|
தெற்கு மத்திய பகுதி:-
ஒரு வீட்டின் தெற்கு திசையின் மத்திய பகுதி வாஸ்து சாஸ்திரத்தில் எமனுக்குரிய பாகமாகக் கருதபடுகிறது. இந்த அறையில் குடும்பத்தின் இரண்டாவது வாரிசுகள் தங்குவது
சிறப்பு. பூஜை அறையாகவும் பொருட்கள் வைக்கக்கூடிய அறையாகவும் இந்த அறையை பயன்படுத்தலாம். இந்த அறையில் கிழக்கு அல்லது வட கிழக்கு பகுதிகளில் நுழைவு வாயில் அமைக்க வேண்டும். இந்த அறையில் வடகிழக்கு பகுதியில் ஒட்டடைக் கம்பு, துடைபம் போன்றவற்றை வைக்கக் கூடாது. இந்த அறையின் தென் மேற்கு பகுதியில் கபோடு அமைபது சிறபைத் தரும்.
|