1.விருச்சிக ராசிக்காரர்கள்:
இவர் என்னதான் பொறுமையாய் இருக்க நினைத்தாலும் சூழ் நிலை இதை அனுமதிக்காது. சூழல் மாறும்போது இவரது பேச்சு மனதுக்கு வருத்தம் தருவதாய் இருக்கும். இவருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கலாம். இவருக்கு யுத்தம் என்றால் வெல்லம். யாரேனும் ஒருவருடன் இவருக்கு விரோதம், யுத்தம் இருக்கும் வரை ஆக்டிவாக இருப்பார். ஆரோக்கியமாக இருப்பார். எதிரி ஒழிந்துவிட்டால் இவர் டீலாகிவிடுவார்.
பரிகாரம்: தண்ணீர் பந்தல் வைத்தல்,தோட்டம் வளர்த்தல்
2.ஜாதகத்தில் செவ்வாய் பலமிழந்தால்:
அதி கோபத்தால் வரும் வியாதிகள் (ஹை பிபி) அல்லது கோபத்தை அடக்குவதால் வரும் வியாதிகள் ( அல்சர்) இவருக்கு வரலாம்.
3.லக்னாதிபதி 12ல் இருப்பது அ நீசம் பெறுவது:
சதா சர்வ காலம் இவர் முயற்சியில் பிறர் வேலைகள் எல்லாம் முடியுமே தவிர சொந்த வேலை முடியாது. ஞாபக சக்தி குறைவு, சொந்த கருத்து ,புத்தி இன்மை, எடுப்பார் கைப்பிள்ளையாக இருத்தல் தாழ்வு மனப்பான்மை அ எதிராளிகளை கிள்ளுகீரையாக பாவிப்பது, ஸ்திரமான அபிப்ராயம் இல்லாது போதல் போன்ற குணங்கள் ஏற்படும்.
4.செவ்வாய்3,6,10,11தவிர வேறு இடங்களில் இருந்து நீசம்/பகை பெறுதல்:
இவருக்கு சிறுவயதில் அம்மை, கட்டிகள் போன்ற பிரச்சினைகள் வந்திருக்கலாம் அ உயரமான இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும் நடந்திருக்கலாம். இவர் பிறந்த பிறகு மாடு கன்று நஷ்டமாதல், நிலம் பறி போதலும் நடந்திருக்கலாம்.
பரிகாரம்:
முருகன் கோவிலுக்கு எரியும் பொருட்களை அன்பளித்தல். (உம்: பல்பு , விளக்கு. விளக்காயின் செம்பாகில் உத்தமம். செம்பு பூஜா பாத்திரங்களும் தரலாம் அ உடல் அங்கம் அறுபட்டவர்கள், தீவிபத்தில் சிக்கியவர்களுகு உதவலாம்)
5. பெண்கள் ஜாதகத்தில் ஒன்பதாமிடம் கெட்டால்:
தந்தையாராகட்டும், திருமணத்துக்கு பின் கணவராகட்டும் எல்லாவகையிலும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும்.
6. ஒன்பதாமிடம் குருவுடன் சம்பந்தபப்ட்டால் :
தந்தை சமூகத்தில் நல்ல மரியாதையை பெற்றிருப்பார். ஊர் பொது வேலைகள், சேவைகள், சங்கம் , கோவில் தேவஸ்தானம் போன்றவற்றில் அவருக்கு
பங்கிருக்கலாம்.
7.சுக்கிரன் அ 4 ஆமிடம் கெட்டால்:
வீடு,மனைவி , வாகன வகையறாவில் மனக்குறை இருக்கும். காதல் தோல்வி, தம்பதியிடையில் பிரச்சினை . தாம்பத்ய உறவில் அதிருப்தி.
8.குரு கெட்டிருந்தால் :
வீட்டிலேயே வைத்து தினசரி சிவ லிங்கத்துக்கு பூஜை செய்யலாம்.
9.ராகு கெட்டால்:
பரிகாரம்: மேஜிக் கற்றுகொள்ளுதல்.
10.சனி கெட்டால்:
கிராம தேவதையை பூசித்தல்
11.இரண்டாம் பாவம் சுப பலமானால்:
தனம்,வாக்கு,குடும்பம், கண்கள் ஓகே
12.ஐந்தாமிடம் சுப பலமானால்:
பிள்ளைகள், மன நிம்மதி, பெயர் புகழ்
13.சூரியன் சுமார் பலத்துடன் இருந்தால்:
தந்தை வழியில் கூரையிழந்த வீடோ, காலி இடமோ கிடைக்கலாம். அது மலை பிரதேசத்தில் அ குக்கிராமத்தில் இருக்கலாம். பஞ்சாயத்து, முனிசிபாலிட்டி நிர்வாகத்தில் பங்கு பெறலாம்.
14.தலை எழுத்து:
தலையெழுத்தை ஜாதகம் பார்த்து நிர்ணயிக்கலாம் என்று நினைப்பது முட்டாள் தனம். கிரக நிலையை வைத்து ஜோதிடர் கூறும் அனைத்து நற்பலன்களும் நடப்பதில்லை. அதே மாதிரி தீயபலன்களும் அனைத்தும் நடந்துவிடுவதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இவற்றை குறித்து 1989 முதல் ஆராய்ந்து வருகிறேன். தலையெழுத்து என்பது நீங்கள் பிறந்த போது இறைவன் கையில் இருந்த நிகழ்ச்சி நிரல். மனித வாழ்வில் ஒவ்வொரு செகண்டும் ஒரு ஜங்க்ஷன் பாயிண்ட் தான். ஆம் ஒவ்வொரு செகண்டிலும் மனித வாழ்வு நான்கு வித திருப்பங்களுக்கு வாய்ப்பு தரும் வகையில் ஸோ ஃப்ளெக்சிபிள். மாறிக்கிட்டே இருக்கும். எனவே நான் இங்கு தரும் பலன்கள் 100 சதம் ஏற்கெனவே நடந்திருக்க வேண்டும் என்ற அவஸ்யமில்லை. இப்போது வரை நடக்காத பலன்கள் எதிர்காலத்தில் நடக்கலாம். நடக்காமலும் போகலாம். ஆக நான் இங்கு கூறியுள்ள பலன் 60 சதவீதம் நடந்தாலே நான் சூப்பர் ஜோதிடன் என்பதை மனதில் வைத்து இந்த தகவல்களை படிக்கவும் .
15. ஒன்று ஏழில் ராகு கேது இருந்தால்:
அளவுக்கு மீறி இளைத்த சரீரம், அல்லது ஊளை சதை கொண்டவராக இருக்கலாம் அல்லது சந்தேக புத்தி அல்லது அனைவரையும் நம்பி மோசம் போவதும் இருக்கலாம். ஈஸி மணி மீது கவர்ச்சி இருக்கலாம். நண்பர்கள், பங்குதாரர்கள், காதலியாலும், மனைவியாலும் தேவையற்ற பிரச்சினைகளில் மாட்டலாம். அ அவர் நோயாளியாகவோ, தங்களை விமர்சிப்பவராகவோ இருக்கலாம். உடலில் ஆச்சரிய குறி போன்ற மச்சம் இருக்கலாம் (கோட்டின் கீழ் புள்ளி இருக்க தேவையில்லை)
தங்கள் மனதில் எப்போதும் ஏதோ கெட்டது நடக்க போகிறது என்ற எண்ணம் பதைப்பு இருந்து கொண்டே இருக்கலாம். தேவையற்ற விசயங்களில் கூட ரகசியம் காப்பவராய் இருந்து இதரரின் சந்தேகத்திற்கும் ஆளாவீர்கள்.புதிதாக அறிமுகமாகும் நபர்கள் ,வெளி நாட்டினர், வெளி நாட்டு தொடர்புள்ளவர்கள், கரிய நிறம் கொண்டவர்கள், ஓரப்பார்வை பார்ப்பவர்கள், பூனைக்கண் கொண்டவர்களால் பிரச்சினையில் மாட்டலாம்.
பரிகாரம்; கூட்டு வியாபாரம் கூடாது. இதர மதத்தவர், இதர மொழியினரிடம் எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம். எனவே துர்கை கணபதியை வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.
16. இரண்டு அ நான்கில் சனி:
பெரிய குடும்பத்தை போஷிக்க வேண்டி வரலாம். பழைய வீட்டில் அ பராமரிப்பு இல்லாத புது வீட்டில் வாழலாம். வாக்கு தவற நேரிடலாம். வாக்கு நிஷ்டுரமாக வரலாம். குடும்பத்தில் கலகம் ஏற்படலாம். லாவாதேவிகளில் சிக்கல் தாமதம் ஏற்படலாம். என்றாலும் சோர்ஸசுக்கு குறைவிராது என்ன ஒரு லொள்ஸ் என்றால் அவை கைக்கு வர பயங்கர தாமதம் ஏற்படும்
17. மூன்றாம் பாவத்தில் ராகு/கேது/சனி/சூரியன்,செவ்வாய், இருந்தால்:
சோதர சோதரிகள் (இருந்தால்) ,மனைவி, வாழ்வு கோடை நதியாகவே இருக்கும் .போக போக அவர்களின் அழகு, கவர்ச்சி ஆரோக்கியம் குறைந்து வரும்..ஜாதகருக்கு புஜம் /தோள் பகுதியில் முறிவு, காயம் ஏற்படலாம். செவிட்டுத்தன்மை கூட ஏற்படலாம்.
18.ரிஷப ராசி, ரிஷப லக்ன காரர்கள்:
தங்களுக்கு பணம், பேச்சு, குடும்பம் என்றால் வெல்லம். ஆனால் இயற்கை குரூரமானது எந்த ஜாதகர் எதை தன் உயிருக்கு சமமாய் பாவிக்கிறாரோ அந்த விசயங்களிலேயே ஆப்பு வைக்கும். எனவே மேற்சொன்ன விசயங்களில் முடிந்தவரை தங்கள் மைண்ட் செட்டை மாற்றிக்கொள்வது நல்லது. இதனால் பொருளாதார விசயத்தில் சற்று வீக் ஆனாலும் குடும்பவகையில் அபிவிருத்தி உண்டு. பேச்சை குறைக்கவும், குடும்பத்தாருடனும் சற்று நீக்கு போக்காக நடப்பது நல்லது. அதிகம் அட்டாச் மெண்ட் வேண்டாம் .
19.கடக லக்ன காரர்கள்:
தாங்கள் தங்கள் சக்திக்கு மீறி வீடுகட்டுவார்கள். பாதியில் வேலை நிற்கும். தீராத கடன் ஏற்படும் . நிம்மதி குலையும்.
20.லக்ன சூரியன்:
சூட்சும புத்தியும் இருக்கும். அந்த புத்தியை தங்கள் அகங்காரம், வறட்டு கவுரவம்,
21.லக்ன சந்திரன்:
சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை
22.மூன்றாம் பாவத்தில் சந்திரன்:
சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும்.
|