வீடு கட்டுவதற்கு உகந்த மாதங்கள் |
வீடு கட்டுவதற்கு பல்வேறு விதிமுறைகளை மனையடி சாஸ்திரம் முன்வைக்கிறது. இவற்றில் அனைத்தையும் பின்பற்ற முடியாத நிலையில் எவரேனும் இருந்தாலும், பொதுவாக சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.
அவற்றில் ஒன்றுதான் எந்தெந்த மாதங்களில் வீடு கட்டலாம் என்பதும். இதனை வீடு கட்டும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் நல்லதாகும். எந்தெந்த மாதங்களில் வீடு கட்டினால், எவ்விதமான பலன்கள் கிட்டும் என்பதையும் மனையடி சாஸ்திரம் விளக்கிக் கூறுகிறது.
வீடு கட்டுவதற்கு மிகவும் உகந்த மாதங்களில் வைகாசி மாதமும் ஒன்று. இம்மாதத்தில் வீடு கட்டினால், அந்தப் பணிகள் சிறப்பாகவும் விரைவாகவும் செய்து முடிக்கப்படும். அத்துடன் குடியிருக்கும் குடும்பமும் வளமுடன் இருக்கும்.
அதேபோல் ஆவணி மாதமும் மிக மிக உகந்த மாதம் ஆகும். குடும்பத்தில் இன்பம் என்றும் குடிகொண்டிருக்கும் வகையில் வாழ்க்கை இனிமையாக அமையும். பொருளாதாரம் உட்பட அனைத்து விதமான சுபிட்ச நிலையும் உண்டாகும்.
அடுத்து கார்த்திகை மாதம். இம்மாதத்தில் வீடு கட்டுவதால் தெய்வத்தின் அனுகிரஹம் எப்போதும் நம்முடனே இருக்கும். இதைப்போன்றே மார்கழியும் கடவுளுக்கு விருப்பமான மாதம் என்பதால் அப்போதுகூட வீடு கட்டலாம். பீடை மாதம் என்பதெல்லாம் கருத்தில்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தீமைகள் அதிகம் நேர வாய்ப்பில்லை.
மேலும், தை மற்றும் மாசி மாதங்களிலும் எவ்வித யோசனையும் இன்றி வீடு கட்டலாம். பொருளாதார மேன்மையும் இல்லத்தில் மகிழ்ச்சியும் குறையின்றி இருக்கும். |