Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, V24 சாப்ட்வேர்-> Rs.11,000 Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000. Share Market Financial Astrology Software Rs.19750, திருமணதகவல் மைய சாப்ட்வேர் Rs.7500, Cell Phone App Rs. 1100
Pay online
ஜோதிட சாப்ட்வேர்கள் Email Online வழியாக 30 நிமிடங்களில் கிடைக்கும் GOVINDANE Cell: 88077 01887 WhatsApp : 88709 74887 Email id : vs2008w7@gmail.com
Astrologer use Only ஜாதகம் திருமணபொருத்தம்... APP Download செய்ய click here
Free RishiAstro APP Download click here Scan RishiAstro App Download

நீங்கள் பிறந்த ஊரை தேர்வு செய்யுங்கள் துள்ளியமாக பலன் இருக்கும்
நீங்கள் பிறந்த ஊர்
Select Gender :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
Code :
Subscribe to Channel Click here to find out the code number.
Subscribe to receive notifications about new
astrological research.


திரும்ண விதி

இந்த விதிகள் ஆண்கள், பெண்கள் என்று இரு பிரிவினருக்கும் பொதுவானது! 2ம் வீடு (House of Family affairs) குடும்ப ஸதானம் 7ம் வீடு (House of Marriage) களத்திர ஸ்தானம் சுப கிரகங்கள் : குரு, சுக்கிரன், சந்திரன் பாப கிரகங்கள்: சனி, ராகு கேது, செவ்வாய் மகரராசி, கும்பராசிக்காரர்களுக்கு சனியிடம் இருந்தும், மேஷராசி, விருச்சிக ராசிக்காரகளுக்குச் செவ்வாயிட மிருந்தும் விதிவிலக்குகள் உண்டு. ஏனென்றால் அவைகள் அந்த வீட்டின் அதிபதிகள்

1. சந்திரன், சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களும் ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும்.வலு என்பது அவைகள் தங்களுடைய சொந்த, உச்ச, நட்பு, திரிகோணம், கேந்திரம் ஆகிய இடங்களில் இருப்பது!

2. ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் உச்சம் பெற்றிருப்பது

3. 5, 9ற்கு அதிபதிகள் லக்கினாதிபதியோடு சேர்ந்தோ அல்லது லக்கினாதிபதியின் பார்வை பெற்றோ இருப்பது

4.1,4,7,10ம் வீடுகளில் சுபக் கிரகங்கள் இருப்பது ந்ல்லது

5.லக்கினாதிபதி அம்சத்தில் உச்சம் பெற்று ஏழாம் வீட்டு அதிபதியைப் பார்ப்பது

6.5ம் வீட்டு அதிபதியும், 5ற்கு 5ந்தான 9ம் வீட்டு அதிபதியும் சுபக்கிரகங்களாக இருந்து வலுவான இடத்தில் அமர்வது

7. சுக்கிரன் தன்னுடைய நட்புக் கிரகங்களுடன் சேர்க்கை அத்துடன் லக்கினாதிபதியின் பார்வையையும் பெறுவது.

8. 5, 7, 9 ஆம் வீடுகளுக்கு அதிபதிகள் லக்கினத்தில் வந்து அமர்வது அல்லது லக்கினத்தைப் பார்ப்பது

9. 9, 10ற்கு அதிபதிகள் (அவர்களுக்கு தர்ம,கர்ம அதிபதிகள் என்று பெயர்) ஏழாம் வீட்டில் சேர்ந்திருப்பது . அல்லது சேர்ந்திருந்தி ஏழாம் வீட்டைப் பார்ப்பது..

10.சுக்கிரனுக்கு மற்றொரு சுபக் கிரகத்தின் கூட்டணி, அல்லது பார்வை! அல்லது கோண வீடுகளக்கு ஆதிபத்யம்

11.சுபக்கிரகங்கள் கேந்திர, திரிகோண் ஸ்தானங்களில் சேர்ந்திருப்பது - அத்துடன் பாவக் கிரகங்களின் பார்வை பெறாமல் இருப்பது

12. 2, வீடு, 7ம் வீடு ஆகிய இடங்களில் சுபக்கிரகங்கள் இருத்தல் அல்லது அந்த வீடுகளின் மேல் அவற்றின் பார்வை

13.பொதுவாக சபக்கிரகங்கள் உச்ச வீடுகளில் இருப்பது

14. கிரகங்கள் ஒன்றிற்கொன்று கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ இருப்பது

15. ராசிச் சக்கரத்தில் (In Rasi Chart) சுக்கிரன், குரு இருவரும் பலம் குறைந்திருந்தாலும், நவாம்சத்தில் உச்சம், ஆட்சி போன்ற அமைப்பைப் பெற்றிருத்தல்

16. 2,4,5,7,9,11 ஆகிய வீடுகளில் ஒரு வீடாவது குருவின் பார்வையைப் பெறுவது!

17. குரு திரிகோண வீடுகளுக்கு அதிபதியாகி, கேந்திரத்தில் இருந்து ஏழாம் இடத்தைப் பார்ப்பது. இந்த விதிகள் எல்லாம் திரும்ணம் சிறப்பாக நடப்பதற்கு மட்டும்தான். திருமண வாழக்கை எப்படி இருக்கும் என்பதற்கு மேலும் பல் விதிகள் உள்ளன.

மூலம் மாமனாருக்கு ஆகாது (மாமியாரை மூலையிலே உட்காரவைத்துவிடும்) ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்றசொல்லடைகள் உள்ளதால், அதை நம்புபவர்கள் அதிகம் அதே போல பூராடம் பெண்ணிற்கு ஆகாது (பூராடம் நூலாடாது அதாவது மாங்கல்யம் தங்காது). கேட்டை குடும்பத்திற்கு ஆகாது என்ற சொல்லடைகளும் உண்டு. அதை நம்புபவர்களும் உண்டு.

ஏழில் சனி இருந்தால் விதவை தோஷம் உள்ள ஜாதகம் ஆகும்

இரு மனங்களைத் திருமணத்தால் கட்டிப்போட ஜோதிடர் எதைப் பார்ப்பார்?

1. இரு ஜாதகங்களும் ஒன்றுக் கொன்று பொருந்துகிறதா என்று பார்ப்பார் அதாவது அடிப்படையான பத்து (நட்சத்திரம், கணம், மகேந்திரம், பெண்தீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரச்சு,வேதை ஆகிய பத்து) பொருந்தி இருக்கிறதா என்று பார்ப்பார்! இந்தப் பத்தில் ரச்சுப் பொருத்தம் (Duration of Married Life) அதி முக்கியம். மற்ற ஒன்பதில் ஐந்து பொருந்தினால் போதும்.

2. செவ்வாய் தோஷம் குறுக்கிடாமல் இருக்கிறதா என்று பார்ப்பார்

3. 7ம் வீடு, சந்திர லக்கினம் ஆகியவற்றில் தீய கிரகங்களின் ஆதிக்கம்
இருக்கிறதா? பாபகர்த்தாரி அமைப்பு இருக்கிறதா என்று பார்ப்பார்

4. அஷ்டம சஷ்டமம் (6ம் வீடு - 8ம் வீடு) இருவருக்கும் ஒத்துப் போகிறதா
என்று பார்ப்பார்.
லக்கினத்திற்கு 7ஆம் வீட்டில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தால் அழகான தோற்றத்தை உடைய பெண் மனைவியாக அமைவாள். குரு இருந்தால் நல்ல குணமும், தோற்றமும் உடைய பெண் மனைவியாக வந்து கரம் பிடிப்பாள். 7க்குரிய கிரகமும், சுக்கிரனும் தங்கள் சுய வர்க்கத்தில் ஐந்து, அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தாலும் மனம் விரும்பியது போல மனைவி கிடைப்பாள்
உரிய காலத்தில் திருமணம் நடைபெற வேண்டும், நல்ல அழகும் நல்ல குணமும் (சொன்ன பேச்சை - அட்லீஸ்ட் ஆரம்ப காலத்திலாவது கேட்கக்கூடிய) மனைவி வேண்டும் - அதாவது த்ரீ இன் ஒன் வேண்டும் என்பவர்களுக்கு - அது போல கிட்டுமா? கிடைக்குமா? என்பதைக் கண்டு பிடிக்க ஒரு வழியிருக்கிறது. எழாம் வீடு, ஏழுக்குரியவன் அமர்ந்த வீடு, திருமணகாரகன் (authority for marriage) சுக்கிரன் அமர்ந்த வீடு ஆகிய மூன்று இடங்களுமே முப்பது பரல்களையோ அல்லது அதற்கு அதிகமான பரல்களையோ கொண்டிருந்தால் அதுபோல நடக்கும். லக்கினத்தின் பரல்களை விட ஏழாம் வீட்டின் பரல்கள் அதிகமாக இருந்தால் வீட்டில் உங்கள் மனைவிதான் பிரதம மந்திரி. நீங்கள் வெறும் ஜனாதிபதி மட்டுமே. அதே நேரத்தில் ஏழாம் வீட்டில் உள்ள பரல்களைவிட லக்கினத்தில் பரல்கள் அதிகமாக இருந்தால் நீங்கள் தான் எல்லாம் - அதாவது பர்வேஷ் முஷ்ர·ப் போல சர்வ அதிகாரமும் உங்கள் கையில்தான். மனைவி உங்களிடம் மயங்கிக் கிடப்பாள் அல்லது கட்டுண்டு கிடப்பாள் அல்லது அடங்கிக் கிடப்பாள். இல்லையென்றால் நீங்கள் அடங்கிக் கிடப்பீர்கள். சரி விடுங்கள் யாராவது ஒருவர் மற்றொவருக்கு அடங்கிப்போவதுதானே வாழ்க்கை. "Life is nothing but adjusting with the better half" என்பதுதானே வாழ்க்கையின் (Married Life) முதல் நியதி! ஆண், பெண் இருவரின் ஜாதகங்களுக்குமே இது பொருந்தும்!

1. ஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும். (Seventh house is called as house of marriage)

2. சுக்கிரன் களத்திரகாரகன் எனப்படுவான் (Venus is called as authority for marriage).

3. ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின் Sub - periodல் திருமணம் நடக்கும்

4. ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள் .

5. ஏழாம் வீட்டிற்கு உரியவன் (Owner) திரிகோண வீடுகளில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பாள்.

6. ஏழில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல கணவனாகக் கிடைப்பான் என்று பொருள் கொள்ளவும்.

7. சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் படித்த புத்திசாலியான மனைவி கிடைப்பாள்

8. சுக்கிரனுடன், சந்திரனும், புதனும் கூடி இருந்தால் ஒரு பெரிய செல்வந்தரின் மகள் மனைவியாகக் கிடைப்பாள்.

9. சுக்கிரனுடன், சனி சேர்ந்திருந்தால் மிகவும் கஷ்டப்படுகிற - ஆனால் உழைப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண் மனைவியாகக் கிடைப்பாள்.

10. ஏழாம் அதிபனுடன் எத்தனை கோள்கள் சேர்ந்திருக்கிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு உண்டாகும். ஆனால் ஏழாம் அதிபது சுபக் கிரகமாகவோ அல்லது சுபக்கிரகத்தின் பார்வை பெற்றாலோ ஜாதகன் ஒழுக்கமுடையவனக இருப்பான்.

11. லக்கினாதிபதியும், ஏழாம் அதிபதியும் சேர்ந்து ஜாதகத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் வீடுகளில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்குத் திருமணம் நடைபெறாது.

12. சுக்கிரனும், செவ்வாயும் சேர்ந்து ஏழாம் வீட்டில் அமர்ந் திருந்தால் ஜாதகன் ஒரு விதவையை மணந்து கொள்வான்

13. ஏழில் ஒன்றிற்கு மேற்பட்ட பாப கிரகங்கள் இருந்தால் மனைவிக்கு நோய் உண்டாகும்

14. இரண்டாம் இடத்தில் பாப கிரகங்கள் இருந்தாலும், அல்லது இரண்டாம் வீட்டைப் பாப கிரகங்கள் பார்த்தாலும் அதனதன் திசா புக்திகளில் மனைவிக்கு நோய் உண்டாகும்.

15. ஏழிற்கு உடையவன் சர ராசியில் இருந்தால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் உண்டு. ஸ்திர ராசி என்றால் ஒரு மனைவிதான். உபயராசியென்றால் அவன் பல பெண்களுக்கு நாயகன்.

16. லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான்.

17. ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி, செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது!

18. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள், அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள்

19. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி,. அவர்கள் சுக்கிரனுடன் அல்லது பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் பல பெண்களிடம் தொடர்பு ஏற்படும்

20. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி, அதோடு அவன் பிற மாதரை விரும்ப மாட்டான்

21. சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கு அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைவுற்றால் மண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.

22. ஏழாம் வீட்டிற்கு அதிபதி பாபிகள் வீட்டில் நின்றாலும், பாபிகளால் பார்க்கப்பட்டாலும் ஜாதகனுக்குத் திருமணம் தூர தேசத்தில் நடக்கும்.

23. நவாம்ச சக்கரத்தில் ஏழாம் வீட்டு அதிபன் சுபர்களுடைய வீட்டில் இருந்தால் உள்ளூர்ப் பெண்ணே மனைவியாக வருவாள்.

24. ஏழாம் அதிபது பாப கிரகமாகி , ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைந்து நின்றால், எத்தனை கிரகங்களின் பார்வை அங்கே விழுகிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு ஏற்படும

25. ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களுடன் சேர்ந்தால் மனைவி நல்லவளாக இருப்பாள். அதுவே பாப கிரகங்களுடன் சேர்க்கை என்றால் மனைவி பொல்லாதவளாக இருப்பாள்.

26. ஏழிற்குரியவன் ராகுவுடன் சேர்ந்து ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருந்தால் ஜாதகன் இழிவான பெண்ணை மணக்க நேரிடும்.

27. சுக்கிரனோ அல்லது ஏழிற்குரியவனோ ஜாதகத்தில் நீசமாகியிருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்வாக இருக்காது.

1. காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும். அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும். இந்த வலு என்னும் வார்த்தைக்குப் பலமுறை விளக்கம் கொடுத்துள்ளேன். அது உங்களுக்குத் தெரிந்ததுதான்.

2. சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில் வெற்றி உண்டாகும்! சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் அரும்பும். அது வெற்றியில் முடியும். இல்லை என்றால் இல்லை!

3. ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக்கல்யாணம் என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்.

4. அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்!

5. ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால் திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.

6. குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள் ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. கெட்டுப் போவது என்பது - ஆம்பல் பூத்துத் தின்பண்டங்கள் கெட்டுப்போகுமே அது போலக் கெட்டுப் போவது என்று பொருள் இல்லை. அவைகள் ஜாதகத்தில் நீசம் அடையாமல் இருக்க வேண்டும்

7. அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம் அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந் திருந்தால் மண வாழ்க்கை சிறக்காது.

8. அதுபோல அந்த மூன்று சுபக்கிரகங்கள் ப்ளஸ் லக்கின அதிபதி, ப்ளஸ் ஏழாம் அதிபதி ஆகியவர்கள், மறைவிடங்களில் (Hidden Houses) - அதாவது 6,8,12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருக்கக்கூடாது.

9. இரண்டாம் வீடு பலமுள்ளதாக இருக்க வேண்டும். அதாவது அஷ்டக வர்கத்தில் 28 அல்லது மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு சேர்ந்து குடும்பம் நடத்த வேண்டாமா? அதற்கு இந்த வீடு முக்கியம். திருமணத்திற்குப் பிறகு மனனவியை இங்கே விட்டு விட்டு வேலையின் பொருட்டு துபாய் போன்ற தேசங்களில் போய் உட்கார்ந்து கொள்வது எப்படி நல்ல குடும்ப வாழ்க்கையாகும்? கைபிடித்த மனனவியைவிட பொருள் ஈட்டல் முக்கியமா?

10 செவ்வாய், ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் தோஷம் அல்லது சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.

11. ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும், ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து கொள்கிறவன் பாக்கியசாலி!.

12. 1,4,7,10ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்ற பெண் அதிர்ஷ்டம் உடையவளாகவும் நற்குணம் உடையவளாகவும் இருப்பாள்.

13. 7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.

14. கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில் புதன் இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான்.

15. மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள் யோகமான பெண்தான்.

16. கும்ப லக்கினத்தில் பிறந்து, 4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து, அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண் நாடாள்வோனின் மனைவியாவாள். அதாவது அரசனின் மனைவியாவாள். இப்போது சொல்வதென்றால் நாடறிந்த பெரிய தலவரின் மனைவியாவாள். அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான்.

17. எந்த யோகத்திற்கும் லக்கினாதிபதி பலமாக இருக்கவேண்டும். லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள் யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால், அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள்.

18. திருமண யோகத்திற்கு, அதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு, லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய மூவரும் பலமாக இருக்க வேண்டும்.

19. பெண்களுக்குப் பாகியஸ்தானமும், ஆண்களுக்கு லக்கினமும் சிறப்பாக இருப்பது முக்கியம்

20. இங்கே கூறப்படும் விதிகள் அனைத்தும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானதுதான்

திருமண யோகத்திற்கு எதிரான சில அமைப்புக்கள்:

1. லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று இருப்பதும் கூடாது.

2. ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத் திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர் உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்

3. சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது.

4. சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது.

5. குரு பலவீனமாகி ஆறாம் வீட்டில் குடியிருப்பது கூடாது. உடன் பாபக் கிரகங்கள் அந்த இடத்தில் அவருடன் சேர்ந்து இருப்பதும் கூடாது.

6. சுபக்கிரகங்கள் மூன்றும் நீசம் பெற்றிருத்தல் கூடாது

7. ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் நீசம் பெற்றிருப்பதும் நல்லதல்ல!

8 ஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் அமர்வது நல்லதல்ல!

9. எட்டாம் வீட்டுக்காரன் ஏழில் குடியிருப்பது நல்லதல்ல!

10. ஏழில் சந்திரனுடன் சனி கூட்டணி போட்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல!

11. ஜாதகத்தில் சுக்கிரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும், சந்திரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும் இருப்பது நல்லதல்ல!

12 எழில் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர்கள் நல்ல நிலைமையில் அமர்ந்திருப்பது நல்லது. செவ்வாயும், சனியும் எந்த நிலையில் அமர்ந்திருந்தாலும் நல்லதல்ல

2. புனர்பூ தோஷம் என்பது சந்திரனுக்கும், சனிக்கும் ஜாதகத்தில் உள்ள தொடர்பு (குறிப்பாக சேர்க்கை அல்லது பரிவர்த்தனை)

திருமணவாழ்வில் பல சிரமங்களை/துன்பங்களை உண்டாக்கும். தலைவலி, பய உணர்வு, பரபரப்பு, படபடப்பு போன்றவையும் அதன் உப விளைவுகள்தான் (Connection between Saturn and Moon is known as Punarphoo Dosham. Whenever Saturn has got any connection what-so-even with Moon, there will be some obstacle or impediment, not only during negotiation but also at the time of fixation and even at the time of celebration of the marriage. This connection between Moon and Saturn causes delay)

இந்த அமைப்பில் சூரியன் உள்ளே நுழைந்தால் (அந்த இரண்டு கிரகங்களுடன் சூரியன் இருந்ததாலும், அல்லது அவைகளைத் தன் பார்வையில் வைத்திருந்தாலும்) புனர்பூ தோஷம் நீங்கிவிடும்.

பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்தவுடன், குரு ஒன்பதாம் இடத்தில் (பாக்கியஸ்தானத்தில்) இருந்தாலும் அதுவும் உச்சம் பெற்றோ அல்லது அஷ்டகவக்கத்தில் 5ம் அல்லது அதற்கு மேலும் பரல்களையும் பெற்று ஒன்பதாம் இடத்தில் இருந்தாலும் அந்தப் பெண்ணின் ஜாதகத்தை மேலும் பார்க்காமல் மூடிவைத்துவிடலாம். ஒரே வார்த்தையில் சொன்னால் அதிர்ஷ்டமான பெண்

காதல்

காதல் என்று வந்து விட்ட பிறகு, ஜாதகம் எதற்கு? இரண்டு ஆண்டுகள் காதலித்த பிறகு, அவனை வேண்டாம் என்று சொன்னால் அவன் சும்மா விட்டுவிடுவானா? என்னென்ன பிரச்சினைகளைக் கிளப்புவானோ - யாருக்குத் தெரியும்? ஆகவே பயந்த சுபாவம் என்றால் காதலிக்காதே! துணிச்சல் இருந்தால் மட்டுமே காதலில் இறங்கு! காதலில் இறங்கிவிட்டால் ஜாதகத்தைப் பார்க்காதே! வருவது வரட்டும் என்று அவனை அல்லது அவளைத் திருமணம் செய்துகொள் காதலித்தவளைக் கைப் பிடிப்பதுவரை நம் செயல், மற்றதெல்லாம் விதிப்படி அல்லது விதித்தபடி நடக்கட்டும் என்று விட்டுவிடு.

இது இளம் பெண்களுக்கு மட்டும்: ஆண்களில் பாதிப்பேர் சந்தர்ப்பவாதிகள். சுய நலவாதிகள். ஒவ்வொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. காதலிக்கும்போது ஆடவன் ஒரு முகத்தை மட்டுமே உங்களுக்குக் காட்டுவான். திருமணத்திற்குப் பிறகுதான் அவனுடைய இரண்டாவது முகம் தெரிய வரும்.

75% காதல் உடல் ஈர்ப்பினால் மட்டுமே ஏற்படும். ஆகவே ஒருவன் உங்களை விரும்புவதாகக் கூறினால் உடனே வழிந்து ஏற்றுக் கொண்டு விடாதீர்கள்.

அவனைப் பற்றி முழுமையாக விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். பெற்றோர்கள் சம்மதமில்லாமல் காதல் திரும்ணத்திற்கு ஒப்புக் கொள்ளாதீர்கள். பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்றால், போராடி அவர்களை ஒப்புக் கொள்ள வையுங்கள்.

அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பெற்றோர்கள் நிச்சயித்த திருமணமாகட்டும் அல்லது பெற்றோர்களுக்குத் தெரியாத காதல் திருமணமாகட்டும், இரண்டிலுமே பிரச்சினைகள் உண்டு.

நாள் ஒன்றிற்குப் 12 லக்கினங்கள். பிறக்கும் 12 விதமான லக்கினங்களை உடைய குழந்தைகளில் இரண்டு குழந்தைகளுக்கு திருமண வாழ்வில் சிக்கல் இருக்கும். அதாவது சராசரியாக 6 பேர்களில் ஒருவருடைய திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இல்லாமல் போய்விடும். இது ஒரு random கணக்குதான். சனி ஏழில் அமர்ந்தாலும், (அந்தப் பன்னிரெண்டு பேர்களில் ஒருவருக்கு ஏழில் அமையும்) அல்லது ஏழாம் அதிபதி 12ல் அமர்ந்தாலும், அல்லது 6ற்குரிய வில்லன் 7ல் அமர்ந்தாலும் அல்லது 7ற்குரியவன் 6ல் அமர்ந்தாலும் மணவாழ்வு பெரும்பாலும் கசப்பில் முடிந்துவிடும். அந்தப் பெரும்பாலும் எனும் பதம் எதற்கு என்றால் சிலருக்கு குருவின் பார்வை அல்லது சேர்க்கையால் நிலைமை மாறியிருக்கலாம்.

ஏழிற்கு உரிய கிரகம் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் இருந்தால் ஜாதகன் கலப்புத் திருமணம் செய்துகொள்வான் என்பது ஜோதிட விதி.

ஒரு பெண்ணின் லக்கனம் கும்பம் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு எட்டாம் இடம் கன்னி. இதில் செவ்வாய் இருந்து சுபர் பார்வை இல்லை என்றால் அந்தப் பெண், நிரந்தரமாக கணவனைப் பிரிந்து விடுவாள் என்பது ஜோதிட விதி.
திருமண உறவின் சந்தோஷம் குறிக்கும் கிரகம் புதன்
ஜோதிடத்தில் கூட ஆணாதிக்க கிரகங்கள், பெண் ஆதிக்க கிரகங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. குரு, செவ்வாய், சூரியன் ஆகியவை முழுமையான ஆணாதிக்க கிரகங்கள். சந்திரன், சுக்கிரன் ஆகிய இரண்டும் முழுமையான பெண் ஆதிக்க கிரகங்கள்.

ஒரு மனிதனின் (ஆண்/பெண்) ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன் ஆகிய இரண்டும் நன்றாக இருந்தால், அவர் வாழ்வில் நல்ல நிலைக்கு எளிதாக வந்துவிட முடியும். சந்திரன் மனோகாரகன் என்பதால், முடிவெடுக்கும் திறமையை இவரே நிர்ணயிக்கிறார். அதேபோல் சுக்கிரன் வசதி, வாய்ப்புகளை அளிக்கக் கூடியவர். அந்த வகையில் பார்த்தால், ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்ற பழமொழி ஜோதிடத்திற்கும் பொருந்தும்.

பொதுப்படையாகப் பார்த்தாலும், ஒரு வீட்டில் பெண்ணின் ஜாதகம் சிறப்பாக இருந்தால் அந்த குடும்பம் சீரும், சிறப்புமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. சில பெண்களுக்கு குடும்ப ஸ்தானம் (2ஆம் இடம், வாக்கு ஸ்தானம்) நன்றாக இருக்கும். அதுபோன்ற அமைப்புடைய பெண்களை மருமகளாகத் தேர்வு செய்தால் மணமகன் குடும்பத்தினர் சிறப்பாக வாழலாம்.

வரன் பார்க்கத் துவங்குவதற்கு முன்பாக மகனின் ஜாதகத்தை என்னிடம் கொண்டு வரும் பெற்றோரில் பெரும்பாலானவர்கள் கூறும் கருத்து என்னவென்றால், “காசு, பணம் கொண்டு வரத் தேவையில்லை. இருக்கிற சொத்தை பராமரித்துக் கொண்டு, மகனையும், எங்களையும் அன்பாக கவனித்து, பாசமாக நாலு வார்த்தை பேசும் வகையில் மணப்பெண் அமையுமா?” என்பதுதான். அதுபோன்ற எதிர்ப்பார்ப்பு உள்ள பெற்றோர், பெண்ணின் ஜாதகத்தில் 2ஆம் இடம் சிறப்பாக இருக்கிறதா? எனப் பார்த்து, மகனுக்கு திருமணம் முடிக்க வேண்டும்.

ஒருவரின் ஜாதகத்தில் (ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்) லக்னாதிபதி நன்றாக இருந்தால் சுற்றி இருப்பவர்களை மதித்து நடப்பவர்களாகவும், மற்றவர் மனதை புண்படுத்தும் குணம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். இன்றைய அவசர உலகில் கூட தனது தாயை விட மனதளவில் முதிர்ச்சியடைந்த மகளை நான் பார்த்துள்ளேன். அதற்கு காரணம் அவர்கள் ஜாதகத்தில் லக்னாதிபதியும், 2ஆம் இடமும் சிறப்பான கிரக அமைப்பு பெற்றிருப்பதே.

ஆறுக்கு உரியவனின் தசை, 8க்கு உரியவனின் தசை, பாதகாதிபதி தசை நடக்கும் போது தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவதை சம்பந்தப்பட்ட பெண்கள் தவிர்க்க வேண்டும். அதுபோன்ற காலகட்டத்தில் யோகா, தியானம் போன்றவற்றிலும் பெண்கள் மனதை செலுத்தலாம்.

** ஓர் ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் இணைந்து ஏழாம்பாவத்தில் இருந்தால் அவன் ஒரு விதவையை மணம் புரிய வேண்டிய வாய்ப்பு அதிகம் இருக்கிறது என ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன

 

உங்கள் பிறப்பு சுய ஜன ஜாதகத்தில் ஆராய்ச்சி செய்து பாருங்கள்
RishiAstro App|எவ்வாறு பயன்படுத்துவது CLICK HERE GO...
வருமாணம் பிரச்சனையா|காரணம் என்ன| எளியமுறையில் சரிசெய்ய| psssrf CLICK HERE GO...
உங்கள் நட்சத்திரம் |Positive-வ அல்லது Negative-வ|எளிய பரிகாரம் |Psssrf CLICK HERE GO...
உங்கள் நட்சத்திரத்திற்கு |தினம் பயன்படும் பொருல்கள் வைத்து |எளிய முறை பரிகாரங்கள் CLICK HERE GO...
செவ்வாய் தோஷம் செவ்வாய் தோஷத்தை ஒருவரின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் இருப்பதாக கருதலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கல்யாணத் தடைக்கு ஆளாவார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது லக்னம், சந்திரன், சுக்கிரன் முதலியவற்றுக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாகக் கருத வேண்டும். மேற்கூறிய இடங்களில் செவ்வாய் தோஷமானது லக்கினத்திலிருந்து பார்க்கும் போது முழுமையானதாகவும், சந்திரன் நின்ற வீட்டிலிருந்து பார்க்கும் போது பாதி (1/2) தோஷத்தையும் மற்றும் சுக்கிரனிலிருந்து பார்க்கும்போது கால் பங்கு(1/4) தோஷத்தையும் அளிக்கும். பின்வரும் கிரக அமைப்புகளால் செவ்வாய் தோஷம் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் 2, 4, 7, 8 மற்றும் 12-ஆம் வீட்டிலிருந்தாலும், விதிவிலக்காகி செவ்வாய் தோஷம் இல்லாமல் செய்துவிடும். அவற்றைப் பற்றி விளக்கமாக இப்போது, காண்போம். CLICK HERE GO...
உங்களுக்கு நடக்கும் தசாபுத்தி |நன்மை கொடுக்கும் அதிரிஷ்ட |நீங்கள் தெரிந்துகொள்ள CLICK HERE GO...
அனந்த காலசர்ப்ப யோகம் ராகு 1வது வீட்டில் இருக்கிறது. கேது 7வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
குலிகா காலசர்ப்ப யோகம் ராகு 2வது வீட்டில் இருக்கிறது. கேது 8வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
வாஸுகி காலசர்ப்ப யோகம் ராகு 3வது வீட்டில் இருக்கிறது. கேது 9வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
சங்கினி காலசர்ப்ப யோகம் ராகு 4வது வீட்டில் இருக்கிறது. கேது 10வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
பத்ம காலசர்ப்ப யோகம் ராகு 5வது வீட்டில் இருக்கிறது. கேது 11வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
Save customer details psssrf.org.in, Astrology software, CLICK HERE GO...
மகாபத்ம காலசர்ப்ப யோகம் ராகு 6வது வீட்டில் இருக்கிறது. கேது 12வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
தக்‌ஷக காலசர்ப்ப யோகம் ராகு 7வது வீட்டில் இருக்கிறது. கேது 1வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
1 2 3


தலைப்பு
சூரியன் - அசுவனி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பூசம் 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
ஆணுக்கு அஸ்வனி மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...
தலைப்பு
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
விருச்சக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சந்திரன் மேஷ ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
சந்திரன் ரிஷப ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...


ஜாதக ராசி நவாம்சம் கோச்சரம் பலன்
ஜாதகர் பெயர் :
பாலினம் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Longitude
Latitude பிறந்த நாடு :பிறந்த மாவட்டம் Distric :பிறந்த மாநிலம் State:பிறந்த மாநில குறியீடு StateCode :பிறந்த ஊர் City:Longitude Latitude

திருமண பொருத்தம் பார்க்க ஜாதக பொருத்தம் விவாக பொருத்தம்
ஆண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க
பெண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க

ஜாதகர் பெயர் :
ஆண் பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Latitudegovi அட்சரேகை நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு : Longitudegovi தீர்க்கரேகை:


ஜாதகர் பெயர் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric :


ஜோதிடம் கற்க ஜோதிட சாப்ட்வேர் கிடைக்கும். WhatsApp : 8870974887 and Cell : 8870974887 கோவிந்தன் WhatsApp : 8870974887



கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது

Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, 33 சாப்ட்வேர்-> Rs.11,000 USB KEY & PASSWORD இல்லை - Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000 USB KEY உண்டு 12/16/2025 3:31:14 AM


செவ்வாய் தோஷம் செவ்வாய் தோஷத்தை ஒருவரின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் இருப்பதாக கருதலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கல்யாணத் தடைக்கு ஆளாவார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது லக்னம், சந்திரன், சுக்கிரன் முதலியவற்றுக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாகக் கருத வேண்டும். மேற்கூறிய இடங்களில் செவ்வாய் தோஷமானது லக்கினத்திலிருந்து பார்க்கும் போது முழுமையானதாகவும், சந்திரன் நின்ற வீட்டிலிருந்து பார்க்கும் போது பாதி (1/2) தோஷத்தையும் மற்றும் சுக்கிரனிலிருந்து பார்க்கும்போது கால் பங்கு(1/4) தோஷத்தையும் அளிக்கும். பின்வரும் கிரக அமைப்புகளால் செவ்வாய் தோஷம் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் 2, 4, 7, 8 மற்றும் 12-ஆம் வீட்டிலிருந்தாலும், விதிவிலக்காகி செவ்வாய் தோஷம் இல்லாமல் செய்துவிடும். அவற்றைப் பற்றி விளக்கமாக இப்போது, காண்போம்.



Psssrf-ன் | Astro App-ல்|ஜாதகம்|Enter செய்து print எடுப்பது எப்படி|Birth Date|Birth Time|Birth Place



விஷ்ட காலசர்ப்ப யோகம் ராகு 11வது வீட்டில் இருக்கிறது. கேது 5வது வீடு வீட்டில் இருக்கிறது.