|
வாகனம் நிறுத்தும் இடம்
வீட்டில் வாகனம் நிறுத்துவதற்கு தனி ஷெட் அமைத்தால் அதை வடமேற்கு அல்லது தென் கிழக்குத் திசையில் கட்ட வேண்டும். வடகிழக்கில் அதிக பாரத்தை ஏற்றக் கூடாது என்பதால் அங்கு மட்டும் கார் ஷெட்டை அமைக்கக் கூடாது. வாகனம் நிறுத்தும் ஷெட் வீட்டின் பிரதான கட்டிடத்தைத் தொடாதவாறு அமைக்க வேண்டும். வடக்குச்சுற்றுச் சுவரைம் தெற்குச் சுற்றுச் சுவரைம் அது தொடக் கூடாது. வாகன ஷெட்டின் கதவு உட்பக்கமாக திறக்கும்படி அமைபது சிறபு. வாகனங்களை எபோதும் வடக்கு முகமாகவே நிறுத்தி வைக்க வேண்டும். அப்படி நிறுத்த வாய்பில்லையென்றால் கிழக்கு முகமாக நிறுத்தலாம். இதனால் வாகனம் பழுதாவது தடுக்கபடுகிறது. வடமேற்கு திசையில் வாகனம் நிறுத்தும் இடத்தைக் கட்டினால் வடமேற்கு மூலையை மூடுவது போலவோ அல்லது வடக்குச் சுற்றுச்சுவரைத் தொடுவது போலவோ கட்டக் கூடாது.தென் கிழக்குத் திசையில் வாகனம் நிறுத்தும் இடத்தைக்கட்டினால் தென்கிழக்கு மூலையை மூடுவது போலவோ அல்லது கிழக்குச் சுற்றுச் சுவரைத் தொடுவது போலவோ கட்டக் கூடாது. தென்மேற்கு திசையில் வாகனம் நிறுத்தும் இடத்தைக் கட்டினால் தென் மேற்கு மூலையை மூடுவதுபோல் கட்ட வேண்டும். வாகனம் நிறுத்தும் இடத்தில் வாஸ்து முறைகளைக் கடைபிடிக்கும்போது வாகன பழுது, விபத்து போன்றவைத்தவிர்க்கபடும். |