|
புற்றுக்கும் முறை
பாம்பு புற்று காலி மனையில் இருந்தால் அதில் வீடுகட்ட தயங்க வேண்டாம். முறைபடி அந்த புற்றை அகற்றிவிட்டு பிறகு வீடு கட்ட தொடங்க வேண்டும். காலி இடத்தில் புற்று அமைந்த பகுதியைச் சுற்றி இனிப்பு கலந்த பால் ஊற்ற வேண்டும். மறுநாள் உடைந்த அரிசி மஞ்சள் கலந்த நாட்டுச் சர்க்கரை போண்றவற்றை புற்றைச் சுற்றித் தெளிக்க வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து பாம்பாட்டியை அழைத்து வந்து புற்றில் இருக்கும் பாம்புகளை பிடித்துச் செல்ல வைத்துவிட்டு புற்றை அகற்ற வேண்டும். பிறகு வீடு கட்டும் பணியை துவக்கினால் பாம்பு புற்று நீக்கபட்டதால் எந்த தோஷமும் உண்டாகாது. |