|
ரிஷப விரதம்
வைகாசி மாதத்தில் சிவபெருமானை வழிபடுபவர்கள் ரிஷப விரதம் மேற்கொள்வார்கள். வாகனங்கள் வைத்திருப்பவர்களும், புதிய வாகனங்கள் வாங்க விரும்புபவர்களும் இந்த விரதத்தை மேற்கொள்வது சிறப்பு.
அதாவது, இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம், ஏற்கனவே வாகனங்கள் வைத்திருப்பவர்கள் விபத்தின்றி அந்த வாகனங்களை இயக்க முடியும், வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் கூடிய விரைவில் அதை வாங்கி மகிழ்வார்கள் என்பதும் நம்பிக்கை.
இதே ரிஷப விரதத்தை மேற்கொண்டுதான் தேவர்களின் தலைவனான இந்திரன் ஐராவதத்தையும், குபேரன் புஷ்ப விமானத்தையும் பெற்றனர் என்கின்றன புராணங்கள்.
|