|
ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராமநவமி என வழங்கப்படுகிறது. இது புனர்பூச நட்சத்திரம் உச்சத்திலிருக்கும் சுக்கில பட்சத்தின் ஒன்பதாம் நாளில் கொண்டாடப்படுகிறது. ராமபிரனை அன்று விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் பரிபூரண அருள் கிடைக்கும்.
அன்று எலுமிச்சை, புளி, வெல்லம் கொண்டு தயாரிக்கும் பானகமும், மோரில் தயாரித்த பானகமும் செய்வர். ராமரை துளசி மாலை அணிந்து வழிபடுவது சிறப்பாகும். சுக்லப்பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் ஸ்ரீ ராமாயணம் பாராயணம் செய்து ராமர் பூஜை செய்வது மிக மிக நல்லது.
ராமநாம மகிமையால் நமக்கு சர்வகாரிய சித்தி உண்டாகும். மகான் போதேந்திர சுவாமிகள் இரண்டு லட்சம் சுலோகங்கள் அடங்கிய பதினாறு கிரந்தங்களை எழுதியுள்ளார். அக்கிரந்தங்கள் முழுக்க முழுக்க ராமரின் மகிமையைத்தான் சொல்லுகிறது.
ராமன் நாமத்தை தினமும் சொல்பவர்களுக்கு சகல ஐஸ்வரியங்களும் பொங்கி பெருகும்.
|