|
சுற்றுச் சுவர்
ஒரு வீட்டின் பாதுகாபு அதன் சுற்று சுவரை நம்பியேயிருக்கிறது. வெளியிருந்து வாஸ்து தோஷங்கள் அண்டாதவாரும் சுற்றுச்சுவர் தடுக்கிறது. மனையின் தெற்கு, மேற்குச் சுற்றுச்சுவர்களைவிட வடக்கு, கிழக்கில் உள்ள சுற்றுச் சுவர் சற்று குட்டையாக இருக்க வேண்டும். இதை சமன் செய்ய வடக்கு, கிழக்குச் சுவரில் கிரில்கள் அமைக்கலாம். சுற்று சுவர்கள் வீட்டின் பிரதான வாசலின் உயரத்தில் மூன்றில் இரண்டு பங்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சுற்றுச் சுவரின் நான்கு மூலைகளும் சுத்தமாக இருக்க வேண்டும். அவற்றில் வெடிபுகள் இருக்கக் கூடாது. அவை வட்ட வடிவிலும் இருக்கக் கூடாது. வீட்டுக் கட்டிடத்திற்கும் சுற்றுச் சுவருக்கும் இடையே உள்ள இடைவெளி நான்கு பக்கங்களிலும் சரிசமமாகயில்லாமல் வடக்கிலும், கிழக்கிலும் அதிகமாகவும், தெற்கிலும், மேற்கிலும் குறைவாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும் தவிர்க்க முடியாத காரணத்தால் வீட்டுக் கட்டிடம் சுற்றுச் சுவரைத் தொடநேர்ந்தால் தெற்கு, மேற்குச் சுவரைக் கழிபறைக், குளியலறை ஆகியவை தொட்டுக் கொடிண்ருக்குமாறுக் கட்டலாம். ஆனால் வடக்கு, கிழக்குச் சுற்றுச் சுவர்களை வீட்டின் எந்த பகுதிம் தொடக் கூடாது. கட்டிட வேலையை தொடங்கும் போதுதான் சுற்றுச் சுவர் கட்டும் பணியைம் தொடங்க வேண்டும். |