| முதல் தர மனை:
வடக்கு, கிழக்கு திசையில், நான்கு திசைகளில், வடக்குத்திசையில் மட்டும், கிழக்குத் திசையில் மட்டும் வீதிகள் அமைந்தமனைகள் முதல்தர மனைகள் ஆகும்
இண்ரடாம் தரமனைகள்:
வடக்கு-கிழக்கு-மேற்கு ஆகிய மூன்று திசைகளில் வடக்கு-கிழக்கு-தெற்க்கு ஆகிய மூன்று திசைகளில், வடக்கு-மேற்கு திசைகளில், கிழக்கு-மேற்குத்திசையில், வடக்கு-தெற்கு திசையில், கிழக்கு-தெற்குத்திசையில் வீதிகள் அமைந்த மனைகள் இரண்டாம் தரமனைகள் ஆகும்.
மூன்றாம் தரமனைகள்
வடக்கு- மேற்கு- தெற்கு திசைகளில் கிழக்கு- மேற்கு- தெற்கு திசைகளில் மேற்கு திசையில் மட்டும், தெற்கு திசையில் மட்டும், மேற்கு, தெற்கு திசையில் வீதிகள் அமைந்த மனைகள் மூன்றாம் தரமனைகள் ஆகும்.
நான்காம் தரமனைகள்:
நேர் திசையில் அமையாமல் வடகிழக்குத் திசையை நோக்கி அமைந்த மனை, நேர்த்திசையை நோக்கி அமையாமல் வடமேற்கை நோக்கி அமைந்த மனை, நேர்த்திசையை நோக்கி அமையாமல் தென் கிழக்கை நோக்கி அமைந்த மனை ஆகியவை நான்காம் தர மனைகள் என்று வழங்கபடுகின்றன. |