|
தென் மேற்கு பகுதி:-
வீட்டில் தெற்கு-மேற்கு திசைகள் சந்திக்கும் இந்த பகுதி நிருதி பகவான் தங்கியிருக்கும் அறையாகும். இதை நிருதி அறை என்றும் அழைபார்கள். நம் வாழக்கையில் நிகழும் நன்மை, தீமை, உடல் ஆரோக்கியம், வாழ்க்கைத் தரம் போன்றவற்றை தீர்மானிக்கும் சக்தி தென் மேற்கு அறைக்கு உண்டு. இந்த பகுதியில் அமையும் அறையை பாரமான, கடினமான ,உயரமான பகுதியாக அமைத்துக் கொள்வது சிறபு. இந்த அறையின் சுவர்கள் 90 டிகிரிக்கு செங்குத்தாக இருக்க வேண்டும். இங்கு குறைந்த பட்சம் ஒரு பரணையாவது அமைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த அறை மற்ற அறைகளைவிட கொஞ்சம் பாரமானதாக இருபது நல்லது. கிழக்கு,வடக்கு, பாகத்தில் இந்த அறையின் நுழைவு வாயிலை அமைத்துக்கொள்ளலாம். இந்த அறையை குடும்பத் தலைவன் அல்லது வீட்டிற்குத் தலைமகன் ஆகியவர்கள் படுத்து எழுந்திருக்கும் அறையாக பயன்படுத்துவது சிறபு. தினமும் மாலை 6 மணி முதல் மறுநாள் சூரிய உதயம்வரை இந்த அறையில் எண்ணெய் விளக்கு எரிம்படி பார்த்துக் கொண்டால் வீட்டின் தலைவனுக்கோ, தலைமகனுக்கோ எந்த ஆபத்தும் நிகழாது. |