| பிறகு பிரகாரம் சுற்றி வரும் போது கன்னி மூலையில் கணபதி(தென் மேற்கு மூலையில்) உள்ளார்.அவர் கனமானவர்,கண நாதர்,பரிகார தேவதைகளில் உயரமான கோபுரம் கொண்டவர்(கனமான மேல்நிலைத் தொட்டி,மாடிப் படிக்கட்டு தென்மேற்கு மூலையில் அமையுங்கள்,வீட்டிலேயே மிக உயரமான இடமாக இது அமையட்டும்)
அடுத்து அமைந்துள்ளது முருகன் சன்னதி அமைந்துள்ள வாயு மூலை,சிவன் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளையும் சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தது வாயு பகவான்தான். சம்பந்தம் புரிகிறதா! இந்த மூலை கன்னி மூலையை (தென்மேற்கை) அடுத்த உயரமாக அமையலாம். கன்னி மூலை தோதாக அமையவில்லையானால் இங்கே மாடிப்படிக்கட்டு அமைக்கலாம்.
|