| கிரகணத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும்? |
| கிரகணத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும்?
கிரகணத்தில் பிறந்தவர்களை தீய சக்திகள் (பில்லி சூனியம், மாந்திரீகம், செய்வினை) எளிதில் தாக்காது. அதே தருணத்தில் ஒருவர் எந்த கிரகணத்தில் (சூரியன்/சந்திரன்) பிறந்திருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும்.
சூரிய கிரகணத்தில் பிறந்திருந்திருந்தால் அவரது ஜாதகத்தில் சூரியனுடன் ராகு அல்லது கேது இணைந்திருக்கும். அதுவே சந்திர கிரகணத்தில் பிறந்திருந்தால் சந்திரனுடன் ராகு/கேது சேர்ந்திருக்கும்.
சூரிய கிரகணத்தில் பிறந்தவர்களுக்கு உள்ள சூரியன்+ராகு/கேது சேர்க்கையை சனி அல்லது செவ்வாய் பார்த்தாலோ, அந்த சேர்க்கையுடன் சனி அல்லது செவ்வாய் இணைந்தாலோ அந்த ஜாதகர் வாழ்க்கையில் முன்னேறுவது கடினம். குடத்தில் இட்ட விளக்கு போல் அவர்களின் வாழ்க்கை இருக்கும். அதிகம் படித்திருந்தாலும் நல்ல வேலை கிடைக்காது.
கிரகணத்தில் போது பிறந்தவரின் ஜாதகத்தில் சூரியன்+ராகு/கேது அல்லது சந்திரன்+ராகு/கேது சேர்க்கையை குரு பார்த்தாலோ அல்லது அதனுடன் சேர்ந்திருந்தாலோ அவர்களுக்கு சூட்சும சக்திகள் இருக்கும்.
கடந்த 1999இல் என்னிடம் ஜாதகம் பார்க்க வந்த ஒருவருக்கு சூரியனுடன் ராகு, குரு, புதன் ஆகிய 4 கிரகங்களும் ரிஷபத்தில் இருந்தது. விருச்சிகத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் இந்த சேர்க்கையை பார்க்கும் வகையில் அமைந்திருந்தது. |