|
படிக்கும் அறை
வீட்டில் படிக்கும் அறையையோ அல்லது சிறிய நூலகத்தையோ அமைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் வருமாறு:
வீட்டில் படிக்கும் அறை அல்லது நூலகத்தை மேற்கு திசையில் அமைபது நல்லது. அந்த அறையில் கிழக்கு நோக்கிய படி நாற்காலியை போட்டுக் கொடு படிக்க வேண்டும். வடக்கு நோக்கிம் நாற்காலியை போட்டு படிக்கலாம். ஆனால் அபோது தெற்குச் சுவருக்கு ஒட்டினாற்போல நாற்காலியை போட வேண்டும். மேற்குத் திசைக்கு அடுத்தபடியாக கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு திசையில் அமையும் அறையில் படிபறையை அமைக்கலாம். புத்தக அலமாரிகள் தெற்கு அல்லது மேற்குச்சுவருக்கு அருகில் இருக்க வேண்டும். படிபறையின் நிறத்திற்கும் வாஸ்து விதிகள் உண்டு. இந்த அறைக்கு சுணாம்பு அடிக்க வேண்டும் என்றால் அதில் இளமஞ்சள், இளம்பச்சை ஆகியவற்றில் ஏதாவது ஒரு வணத்தை கலந்து அடிக்க வேண்டும்.வீட்டின் வடகிழக்கு அறையை படிக்கும் அறையாக பயன் படுத்துவதாகயிருந்தால் அதில் போடபடும் நாற்காலி,மேஜைகள் அதிக எடை கொண்டதாக இருக்கக் கூடாது. படிக்கும் அறைக்கும் முகம் பார்க்கும் கண்ணாடி மீன் தொட்டி ஆகியவற்றை வைக்கக் கூடாது. இந்த அறைக்கும் சூரிய வெளிச்சம் நேராக வந்து விழக் கூடாது. படிக்கும் அறையில் வாஸ்து முறைகளை கடைபிடிக்கும் போது அதில் அமர்ந்து படிக்கும் விஷயங்கள் எல்லாம் நன்றாக மனதில் பதிம். இந்த அறை சரஸ்வதி வாசம் செய்யும் அறை என்பதால் தூய்மையாக இருக்க வேண்டும். |