வரை.
கார்த்திகை மாதம் -8ந் தேதி காலை 10.11 -11.41 மணி வரை |