| தொழிலில் அல்லது வேலையில் பிரச்சினை என்றால். அது ஏன்? எப்போது அந்த நிலை மாறும் |
தொழிலில் அல்லது வேலையில் பிரச்சினை என்றால். அது ஏன்? எப்போது அந்த நிலை மாறும் என்பதைப் பார்க்க ஒரு ஃபார்முலா உள்ளது. 10ஆம் வீட்டை, லக்கினமாக எடுத்துக் கொண்டு, அன்றையத் தேதியில் கோச்சார சனீஷ்வரன் அந்த வீட்டிலிருந்து எங்கே இருக்கிறான் என்று பாருங்கள். அந்த வீட்டிற்கு 6, 8,12ஆம் வீடுகளில் அவன் சஞ்சாரம் செய்தால், பிரச்சினைதான். அந்த வீட்டை விட்டு நகரும் வரை பிரச்சினை தீராது. பதவி நீக்கம், பதவி பறிமுதல், பதவியிலிருந்து கீழ் நிலைக்குத் தள்ளப்படுதல், தண்ணீர் இல்லாக் காட்டிற்கு மாற்றப்படுதல் என்று எது வேண்டுமென்றாலும் நடக்கும். அந்த வீட்டிற்கு 11ல் சனி சஞ்சாரம் செய்தால், பதவி உயர்வு, பதவியில் மேன்மை, பெருமை எல்லாம் கிடைக்கும் |