| கிரகயுத்தம் என்றால் என்ன? |
கிரகயுத்தம் என்றால் என்ன?
இரண்டு கிரகங்கள் ஒரு இடத்தில், ஒரு பாகைக்கும் குறைவான அமைப்பில் ஒன்று சேரும்போது, அதிக பாகையில் நிற்கும் கிரகம் தோற்றுவிடும். அதை விடக் குறைந்த பாகையில் உள்ள கிரகம் வெற்றி பெறும்.
சூரியன், சந்திரன், ராகு & கேது ஆகிய கிரகங்களுக்கு இந்த விதி இல்லை! செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 5 கிரகங்களுக்கு மட்டுமே கிரக யுத்த விதிகள். அதை மனதில் கொள்க!
உதாரண ஜாதகத்தில்:
கன்னி ராசியில் நான்கு கிரகங்கள் உள்ளன. அதில் சனியும், சுக்கிரனும் ஒரு பாகைக்கும் குறைவான நிலையில் உரசிக் கொண்டு கிரக யுத்தத்தில் உள்ளன.
சூரியன் 177.16.55
புதன் - 161.43.09
சனி - 155.28.42
சுக்கிரன் - 155.05.38
சுக்கிரன் - சனி இருவரின் யுத்தத்தில், இந்த ஜாதகத்தைப் பொறுத்தவரை, சுக்கிரன் வெற்றி பெறுவார்.
அதாவது லக்கினாதிபதி வேற்றி பெறுவார். யோககாரகன் சனி தோற்றுவிடுவான்.
ஜாதகத்தில் உள்ள யோகங்கள் கிடைக்காமல் போவதற்கான கிரக லைப்பாடுகள் அல்லது அமைப்புக்கள் சில உள்ளன. அவற்றை வரிசைப்படுத்தியுள்ளேன்
1. நீசமான கிரகங்கள்
2. யுத்தத்தில் தோற்ற கிரகங்கள்
3. மறைவிடங்களில் மாட்டிக் கொண்ட கிரகங்கள்
4. பாவ சந்திப்பில் சிக்கிக்கொண்ட கிரகங்கள்
5. வக்கிரம் பெற்ற கிரகங்கள்
6. அஸ்தமனத்தில் அடிபட்டு மருத்துவமனையில் படுத்திருக்கும் கிரகங்கள்
7. ராகு அல்லது கேதுவின் கூட்டணியில் சேர்ந்துள்ள கிரகங்கள்
8. அஷ்டகவர்க்கத்தில் 3ம் அதற்குக் கீழான பரல்களையும் பெற்று வலிமை இழந்து தவிக்கும் கிரகங்கள்
9. 6, 8, 12ஆம் வீடுகளுக்கு அதிபதியாக நேர்ந்துவிட்ட கிரகங்கள்
1. நீசமான கிரகங்கள் (Debilitated Planets) நீசமான கிரகங்கள் நன்மையான பலனைத் தராது. (நவாம்சத்தில் நீசம் கேன்சலாகியுள்ளதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்)
2) யுத்தத்தில் தோற்ற கிரகங்கள் (Defeated Planets) இரண்டு கிரகங்கள் ஒரு இடத்தில், ஒரு பாகைக்கும் குறைவான அமைப்பில் ஒன்று சேரும்போது, அதிக பாகையில் நிற்கும் கிரகம் தோற்றுவிடும். அதை விடக் குறைந்த பாகையில் உள்ள கிரகம் வெற்றி பெறும்.
3. மறைவிடங்களில் மாட்டிக் கொண்ட கிரகங்கள் 6,8,12ஆம் வீடுகளில் மாட்டிக் கொண்ட கிரகங்கள் அவைகள் தீய இடங்கள் Planets in Inimical Houses இந்த இடங்களில் உள்ள கிரகம் வலிமை இல்லாமல் இருக்கும் வலிமை இல்லாமல் இருப்பதால் நன்மைகளைச் செய்யாது. அதாவது ஒரு கிரகம் அமரும் 6,8, 12ஆம்
இடத்து அதிபதிகள் வலிமையாக இருந்தால், அதாவது, ஆட்சி அல்லது உச்ச வீடுகளில் இருந்தாலும் அல்லது சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலும் அந்தத் தீமைகள் கேன்சலாகிவிடும்.
ஜாதகன் நன்மைகளைப் பெறுவான்
4. பாவ சந்திப்பில் அதாவது ராசி சந்திப்பில் இருக்கும் கிரகங்கள் (Borderல் இருக்கும் கிரகங்கள். மேஷம் 30 பாகையில் முடிந்து ரிஷபம் 30.01ல் ஆரம்பிக்கும். 29.95 பாக முதல் 30.5 பாகை வரை உள்ள இடத்தில்
இருக்கும் கிரகம் பாவ சந்திப்பில் உள்ள கிரகம் என்ற கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட கிரகத்தை வெறும் பார்வையில் வைத்துக் கொண்டு, பலன் சொல்வது தவறாகி விடும்
5. வக்கிரகதியில் உள்ள கிரகங்கள்:
சுப கிரகங்கள் வக்கிரகதியில் நின்றால், அவைகள் உரிய பலனைத் தராது.
தீய கிரகங்கள் வக்கிரகதியில் நின்றால், அவைகள் ஜாதகனுக்குத் தேவையில்லாத அலைச்சலையும், ஊர் ஊராக பெட்டி தூக்கும் வாழ்க்கையையும் கொடுத்து விடும். சனி அல்லது செவ்வாய் வக்கிரகதியில் நின்றால் அவைகள் ஜாதகனுக்குத் தேவையில்லாத துன்பங்களையும், தொல்லைகளையும், கஷ்டங்களையும் கொடுக்கும்.
ஜாதகன் பல வழிகளிலும் அவதிப்பட நேரிடும். தப்பித்து ஓட முடியாது. அவதிப்பட்டே ஆக வேண்டும்.
6. அஸ்தமனம் ஆகிவிட்ட கிரகங்கள்.Combust Planets சூரியனுடன் 10 பாகைக்குள் இருக்கும் கிரகங்கள் அச்தமனமாகிவிடும். அஸ்தமனமான கிரகத்தால் ஜாதகனுக்கு பலன் கிடைக்காது.
7. ராகுவுடன் 12 பாகைகளுக்குள் சேரும் கிரகமும் மெலிவாக இருக்கும். அதாவது வலிமை இல்லாமல் இருக்கும். அதனால் ஜாதகனுக்கு உரிய நன்மைகளைச் செய்ய முடியாது.
8) 6, 8 & 12ஆம் வீட்டு அதிபதிகள் தீயவர்களாகிவிடுவார்கள். அந்த இடத்தின் அதிபதியானால், அவர்கள் அப்படித்தான் செயல்படுவார்கள் |