|
பல்வேறு துறைகளில் தம் பங்கை ஆற்றிய சமணர் கிளி விருத்தம், எலி விருத்தம், நரி விருத்தம் ஆகியவற்றையும் பாடியுள்ளனர். நரி விருத்தம் நிலையாமை பற்றிப் பேசுகிறது.
திருத்தக்கதேவரால் இயற்றப்பட்டது. இவைதவிர கணிதம்,சோதிடம்
ஆகியன பற்றிய நூல்களையும் சமணச்சான்றோர் இயற்றியுள்ளனர்.
கணக்கதிகாரம் போன்ற நூல்கள் ஒரு சிலவே நம்கைக்குக் கிடைக்கின்றன. சோதிடத்தில் சினேந்திரன் மாலை என்ற நூல்
கிடைக்கிறது. சமணர் தம் சோதிட அறிவை அறிய அது
பயன்படுகிறது. |