|
குளியலறை
குளியலறை படுக்கை அறைக்குக் கிழக்கிலோ அல்லது வடக்கிலோ அமைந்திருக்க வேண்டும். படுக்கை அறையின் தளமட்டத்தை விட குளியலறையின் தள மட்டம் சிறிது தாழ்வாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை படுக்கை அறைக்கு மேற்கிலோ, கிழக்கிலோ குளியலறை அமைந்திருந்தால் அந்த குளியலறையின் தள மட்டம் படுக்கை அறையின் தள மட்டத்தைவிட சிறிது உயர்வாக இருக்கும்படி அமைத்து வாஸ்து குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். வீட்டின் எத்திசைகளில் குளியலறை அமைப்பதால் உண்டாகும் நன்மை தீமைகளை பார்ப்போம்.
1. வடக்கு: நன்மையான பலன்களே உண்டாகும்,
2. வடகிழக்கு:- இதுவும் நற்பலன்களையேத்தரும்.
3. தெற்கு: சிறபானபலன்கள் உண்டாகும்.
4. தென்கிழக்கு:- இங்கு குளியலறை அமைக்கக் கூடாது அவ்வாறு அமைக்கும் பட்சத்தில் வீட்டில் வசிக்கும் பெண்களுக்கு தீமை உண்டாகும். அவர்களுக்கு மாதவிலக்குக் கோளாறு, கர்பபைக் கோளாறு உண்டாகும்.
5. மேற்கு:- நன்மையான பலன்களே உண்டாகும்.
6. வடமேற்கு:- திசைகளில் குளியலறை அமைக்க மிக பொருத்தமான அறை வடமேற்கு அறையே. இங்கு குளியலறை அமைபதினால் பல்வேறு நன்மைகள் நடக்கும். வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடந்தேறும்.
7. கிழக்கு:-நன்மை,
8. தென்மேற்கு- நன்மை.
குளியலறையைம் கழிவறையைம் சேர்த்து அமைக்கும் பட்சத்தில் தணீரைச் சூடாக்கும் பாய்லறை தென்கிழக்கு மூலையில் வைக்க வேண்டும். தண்ணீர் வரும் குழாயை வடகிழக்குச் சுவரில் பதிக்க வேண்டும். கை கழுவும் தொட்டியைக் கிழக்குச் சுவரில் பதிக்க வேண்டும். முகம் பார்க்கும் கணாடியை வடக்குச் சுவர் அல்லது கிழக்குச்சுவரில் பதிக்கலாம். துணிகளை மாட்டுவதற்கான கொக்கியைக்தெற்கு அல்லது மேற்குச் சுவரில் பொருத்த வேண்டும். படுகை அறைக்கும் குளியல் மற்றும் கழிப றையை அமைக்கும் பட்சத்தில் கழிவறையை வடமேற்கு மூலையில் அமைக்க வேண்டும்.
|