Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, V24 சாப்ட்வேர்-> Rs.11,000 Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000. Share Market Financial Astrology Software Rs.19750, திருமணதகவல் மைய சாப்ட்வேர் Rs.7500, Cell Phone App Rs. 1100
Pay online
ஜோதிட சாப்ட்வேர்கள் Email Online வழியாக 30 நிமிடங்களில் கிடைக்கும் GOVINDANE Cell: 88077 01887 WhatsApp : 88709 74887 Email id : vs2008w7@gmail.com
Astrologer use Only ஜாதகம் திருமணபொருத்தம்... APP Download செய்ய click here
Free RishiAstro APP Download click here Scan RishiAstro App Download

நீங்கள் பிறந்த ஊரை தேர்வு செய்யுங்கள் துள்ளியமாக பலன் இருக்கும்
நீங்கள் பிறந்த ஊர்
Select Gender :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
Code :
Subscribe to Channel Click here to find out the code number.
Subscribe to receive notifications about new
astrological research.


தை மாதம் ராசிபலன் 14-01-2010 முதல் 12-2-2010 வரை

மேஷ ராசி

அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)

குடும்பச் செலவுகள் கூடும்!
வைராக்கியத்தோடு செயல்பட்டு வருங்காலத்தை நலமாக்கிக் கொள்ளுமமேஷ ராசி் நேயர்களே!

தை மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே ராசிநாதன் செவ்வாய் வக்ரம் பெற்றும், நீச்சம் பெற்றும் சஞ்சரிக்கிறார். இன்னும் ஐம்பத்து ஒன்பது (59) நாட்களுக்கு இதே நிலைமைதான். அதோடு, தொழில் லாபாதிபதியாக விளங்கும் சனியும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே, தொழில் செய்பவர்களுக்கு தொகை வருவதற்கு முன்னதாகவே செலவுகள் வந்து நிற்கும்.

உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாக இருக்கும். ``இக்கரைக்கு அக்கரை பச்சை' என்ற பழமொழிப்படி இந்த வேலையைக் காட்டிலும், அந்த வேலை நன்றாக இருக்குமோ என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால், எங்கு சென்றாலும் வேலைப்பளு கூடுதலாகவே இருக்கும். எனவே, இருக்கும் இடத்திலேயே இருப்பது நல்லது.

வீடு மாற்றங்களும், வீட்டு பராமரிப்புச் செலவுகளும் ஏற்படும் மாதமிது. அலைச்சல் கூடி ஆதாயம் குறையும் இந்த நேரத்தில், அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்க அங்காரகனை வழிபட்டு வருவது நல்லது. குரு லாபஸ் தானத்தில் இருப்பதால், பணக்கவலை ஏற்படாது. மூன்றில் உள்ள கேது சகோதர வழியில் பிரச்சினைகளைச் சந்திக்க வைக்கலாம். அவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் இனிய பலன்களை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

மகர சுக்ரனால் வரும் மகிழ்ச்சி!

ஜனவரி 15-ந் தேதி மகர ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகிறார். 2, 7-க்கு அதிபதியான சுக்ரன் 10-ல் சஞ்சரிக்கும் பொழுது பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் பங்குதாரர்கள் விலகினாலும் புதியவர்கள் வந்திணைவர். எனவே, நடக்கும் தொழிலில் இருந்த தடை அகல, புதியவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண் தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு செலுத்துவது நல்லது. பெண் வழி பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். தங்கம், வெள்ளி போன்றவைகள் மற்றும் பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைத்து மகிழும் வாய்ப்பு கிட்டும்.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

புதன் பிப்ரவரி 2-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். 3, 6-க்கு அதிபதி 10-ல் சஞ்சரிப்பதால் தொழிலுக்காக அரசு அல்லது தனியார் துறையில் கேட்ட கடன்உதவி கிடைத்து மகிழ்வீர்கள். எதிரிகள் விலகும் நேரமிது. மதிப்பும், மரியாதையும் உயரும். உடல் நலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும். உற்சாகமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பம்பரமாய் சுழன்று பணிபுரிவீர்கள்.

எதிர்பாராத தனலாபம் கிடைக்கும் நேரம்!

பிப்ரவரி 7-ந் தேதி கும்ப ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகிறார். இதன் விளைவாக, வளர்ச்சி கூடும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வசதி வாய்ப்புகள் வந்து சேரும். நட்பால் நல்ல காரியமொன்று நடைபெறும்.

மகிழ்ச்சி தரும் வழிபாடு

இம்மாதம் இனிய மாதமாக அமைய அருகில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவது நல்லது. செவ்வாய் விரதம் செழிப்பை வழங்கும்.

பணம் வரும் நாட்கள்:

ஜனவரி 14,15,18,19,26,27,30,31. பிப்ரவரி 10,11, 12.

கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்:

ஜனவரி 21, 22. பிப்ரவரி 3, 4, 6, 7, 8, 9.

எண்ணங்களை நிறைவேற்ற வைக்கும் எண்கள்: 1, 5.

பொன்னான வாய்ப்புகளைக் கொடுக்கும் வண்ணங்கள்:- நீலம், பச்சை.

--------------------------------------------------------------------------------

ரிஷப ராசி

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீர்ஷம் 1, 2 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்)

இடமாற்றம் இனிய மாற்றம் தரும்!
வேகத்தோடும், விவேகத்தோடும் செயல்பட்டு வெற்றி காணும் ரிஷப ராசி நேயர்களே!

தை மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே மாற்றங்கள் வருவதற்கான சூழ்நிலை தென்படுகிறது.

விரயாதிபதி வக்ரம் பெறுவது யோகம் தான். அதே நேரத்தில் களத்திர ஸ்தானாதிபதியும் வக்ரம் பெறுவதால் களத்திரத்துடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அப்பொழுது தான் குடும்ப ஒற்றுமை கூடும்.

அஷ்டம ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் வலுப்பெறுவதால் எதிர்பார்த்த மாற்றம் வருமா? வராதா? என்ற கவலை மேலோங்கும். தெசா புத்தி பலம் பெற்றவர்கள் பத்தாமிடத்தில் இருக்கும் கேதுவைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

வீடு மாற்றம், இட மாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம் என்று வரும் மாற்றங்களை ஆராய்ந்து தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது. உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்க விட்டுக் கொடுத்துச் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். யோகாதிபதி சனி வக்ரம் பெறுவதால், சனிக்குரிய வழிபாடுகளை முறையாக மேற்கொள்வதோடு, அனுமன் வழிபாட்டையும், நந்தி வழிபாட்டையும் மேற்கொண்டால் இனிய பலன்கள் எந்த நாளும் நடைபெறும்.

ஆடை-ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும் நேரம்!

ஜனவரி 15-ந் தேதி மகர ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகிறார். ராசிநாதன் ஒன்பதில் சஞ்சரிக்கும் பொழுது, முன்னோர் வழி சொத்துக்களில் முறையான பலன் கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாகும். பங்காளிப்பகை மாறும். நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு ஒருசிலருக்கு கிட்டும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். பெண் வழியில் எதிர்பாராத வரவு ஒன்று வந்து சேரும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் எதிர்பார்த்தபடியே வந்து சேரும்.

மகர புதனின் சஞ்சாரம்!

பிப்ரவரி 2-ந் தேதி முதல் மகர ராசியில் புதன் சஞ்சரிக்கப் போகிறார். 2, 5-க்கு அதிபதி 9-ல் சஞ்சரிக்கும் பொழுது, வரவு திருப்தி தரும். வளர்ச்சி கூடும். தடைபட்ட காரியங்கள் தானாக நடைபெறும். காதணி விழாக்கள் முதல் கடை திறப்பு விழாக்கள் வரை கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். விஷ்ணு வழிபாடு இக்காலத்தில் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும்.

கும்ப சுக்ரனின் சஞ்சாரம்!

பிப்ரவரி 7-ந் தேதி கும்ப ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகிறார். ராசிநாதன் 10-ல் சஞ்சரிக்கும் பொழுது செயல்பாடுகளில் தீவிரம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு கிட்டும். சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது நடைபெறத் தொடங்கும். நண்பர்கள் வருமானத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். குருவின் பார்வை பலம் கூடுவதால், திருமண முயற்சி வெற்றி பெறும்.

மகிழ்ச்சி தரும் வழிபாடு

இம்மாதம் எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்க நந்தீஸ்வரர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பிரதோஷ விரதம் பெருமை சேர்க்கும்.

பணம் வரும் நாட்கள்:

ஜனவரி 17, 18, 21, 22, 28, 29. பிப்ரவரி 1, 2, 4, 5.

கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்:

ஜனவரி 14, 15, 23, 24. பிப்ரவரி 5, 6, 10, 11, 12.

எண்ணங்களை நிறைவேற்ற வைக்கும் எண்கள்: 3, 6.

பொன்னான வாய்ப்புகளைக் கொடுக்கும் வண்ணங்கள்: மஞ்சள், வெள்ளை.

--------------------------------------------------------------------------------

மிதுன ராசி

மிருகசீர்ஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள் : க, கா, கி, கு, ஞ, ச, கே, கோ உள்ளவர்களுக்கும்)

சுபச் செய்திகள் வந்து சேரும்!
நினைத்ததை நினைத்த நேரத்தில் முடிக்க வேண்டுமென்று சொல்லும் மிதுன ராசி நேயர்களே!

தை மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாதத் தொடக்கத்திலேயே குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே, மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறத் தொடங்கும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். உடனுக்குடன் காரியங்கள் முடியவில்லையே என்ற கவலை இனி அகலும். வருமானத்தை உயர்த்த புதுமுயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

செவ்வாய் வக்ரம் பெறுவது யோகம்தான். ஆறுக்கு அதிபதி வக்ரம் பெறுவதால், எதிர்ப்புகள் அகலும். எதிரிகள் உதிரிகளாவார்கள். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மனை கட்டுவதில் இருந்து மங்கல காரியங்கள் வரை ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும். சனி வக்ரம் பெறுவதும் நன்மைதான். அஷ்டமாதிபதி வக்ரம் பெறுவதால், மூடிக்கிடந்த தொழிலை இனி திறப்புவிழா செய்து நடத்தத் தொடங்குவீர்கள்.

இழப்புகளை ஈடுசெய்ய வைக்கும் இந்த சனி, உங்களுக்கு யோகத்தையே தரும். ஆயினும் அர்த்தாஷ்டமச் சனியாகவும் அது விளங்குவதால், சனி புத்தி, புதன் புத்தி நடப்பவர்களுக்கு சிறுசிறு உடல்நிலைத் தொல்லைகள் ஏற்பட்டு அகலும். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும். சனிக்கிழமை தோறும் விநாயகப் பெருமானையும், சனீஸ்வரரையும் விடாது வழிபட்டு வந்தால், இனிக்கும் காரியங்கள் ஏராளமாக நடைபெறும்.

மகிழ்ச்சியைக் கூட்டும் மகரச் சுக்கிரன்!

ஜனவரி 15-ந் தேதி மகர ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகிறார். 5, 12-க்கு அதிபதியான சுக்ரன் எட்டில் சஞ்சரிப்பது நன்மைதான். மறைவிடத்திற்கு அதிபதிகள் மறைவிடத்தில் ஒன்றுகூடி சஞ்சரித்தால் விபரீத ராஜயோகத்தை உருவாக்கும். அந்த அடிப்படையில் சூரியன், சுக்ரன் சேர்க்கை சுகங்களையும், சந்தோஷங்களையும் வழங்கும். பயணங்களை அதிகரிக்க வைக்கும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். அடுத்தவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகையும் வந்து சேரும்.

ராசிநாதனின் பெயர்ச்சி காலம்!

ராசிநாதன் புதன் பிப்ரவரி 2-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். மறைந்த புதன் நிறைந்த தனலாபத்தைக் கொடுக்கும். எனவே தொழில் வளம் கூடும். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல் வந்து சேரும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வளர்ச்சி கூடும் இந்த நேரத்தில் புதிய தொழில் தொடங்கும் திட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

உதிரி வருமானங்கள் பெருகும் நேரம்!

பிப்ரவரி 7-ந் தேதி சுக்ரன் கும்ப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இதன் விளைவாக, பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் பெருகும். பூர்வீக சொத்து விற்பனையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தந்தை வழி உடன்பிறப்புகளால் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். இடமாற்றங்கள், இனிய மாற்றங்களாக அமையும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.

மகிழ்ச்சி தரும் வழிபாடு

இம்மாதம் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால், வியக்கும் விதத்தில் வாழ்க்கை அமையும்.

பணம் வரும் நாட்கள்:

ஜனவரி 19, 20, 23, 24, 30, 31. பிப்ரவரி 3, 4.

கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்:

ஜனவரி 17, 18, 25, 26. பிப்ரவரி 6, 7, 8, 9.

எண்ணங்களை நிறைவேற்ற வைக்கும் எண்கள்: 2, 7.

பொன்னான வாய்ப்புகளைக் கொடுக்கும் வண்ணங்கள்: கிரே, ஆரஞ்சு.

--------------------------------------------------------------------------------

கடக ராசி

புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ஹி, ஹீ, ஹே, ஹோ, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்)

சொத்துச் சேர்க்கைக்கு அஸ்திவாரம் இடுவீர்கள்!
எத்தனைத் துறைகள் இருந்தாலும், பொதுநலத்துறையே தனக்குப் பொருத்தமானது என்று தேர்ந்தெடுத்து செயல்படும் கடக ராசி நேயர்களே!

தை மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, நான்கு கிரகங்கள் சாதகமான நிலையிலும், ஐந்து கிரகங்கள் பாதகமான நிலையிலும் சஞ்சாரம் செய்கின்றன. எனவே, வரவும்-செலவும் சமமாக இருக்கும். வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வரும். ஒரு தொகை செலவழிந்த பிறகே மற்றொரு தொகை உங்கள் கரங்களுக்கு வந்து சேரும். ஒரு சிலருக்கு திடீர் இடமாற்றங்கள், ஊர்மாற்றங்கள், உத்தியோக மாற்றங்கள் உருவாகலாம். வரும் மாற்றங்களை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் சுய ஜாதகத்தைப் பொருத்துதான் அமையும்.

கேது திசை, சுக்ர திசை, கேது புத்தி, சுக்ர புத்தி நடப்பவர்கள் கூடுதல் விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது. அது மட்டுமல்லாமல், அஷ்டமாதிபதி சனியும் வக்ரம் பெறுகிறார். சனி சப்தமாதிபதியாகவும் வருவதால், வாழ்க்கைத்துணை வழியே பிரச்சினைகள் தோன்றி மறையலாம். இல்லற வாழ்க்கைக்கு வரும் இடைïறுகளைத் தவிர்க்க எல்லோரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் தேவைகள் கூடும். கொடுக்கல்-வாங்கல்கள் ஸ்தம்பித்து நிற்கலாம். என்ன இருந்தாலும், யோகாதிபதி செவ்வாய் வக்ரம் பெறக் கூடாது. அதுவும் இந்த மாதத்தில் வக்ரம் பெறுகிறது.

எனவே, உடன் பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்களா? என்பது சந்தேகம்தான். பலமுறை பஞ்சாயத்து வைத்தும் முடியவில்லையே என கவலைப்படுவீர்கள். ஆனந்தம் வருவதற்கான வழியை அங்காரக வழிபாடு அமைத்துக் கொடுக்கும்.

பயணங்கள் அதிகரிக்கும் நேரம்!

சுக்ரன் ஜனவரி 15-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். 4, 11-க்கு அதிபதி 7-ல் சஞ்சரிக்கும் பொழுது பயணங்கள் அதிகரிக்கும். பெண்வழிப் பிரச்சினைகள் தலைதூக்கி மறையும். அந்நிய தேசத்திலிருந்து அனு

கூலமான செய்தி வந்து சேரும். வாகன மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய முன்வருவீர்கள். வீடு கட்டும் முயற்சியும் தாமதப்பட்டு தொடங்கும். அம்பிகை வழிபாட்டில் ஆர்வம் காட்டினால் இன்பங்களை மட்டுமே இக்காலத்தில் சந்திக்க இயலும்.

திருமண முயற்சி கைகூடும் நேரம்!

பிப்ரவரி 2-ந் தேதி மகர ராசியில் புதன் சஞ்சரிக்கப் போகிறார். குடும்ப ஸ்தானாதிபதியுடன் மாமன் காரகன் புதன் இணைந்து சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, திருமண வாய்ப்புகள் கைகூடும். வரன்கள் வாயில் தேடிவந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.

வருமானம் திருப்தி தரும் நேரம்!

பிப்ரவரி 7-ந் தேதி கும்ப ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகிறார். இது உங்களுக்கு யோகம்தான். வருமானம் திருப்தி தரும். தொழில் வளர்ச்சியில் இருந்த இடைïறுகள் விலகும். எதிரிகள் சரணடைவர். இல்லம் தேடி நல்ல செய்தி வந்து சேரும்.

மகிழ்ச்சி தரும் வழிபாடு

இம்மாதம் எல்லா நாட்களும் இனிய நாட்களாக மாற பவுர்ணமி கிரிவல வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

பணம் வரும் நாட்கள்:

ஜனவரி 21, 22, 26, 27. பிப்ரவரி 1, 2, 4, 5.

கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்:

ஜனவரி 14, 15, 18, 19, 28, 29. பிப்ரவரி 10, 11, 12.

எண்ணங்களை நிறைவேற்ற வைக்கும் எண்கள்: 2, 8.

பொன்னான வாய்ப்புகளைக் கொடுக்கும் வண்ணங்கள்: நீலம், வைலட்.

--------------------------------------------------------------------------------

சிம்ம ராசி

மகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்)

கனவுகள் நனவாகும்!
எதற்கும் அஞ்சாத குணத்தைப் பெற்ற சிம்ம ராசி நேயர்களே!

தை மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, தடைகள் அனைத்தும் அகலும் விதத்திலேயே கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இதுவரை நீங்கள் பொறுமையாக இருந்தது ஆச்சர்யம்தான். ஏழரைச்சனி உங்களுக்கு பலவிதமான இன்னல்களைக் கொடுத்து முடிவில் வெற்றியைக் கொடுக்கும். செலவுகள் அதிகரித்தாலும் முன்னதாகவே வரவு வந்து சேரும். சிக்கனத்தை திடீரெனக் கையாளும் நீங்கள், இம்மாதம் தாராளமாக செலவு செய்ய முன்வருவீர்கள். காரணம், பணப்புழக்கம் அதிகரிக்கும் சூழ்நிலைதான்.

மாதத் தொடக்கத்திலேயே குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. குருவின் பார்வை இருந்தால் போதும்; குழப்பங்கள் தீர்ந்து குதூகலம் சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். செவ்வாய் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. அதேபோல, சனியின் வக்ரமும் அவ்வளவு நல்லதல்ல. இந்த வக்ர கிரகங்களின் ஆதிக்கம் உங்களுக்கு வளர்ச்சியைக் கொடுக்க வேண்டுமானால், நீங்கள் அக்கறை காட்ட வேண்டியதெல்லாம் ஆலய வழிபாட்டில்தான்.

சுயஜாதகம் பலமாக இருந்தால் கவலைப்பட தேவையில்லை. இல்லையேல், அது இயங்கும் நேரம் வரை பொறுத்திருக்க வேண்டும். பொதுவாக, ஆறுக்கு அதிபதியாக சனி விளங்குவதால், எதிரிகளின் தொல்லை அகலுமே தவிர, இல்லத்தில் உள்ளவர்களின் பகை மாறாது. எனவே, அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலமே ஆதாயத்தை நீங்கள் விரைவில் அடைய முடியும்.

மகிழ்ச்சியை வழங்கும் மகரச் சுக்ரன்!

ஜனவரி 15-ந் தேதி மகர ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகிறார். 3, 10-க்கு அதிபதியான சுக்ரன் ஆறில் சஞ்சரிக்கும் பொழுது, புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். கடன்சுமை குறைவதற்கான வழிபிறக்கும். கூட்டாளிகளில் ஒருசிலர் விலகலாம். அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. புதியவர்கள் வந்திணைவர்.

கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும் நேரம்!

பிப்ரவரி 2-ந் தேதி மகர ராசியில் புதன் சஞ்சரிக்கப் போகிறார். தனலாபாதிபதி ராசிநாதனுடன் கூடும் இந்த நேரத்தில் வருமானம் பெருக வழிபிறக்கும். உதிரி வருமானங்கள் வந்து உற்சாகப்படுத்தும். வாங்கிய கடனை கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கும்ப சுக்ரனின் சஞ்சாரம்!

பிப்ரவரி 7-ந் தேதி கும்ப ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகிறார். அசுர குருவும், தேவ குருவும் ஒன்றாக இணைந்து சஞ்சரிக்கும் பொழுது, திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். தெய்வ தரிசனங்களும் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சர்யப்படுவர். வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவீர்கள்.

மகிழ்ச்சி தரும் வழிபாடு

இம்மாதம் மனஅமைதி கிடைக்க அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

பணம் வரும் நாட்கள்:

ஜனவரி 14,15,23,24,28,29. பிப்ரவரி 3, 4, 6, 7, 8, 9.

கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்:

ஜனவரி 17, 18, 21, 22, 30, 31. பிப்ரவரி 1, 2.

எண்ணங்களை நிறைவேற்ற வைக்கும் எண்கள்: 5, 6.

பொன்னான வாய்ப்புகளைக் கொடுக்கும் வண்ணங்கள்: மஞ்சள், கருப்பு.

--------------------------------------------------------------------------------

கன்னி ராசி

உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)

ஆரோக்கியத்தில் அக்கறை தேவை!
அமைதியாக இருந்துகொண்டே அரும்பணிகள் பல செய்யும் கன்னி ராசி நேயர்களே!

தை மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ஜென்மச் சனியின் வக்ரமும், சுகஸ்தா னத்தில் சஞ்சரிக்கும் ராகுவின் ஆதிக்கமும் ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்களை உருவாக்கும். எனவே, அடிக்கடி மருத்துவ ஆலோசனை பெறும் சூழ்நிலை அமையும். சென்ற மாதத்தில் துரிதமாக நடைபெற்ற பணிகள் இம்மாதத்தில் ஸ்தம்பித்து நிற்கலாம். உறவினர்களிடம் பகை உருவாகாமல் இருக்கவும், உடன் இருப்பவர்களின் மனக்கசப்பிற்கு ஆளாகாமல் இருக்கவும் சனீஸ்வர வழிபாட்டை முறையாக மேற்கொள்வது நல்லது.

மாதத் தொடக்கத்திலேயே செவ்வாய் வக்ரம் பெறுகிறார். அது யோகம்தான். 3, 8-க்கு அதிபதி வக்ரம் பெறுவதால் உடன்பிறப்புகள் வழியே ஒரு நல்ல செய்தி வந்து சேரும். கடன் சுமை குறையும். கல்வி சம்பந்தமாகவும், கலைத்துறை சம்பந்தமாகவும் எடுத்த முயற்சி கைகூடும். சூரியன் 5-ல் சஞ்சரிப்பதால் பிள்ளைகள் வழியில் சுபவிரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களைக் கொடுத்து விட்டு புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ராசிக்கு, பதினொன்றுக்கு அதிபதியான சந்திரன் 4-ல் சஞ்சரிப்பதால், தாய்வழி ஆதரவு பெருகும். கட்டிடப்பணி தொடரும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து காரியங்களை முடித்துக் கொடுப்பர். ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.

சுபகாரியப் பேச்சுக்கள் முடிவடையும் நேரம்!

ஜனவரி 15-ந் தேதி மகர ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகிறார். இதன் விளைவாக, நீண்ட நாட்களாகப் பேசியும் முடிவடையாத சுபகாரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். பிள்ளைகள் வழியில் செலவிடும் சூழ்நிலை உருவாகும். பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். கடல் கடந்து செல்லும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்ளும் முன்னதாக சுயஜாதகத்தை ஒருமுறை புரட்டிப் பாருங்கள். தெசா புத்தி வலுப்பெற்றிருந்தால் பயணத்தை மேற்கொள்ளலாம். இல்லையேல், தாய் நாட்டிலேயே இருப்பது உத்தமம்.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

பிப்ரவரி 2-ந் தேதி மகர ராசியில் புதன் சஞ்சரிக்கப் போகிறார். இதன் விளைவாக, புத-ஆதித்ய யோகம் செயல்படுகிறது. எனவே, கல்வி சம்பந்தமாகவும், கடைதிறப்பு விழா சம்பந்தமாகவும் எடுத்த முயற்சி வெற்றிபெறும். கூட்டாளிகள் உங்களை விட்டு விலகலாம். புதிய கூட்டாளிகள் வந்திணைவர். வங்கிச் சேமிப்புகள் கரையாமலிருக்க புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். உடல் ஆரோக்கியத்திற்காக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உருவாகும்.

கும்ப சுக்ரனின் சஞ்சாரம்!

பிப்ரவரி 7-ந் தேதி கும்ப ராசியில் குருவும், சுக்ரனும் ஒன்று கூடுகிறார்கள். இதன் விளைவாக, இடம், பூமி சேர்க்கைகள் உருவாகும். வாகனம் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. தாய்வழி ஆதரவு பெருகும். தக்கசமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். பெண் தெய்வ வழிபாட்டில் பிரியம் செலுத்தினால் பிரச்சினைகள் எளிதில் முடிவடையும்.

மகிழ்ச்சி தரும் வழிபாடு

இம்மாதம் சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபட்டு வந்தால், பணிகளில் ஏற்பட்ட தொய்வு அகலும்.

பணம் வரும் நாட்கள்:

ஜனவரி 14, 15, 25, 26, 30, 31. பிப்ரவரி 4, 5, 11, 12.

கவனமாக இருக்கவேண்டிய நாட்கள்:

ஜனவரி 17, 18, 23, 24. பிப்ரவரி 1, 2.

எண்ணங்களை நிறைவேற்ற வைக்கும் எண்கள்: 5, 6.

பொன்னான வாய்ப்புகளைக் கொடுக்கும் வண்ணங்கள்: ஆரஞ்சு, சிவப்பு.

--------------------------------------------------------------------------------

துலாம் ராசி

சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரி, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்)

யோசித்துச் செயல்பட்டால் யோகம்!
எதிர்காலச் சிந்தனையிலேயே எப்பொழுதும் மூழ்கி இருக்கும் துலாம் ராசி நேயர்களே!

தை மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, தக்க விதத்தில் கிரகங்கள் சஞ்சரித்தாலும், ஏழரைச்சனி அல்லவா? இடம்பிடிக்கிறது. எனவே, உங்கள் கூட்டு முயற்சிகளில் மாற்றம் ஏற்படும். கூடுதல் விழிப்புணர்ச்சியோடு இருந்தாலும், விரயங்கள் அதிகரிக்கிறதே என்று நினைப்பீர்கள். குடும்பச் செலவுகள் கூடும். பணத்தேவைகள் அப்போதைக்கு அப்போது பூர்த்தியானாலும், மனநிம்மதி ஏற்படாது.

தனாதிபதி வக்ரம் பெற்றுவிட்டார். அதோடு, சுகாதிபதியும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே, சுகக்கேடுகள், மருத்துவச் செலவுகள் உருவாகலாம். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்தினால் ஆரோக்கியம் சீராக அமையும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிக்கு அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. சனீஸ்வர பகவான் வழிபாடும், முருகப்பெருமான் வழிபாடும் உங்கள் வாழ்க்கைப் பாதையை சீராக்கிக் கொடுக்கும்.

தனாதிபதி வக்ரம் பெறுவதால், வாங்கல்-கொடுக்கல்களில் கவனம் தேவை. வாங்கிய சொத்துக்களை விற்க நேரிடலாம். யாரிடமும் பொறுப்புகளை ஒப்படைத்தால், அது மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். இருந்தாலும், சனியின் ஆதிக்கம் வலுவடையும் இந்த நேரத்தில் மந்தன் வழிபாட்டை முறையாகச் செய்வதோடு, காகத்திற்கும் எள் கலந்த சோறு வைப்பது நல்லது.

மகர சுக்ரனின் சஞ்சாரம்!

ஜனவரி 15-ந் தேதி மகரத்தில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகிறார். சுகாதிபதி சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் தொழில் வளம் மேலோங்கும். தொகை கேட்ட இடத்தில் இருந்து கிடைக்கும். வீடு கட்டிக் குடியேற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும் இந்த நேரத்தில் நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

விரயாதிபதியின் பெயர்ச்சி!

பிப்ரவரி 2-ந் தேதி மகர ராசியில் விரயாதிபதியான புதன் சஞ்சரிக்கப் போகிறார். இதன் விளைவாக மருத்துவச் செலவுகள் கூடும். பொருத்தம் பார்த்துச் செய்த திருமணத்தில் கூட வருத்தப்படத்தக்க சம்பவங்களைச் சந்திக்க நேரிடலாம். தந்தை வழி உறவினர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. கால்நடை வளர்ப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்தினால்தான் ஆதாயத்தைச் சந்திக்க இயலும்.

பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும்!

பிப்ரவரி 7-ந் தேதி ராசிநாதன் சுக்ரன் கும்ப ராசியில் உள்ள குருவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். இதன்விளைவாக, பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும். அவர்களின் உத்தியோக வாய்ப்புகளால் உதிரி வருமானங்கள் உங்களுக்கு கிடைக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

மகிழ்ச்சி தரும் வழிபாடு

இம்மாதம் நவகிரக வழிபாட்டை முறையாக செய்தால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும்.

பணம் வரும் நாட்கள்:

ஜனவரி 17, 18, 28, 29. பிப்ரவரி 1, 2, 6, 7, 8.

கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்:

ஜனவரி 21, 22, 25, 26. பிப்ரவரி 3, 4, 5.

எண்ணங்களை நிறைவேற்ற வைக்கும் என்கள்: 1, 7.

பொன்னான வாய்ப்புகளைக் கொடுக்கும் வண்ணங்கள்: வைலட், பச்சை.

--------------------------------------------------------------------------------

விருச்சிக ராசி

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந, நி, நே, நோ, ய, யி, யு உள்ளவர்களுக்கும்)

தொழில் வளர்ச்சி மேலோங்கும் நேரம்!
வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!

தை மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, தன ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் பலம் பெற்று விளங்குவதால் வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். பெருமைக்குரிய சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். பிறருக்காக பாடுபட்டதற்கேற்ற பலன்களும் கிடைக்கும்.

குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வளம் மேலோங்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். புத-சுக்ர யோகத்தால் எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். பூமியால் வருமானம் வந்து சேரலாம். புதிய சொத்துக்களை வாங்கிச் சேர்க்கும் வாய்ப்பு கிட்டும். சூரிய பலத்தால் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும்.

ராசிநாதன் செவ்வாய் நீச்சம் பெறுவதாலும், லாப ஸ்தானத்தில் சனி வக்ரம் பெறுவதாலும் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்தால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும். கூட்டாளிகளிடம் மாதக்கடைசியில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் வரும் லாபங்களை அப்போதைக்கு அப்போது பிரித்து எடுத்துக் கொள்வது திருப்தி தரும். ஆனைமுகப்பெருமான் வழிபாடும், அனுமன் வழிபாடும் வாழ்வை வளம்பெறச் செய்யும்.

உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நேரம்!

ஜனவரி 15-ந் தேதி மகர ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகிறார். இதன் விளைவாக, உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ஆடை, ஆபரணங்களை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசு வழியில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சலுகைகள் இப்பொழுது கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். விருந்து, விழாக்களில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும். திருமண வாய்ப்புகள் தள்ளிப்போகின்றதே என்ற கவலை இனி அகலும். மனஸ்தாபங்கள் மாறி மகிழ்ச்சி அதிகரிக்கும் இந்த நேரத்தில் வசதி, வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள்.

திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்!

பிப்ரவரி 2-ந் தேதி மகர ராசியில் புதன் சஞ்சரிக்கப் போகிறார். லாபாதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் புதன் விளங்குகிறார். எட்டுக்கு அதிபதி மூன்றில் சஞ்சரிக்கும் பொழுது, திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். திறமை மிக்கவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருந்து காரியங்களை முடித்துக் கொடுக்க முன்வருவர். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

கும்ப ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கும் நேரம்!

கும்ப ராசியில் பிப்ரவரி 7-ந் தேதி முதல் சுக்ரன் சஞ்சரிக்கப் போகிறார். 7, 12-க்கு அதிபதியான சுக்ரன் நான்கில் சஞ்சரிக்கும் பொழுது, பயணங்கள் அதிகரிக்கும். வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

மகிழ்ச்சி தரும் வழிபாடு

இம்மாதம் விநாயகர் வழிபாடும், வேலவர், வள்ளி, தெய்வானை வழிபாடும் வெற்றியை வழங்கும்.

பணம் வரும் நாட்கள்:

ஜனவரி 14,15,16,19,20,29,30,31. பிப்ரவரி 3,4,10,11,12.

கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்:

ஜனவரி 23, 24, 28, 29. பிப்ரவரி 5, 6.

எண்ணங்களை நிறைவேற்ற வைக்கும் எண்கள்: 7, 8.

பொன்னான வாய்ப்புகளைக் கொடுக்கும் வண்ணங்கள்: வைலட், சிவப்பு.

--------------------------------------------------------------------------------

தனுசு ராசி

மூலம், பூராடம், உத்ராடம், 1-ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள் யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கும்)

யோகங்கள் ஆரம்பமாகும்!
அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்லி எடுத்த காரியங்களை வெற்றிபெற வைக்கும் தனுசு ராசி நேயர்களே!

தை மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, நான்கு கிரகங்கள் உங்கள் ராசியிலேயே சஞ்சரித்து கூட்டுக்கிரக யோகத்தை உருவாக்குகிறார்கள். அதேநேரத்தில் ராசிநாதன் குரு சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே, கூட்டாளிகளால் நன்மை கிடைக்கும். கூடுதல் பொறுப்புகள் உங்களுக்கு வந்து சேரும். ஆற்றல் மிக்க நீங்கள், ஆதரவுக்கரம் நீட்டுவோரின் எண்ணிக்கை குறைகிறதே என்று கவலைப்பட்ட நிலை இனி மாறும்.

உங்களுக்கு உறவினர்களும், நண்பர்களும் கைகொடுத்து உதவ முன்வரும் மாதமிது. விரயாதிபதி நீச்சம் பெறுவதால், விரயங்கள் குறையும். விரும்பிய அளவிற்கு சேமிப்புகள் உயரும். தனாதிபதி சனியும் நீச்சம் பெறுகிறார். எனவே, சனீஸ்வர வழிபாட்டை நீங்கள் முறையாக மேற்கொண்டால் தனவரவிலும் தடை ஏற்படாது; பணப்பொறுப்புகள் சொல்வதிலும் சிக்கல்கள் உருவாகாது.

5-க்கு அதிபதி செவ்வாய் வக்ரம் பெறுவதால், பிள்ளைகளால் பிரச்சினைகள் உருவாகலாம். குழந்தைகளின் நலன் கருதி பெரும் தொகையொன்றைச் செலவிடுவீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். லாப நோக்கத்தோடு பழகியவர்கள் உங்களை விட்டு விலகுவர். எதிர்பார்ப்புகள் நிறைவேற நீங்கள் எதிரில் இருப்பவர்களையும், அருகில் இருப்பவர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. கட்டிடம் கட்டும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

மகரச் சுக்ரனால் மகிழ்ச்சி கூடும்!

ஜனவரி 15-ந் தேதி மகர ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகிறார். இதன் விளைவாக, பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் இப்பொழுது கிடைக்கும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வருவீர்கள். ஆடை, ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். வெளிநாட்டு முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். தொழில் மாற்றச் சிந்தனைகளை சில மாதங்கள் தள்ளி வைப்பது நல்லது.

மகர புதனின் சஞ்சாரம்!

பிப்ரவரி 2-ந் தேதி மகர ராசியில் புதன் சஞ்சரிக்கப் போகிறார். இதன் விளைவாக, வாழ்க்கைத் துணையால் வந்த பிரச்சினைகள் மாறும். வருமானம் திருப்தி தரும். விவாகம் சம்பந்தப்பட்ட வகையில் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.

வழக்குகளில் வெற்றி கிடைக்கும் நேரம்!

பிப்ரவரி 7-ந் தேதி கும்ப ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகிறார். 6-க்கு அதிபதி 3-ல் சஞ்சரிக்கும் பொழுது, கடன்சுமை குறையும். கவலைகள் தீரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வருமானம் போதுமானதாக வந்து சேரும். இழப்புகளை ஈடுசெய்ய இணைந்திருக்கும் நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் இந்த நேரத்தில் உதிரி வருமானங்களும் பெருகும். குரு, சுக்ர சேர்க்கையால் திடீர் மாற்றங்களும், யோகங்களும் வந்து சேரும்.

மகிழ்ச்சி தரும் வழிபாடு

இம்மாதம் குருதெட்சிணாமூர்த்தியை வழிபட்டு குதூகலம் நிறைந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

பணம் வரும் நாட்கள்:

ஜனவரி 17, 18, 21, 22. பிப்ரவரி 1, 2, 4, 5.

கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்:

ஜனவரி 14, 15, 25, 26. பிப்ரவரி 6, 7, 8, 9.

எண்ணங்களை நிறைவேற்ற வைக்கும் எண்கள்: 8, 9.

பொன்னான வாய்ப்புகளைக் கொடுக்கும் வண்ணங்கள்: கருநீலம், ரோஸ்.

--------------------------------------------------------------------------------

மகர ராசி

உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜீ, ஜி, ஜே, ஜோ, கா, க, கி உள்ளவர்களுக்கும்)

விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சி தேவை!
மற்றவர்கள் போற்றும் அளவிற்கு மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று விரும்பும் மகர ராசி நேயர்களே!

தை மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ராசிநாதன் சனி வக்ரம் பெறுகிறார். ராசியைப் பார்க்கும் செவ்வாயும் வக்ரமாக இருக்கிறார். சுக லாபாதிபதியான செவ்வாய் வக்ரம் பெறுவதால், ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். அஷ்டமாதிபதி ராசியிலேயே சஞ்சரிப்பதால் விழிப்புணர்ச்சியோடு செயல்பட்டால்தான் விரயங்களில் இருந்து தப்பிக்க இயலும்.

விரய ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் சஞ்சரிப்பதால், குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை வாங்கி மகிழும் சூழ்நிலை உருவாகும். சுப விரயங்களாக அமைத்துக் கொள்ள விலை உயர்ந்த பொருட்களான கிரைண்டர், மிக்ஸி போன்றவைகளையும் வாங்கலாம். தாய் ஸ்தானாதிபதி செவ்வாய் வக்ரம் பெறுவதால், தாயின் உடல்நலம் கருதி செலவிடும் சூழ்நிலை உண்டு.

விரயாதிபதி குரு தனஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், விரயத்திற்கேற்ற வரவு வந்து கொண்டே இருக்கும். குடியிருக்கும் வீட்டால் பிரச்சினைகள் உருவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. செவ்வாய், சனி வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் செல்வநிலை உயரும்.

மகரச் சுக்ரனின் சஞ்சாரம்!

மகரத்தில் சுக்ரன் சஞ்சரிப்பது யோகம்தான். 5, 10-க்கு அதிபதியான சுக்ரன் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் பெருகும். குழந்தைகளின் நலன் கருதி வேலை, தொழில் என்று எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பொழுது ஒருமுறை யோசித்துச் செய்வது நல்லது. காரணம், ராசிநாதன் வக்ர கதியில் இயங்குகிறார். கூட்டு முயற்சிகளில் கிடைக்கும் லாபத்தை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது நல்லது.

மகர புதனின் சஞ்சாரம்!

பிப்ரவரி 2-ந் தேதி உங்கள் ராசிக்கு 6, 9-க்கு அதிபதியான புதன் ராசியிலேயே உலாவரும் பொழுது, உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் பாதகம் செய்தவர்கள் இனி சாதகம் செய்யத் தொடங்குவர். அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொண்டு வருவீர்கள். கல்யாணம், காதுகுத்து, கடைதிறப்பு விழா என்று விரயங்கள் வந்து கொண்டேயிருக்கும். இருந்தாலும், கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

கும்ப சுக்ரனின் சஞ்சாரம்!

பிப்ரவரி 7-ந் தேதி கும்ப ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகிறார். இது யோகம் தான். எனவே, மாதக் கடைசி மகிழ்ச்சியாக இருக்கும். மனதிற்குப் பிடித்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். செல்வாக்கு அதிகரிக்கும். வருங்காலத்தைப் பற்றிய பயம் நீங்கும். சுக்ர வழிபாட்டை முறையாக மேற்கொண்டால், சுகங்களும், சந்தோஷங்களும் எதிர்பார்த்தபடியே வந்து சேரும்.

மகிழ்ச்சி தரும் வழிபாடு

சிவன் வழிபாடு இம்மாதம் சிறப்பினை வழங்கும்.

பணம் வரும் நாட்கள்:

ஜனவரி 18, 19, 23, 24. பிப்ரவரி 4, 5, 6, 7.

கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்:

ஜனவரி 14, 15, 16, 28, 29. பிப்ரவரி 1, 2, 3, 10, 11, 12.

எண்ணங்களை நிறைவேற்ற வைக்கும் எண்கள்: 3, 5.

பொன்னான வாய்ப்புகளைக் கொடுக்கும் வண்ணங்கள்: மஞ்சள், பச்சை.

--------------------------------------------------------------------------------

கும்ப ராசி

அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்)

வருமானம் திருப்தி தரும்!
நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, நல்ல காரியங்களை முடித்துக் கொடுக்கும் கும்ப ராசி நேயர்களே!

தை மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, தனவரவு சரளமாக இருக்கும் என்றே சொல்ல வேண்டும். விரய ஸ்தானத்தில் சப்தமாதிபதி சஞ்சரிப்பதால், குடும்பச் செலவுகள் கூடும். கொள்கைப் பிடிப்போடு, சில காரியங்களைச் செய்து முடிக்க இயலாது. அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் சென்றால்தான் ஆதாயம் கைக்கு வந்து சேரும் சூழ்நிலை உருவாகும். காரணம், ராசிநாதன் சனி அஷ்டமத்தில் வக்ரம் பெறுகிறார்.

அஷ்டமத்துச் சனியாக மட்டுமல்லாமல், வக்ரகதியிலும் இருப்பது யோகம் தருமா? அல்லது தோஷம் தருமா? என்று நீங்கள் சிந்திப்பீர்கள். பொதுவாக, 12-க்கு அதிபதியாகவும் சனி விளங்குவதால், வக்ரம் பெறுவது ஒரு வழிக்கு நன்மைதான். திடீர் செலவுகள் செய்யாமல், திட்டமிட்டபடியே செலவுகள் செய்யும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. பயணங்கள் அதிகரிக்கும்.

லாப ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் கூட்டாக இணைந்து சஞ்சரிப்பதால், கூட்டுத்தொழில் செய்வோர் லாபம் காணலாம். அதேநேரத்தில் அதில் ராகுவும் இணைந்திருப்பதால், உடனுக்குடன் அதை பிரித்துக் கொள்வது நல்லது. சர்ப்ப சாந்திகளைச் செய்து கொண்டால், சந்தோஷங்களை இம்மாதம் சந்திக்கலாம்.

மகரச் சுக்ரனின் சஞ்சாரம்!

மகர ராசியில் ஜனவரி 15-ந் தேதி சுக்ரன் சஞ்சரிக்கப் போகிறார். 4, 9-க்கு அதிபதி விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், பெற்றோர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க பெரும் விரயமொன்று செய்ய நேரிடலாம். தொழில் ரீதியாக பெண்வழியில் சில விரயங்களையும் சந்திக்க நேரிடும். பூர்வீக சொத்துக்களில் எத்தனை முறை பஞ்சாயத்து வைத்தாலும், அது இழுபறி நிலையிலேயே இருக்கும். பங்காளிப்பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஏற்கனவே உள்ள இடம், பூமியை விற்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும், புதிய இடங்களை வாங்கிச் சேர்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

மகர புதனின் சஞ்சாரம்!

உங்கள் ராசிக்கு 5, 8-க்கு அதிபதியான புதன் பிப்ரவரி 2-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இதன் விளைவாக, பிள்ளைகளின் கல்வி நலன் கருதியும், வேலைவாய்ப்பு கருதியும் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதுமட்டுமல்லாமல், மற்றவர்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைத்தால் அது மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். பொதுவாக, கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது.

கும்ப சுக்ரனின் சஞ்சாரம்!

பிப்ரவரி 7-ந் தேதி கும்ப ராசியில் குருவுடன் சுக்ரனும் சஞ்சரிக்கப் போகிறார். இதன் விளைவாக, இடம், பூமி வாங்கும் சூழ்நிலை உருவாகும். இல்லத்திலும் நல்ல சம்பவங்கள் நடப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் செயலுக்கு ஒத்துழைப்புச் செய்ய முன்வருவர். உற்சாகத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படத் தொடங்குவீர்கள்.

மகிழ்ச்சி தரும் வழிபாடு

இம்மாதம் ராகு-கேதுக்களை வழிபட்டு நலத்தையும், வளத்தையும் வரவழைத்துக் கொள்ளுங்கள்.

பணம் வரும் நாட்கள்:

ஜனவரி 14, 15, 21, 22, 27, 28. பிப்ரவரி 5, 10, 11, 12.

கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்:

ஜனவரி 16, 17, 18, 30, 31. பிப்ரவரி 3, 4.

எண்ணங்களை நிறைவேற்ற வைக்கும் எண்கள்: 3, 9.

பொன்னான வாய்ப்புகளைக் கொடுக்கும் வண்ணங்கள்: மஞ்சள், ரோஸ்.

--------------------------------------------------------------------------------

மீனராசி

பூரட்டாதி 4-ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி முடிய
(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)

ஆரோக்கியத்தில் அக்கறை தேவை!
எதையும் எப்படியும் முடிக்கலாம் என்ற சிந்தனையை வளர்த்துக் கொண்டிருக்கும் மீனராசி நேயர்களே!

தை மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ஏழாமிடத்தில் சனியும், ஐந்தாமிடத்தில் செவ்வாயும் சஞ்சரிப்பதால் குடும்பச்சுமை கூடும். விரயங்கள் அதிகரிக்கும். பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். சொல்லை செயலாக்குவதில் இடைïறுகள் ஏற்படலாம். ஓய்வின்றி உழைக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும், மற்றவர்கள் நன்றி காட்டுவார்களா? என்பது சந்தேகம்தான்.

விரய ஸ்தானத்தில் ராசிநாதன் சஞ்சரிப்பதால், எந்த ரூபத்திலும் விரயங்கள் வந்து உங்களை ஆட்கொள்ளலாம். பயணங்கள் அதிகரிக்கும். அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலமே நீங்கள் ஆதாயத்தை அடைய முடியும். ஊர் மாற்றம், இடமாற்றங்கள் வந்து சேரலாம். நடைபயணத்தின் போது கவனம் தேவை. தொழிலில் கூட்டாளிகளால் ஏமாற்றங்களைச் சந்திக்காமலிருக்க அன்றாட வரவு-செலவுகளை பார்த்துக் கொள்வது நல்லது.

வக்ரச் சனியும், வக்ரச் செவ்வாயும் உங்களுக்கு தளர்ச்சியைக் கொடுக்காமல் வளர்ச்சியைக் கொடுக்க, வழிபாடுகளை நீங்கள் அதிகம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக விநாயகர், அனுமன், முருகப் பெருமான், அம்பிகை ஆகிய தெய்வங்களின் வழிபாடுகளை யோகபலம் பெற்ற நாளில் தேர்ந்தெடுத்துச் செய்தால், குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு வரும் உடல்நிலைத் தொல்லைகளில் இருந்து விடுபட இயலும்.

உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நேரம்!

ஜனவரி 15-ந் தேதி மகர ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகிறார். இதன் விளைவாக, சகோதரர்களின் ஒத்துழைப்பு அதிகம் கிடைக்கும். சகோதரிகள் உங்கள் குடும்ப வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறும் இந்த நேரத்தில் தொழில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து தொகை வந்து சேரும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டும் வாய்ப்பு கிட்டும். மறதியால் விட்டுப்போன காரியங்கள் தொடரும். பயணத்தால் பலன் கிடைக்கும்.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

பிப்ரவரி 2-ந் தேதி மகரத்தில் புதன் சஞ்சரிக்கப் போகிறார். இதன் விளைவாக, நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். வாகன யோகம் உண்டாகும்.

பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும் நேரம்!

பிப்ரவரி 7-ந் தேதி கும்ப ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகிறார். இதன் விளைவாக, மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோகம் மற்றும் தொழிலில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இல்லம் தேடி நல்ல செய்திகள் மாதக்கடைசியில் வந்து சேரலாம். இருந்தாலும், இனம்புரியாத கவலை மேலோங்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலை ஒரு சிலருக்கு உருவாகும். அடகு வைத்த நகைகள் மீட்கப்படும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வழிகாட்டியாக இருந்தவர்கள் உங்கள் வீடுதேடி வருவர்.

மகிழ்ச்சி தரும் வழிபாடு

சனிக்கிழமை தோறும் சனீஸ்வரர் வழிபாட்டை மேற்கொண்டால் சந்தோஷங்கள் வந்து சேரும்.

பணம் வரும் நாட்கள்:

ஜனவரி 17, 18, 23, 24, 27, 28. பிப்ரவரி 6, 7, 8, 9.

கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்:

ஜனவரி 19, 20. பிப்ரவரி 1, 2, 4, 5.

எண்ணங்களை நிறைவேற்ற வைக்கும் எண்கள்: 5, 8.

பொன்னான வாய்ப்புகளைக் கொடுக்கும் வண்ணங்கள்: கருப்பு, நீலம்.

உங்கள் பிறப்பு சுய ஜன ஜாதகத்தில் ஆராய்ச்சி செய்து பாருங்கள்
RishiAstro App|எவ்வாறு பயன்படுத்துவது CLICK HERE GO...
வருமாணம் பிரச்சனையா|காரணம் என்ன| எளியமுறையில் சரிசெய்ய| psssrf CLICK HERE GO...
உங்கள் நட்சத்திரம் |Positive-வ அல்லது Negative-வ|எளிய பரிகாரம் |Psssrf CLICK HERE GO...
உங்கள் நட்சத்திரத்திற்கு |தினம் பயன்படும் பொருல்கள் வைத்து |எளிய முறை பரிகாரங்கள் CLICK HERE GO...
செவ்வாய் தோஷம் செவ்வாய் தோஷத்தை ஒருவரின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் இருப்பதாக கருதலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கல்யாணத் தடைக்கு ஆளாவார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது லக்னம், சந்திரன், சுக்கிரன் முதலியவற்றுக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாகக் கருத வேண்டும். மேற்கூறிய இடங்களில் செவ்வாய் தோஷமானது லக்கினத்திலிருந்து பார்க்கும் போது முழுமையானதாகவும், சந்திரன் நின்ற வீட்டிலிருந்து பார்க்கும் போது பாதி (1/2) தோஷத்தையும் மற்றும் சுக்கிரனிலிருந்து பார்க்கும்போது கால் பங்கு(1/4) தோஷத்தையும் அளிக்கும். பின்வரும் கிரக அமைப்புகளால் செவ்வாய் தோஷம் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் 2, 4, 7, 8 மற்றும் 12-ஆம் வீட்டிலிருந்தாலும், விதிவிலக்காகி செவ்வாய் தோஷம் இல்லாமல் செய்துவிடும். அவற்றைப் பற்றி விளக்கமாக இப்போது, காண்போம். CLICK HERE GO...
உங்களுக்கு நடக்கும் தசாபுத்தி |நன்மை கொடுக்கும் அதிரிஷ்ட |நீங்கள் தெரிந்துகொள்ள CLICK HERE GO...
அனந்த காலசர்ப்ப யோகம் ராகு 1வது வீட்டில் இருக்கிறது. கேது 7வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
குலிகா காலசர்ப்ப யோகம் ராகு 2வது வீட்டில் இருக்கிறது. கேது 8வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
வாஸுகி காலசர்ப்ப யோகம் ராகு 3வது வீட்டில் இருக்கிறது. கேது 9வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
சங்கினி காலசர்ப்ப யோகம் ராகு 4வது வீட்டில் இருக்கிறது. கேது 10வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
பத்ம காலசர்ப்ப யோகம் ராகு 5வது வீட்டில் இருக்கிறது. கேது 11வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
Save customer details psssrf.org.in, Astrology software, CLICK HERE GO...
மகாபத்ம காலசர்ப்ப யோகம் ராகு 6வது வீட்டில் இருக்கிறது. கேது 12வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
தக்‌ஷக காலசர்ப்ப யோகம் ராகு 7வது வீட்டில் இருக்கிறது. கேது 1வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
1 2 3


தலைப்பு
சூரியன் - அசுவனி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பூசம் 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
ஆணுக்கு அஸ்வனி மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...
தலைப்பு
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
விருச்சக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சந்திரன் மேஷ ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
சந்திரன் ரிஷப ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...


ஜாதக ராசி நவாம்சம் கோச்சரம் பலன்
ஜாதகர் பெயர் :
பாலினம் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Longitude
Latitude பிறந்த நாடு :பிறந்த மாவட்டம் Distric :பிறந்த மாநிலம் State:பிறந்த மாநில குறியீடு StateCode :பிறந்த ஊர் City:Longitude Latitude

திருமண பொருத்தம் பார்க்க ஜாதக பொருத்தம் விவாக பொருத்தம்
ஆண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க
பெண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க

ஜாதகர் பெயர் :
ஆண் பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Latitudegovi அட்சரேகை நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு : Longitudegovi தீர்க்கரேகை:


ஜாதகர் பெயர் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric :


ஜோதிடம் கற்க ஜோதிட சாப்ட்வேர் கிடைக்கும். WhatsApp : 8870974887 and Cell : 8870974887 கோவிந்தன் WhatsApp : 8870974887



கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது

Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, 33 சாப்ட்வேர்-> Rs.11,000 USB KEY & PASSWORD இல்லை - Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000 USB KEY உண்டு 12/16/2025 3:29:00 AM


சூரியன் ரோகிணி நட்சத்திரம் 2பாதத்தில் இருந்தால்#tamil#dinapalan#natchathirapalan#horoscope#shorts



Save customer details psssrf.org.in, Astrology software,



ஜோதிடம் proastro தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் www.psssrf.org.in கோவி்ந்தன்