| கிரஹங்களுடைய ஆதிபத்தியம் கொண்டுள்ள ஸ்தான பலங்கள் |
|
கிரஹங்களை சுப கிரஹங்கள் அசுப கிரஹங்கள் என்று பிரித்திருந்தாலும் அதனுடைய ஸ்தான பலம் வைத்தே ஜாதகத்தினுடைய பலம் நிர்ணயிக்கவேண்டும்.
ஒன்று, ஐந்து மற்றும் ஒன்பதாம் ஸ்தான கிரஹங்கள் எப்பொழுதும் சுப கிரஹங்களாக கருதப்படவேண்டும்.
சுபாவ அசுப கிரஹங்கள் ஒன்று, நான்கு மற்றும் பத்தாம் ஸ்தானங்களுக்கு அதிபதிகளாக வரும்பொழுது சுப கிரஹங்களாக மாறுகின்றன
. மூன்று, ஆறு மற்றும் பதினொன்றாம் ஸ்தான அதிபதிகள் அசுப கிரஹங்களாக கருதப்படுகின்றன.
சுபாவ சுப கிரஹங்கள் நான்கு, ஏழு மற்றும் பதினொன்றாம் ஸ்தான அதிபதிகளாக வரும்பொழுது கேந்திராதிபத்திய தோஷத்தினால் அசுப கிரஹங்களாக மாறுகின்றன.
இரண்டு, எட்டு மற்றும் பன்னிரண்டாம் ஸ்தான அதிபதிகள் சுப தன்மையும் அசுப தன்மையும் இல்லாத சம கிரஹங்களாகும்.
சூரியனும், சந்திரனும் தவிர மற்ற ஐந்து கிரஹங்கள் எல்லாம் ஒவ்வொன்றும் இரண்டு ஸ்தானங்களுக்கு அதிபதிகளாகிறார்கள்.
சில ஜோதிடர்கள் எட்டாம் ஸ்தான அதிபதியை எப்பொழுதும் அசுப கிரஹமாகவே கணக்கிடுகிறார்கள். ஆனாலும் ஆதாரபூர்வமான ஜோதிட நூல்கள் எட்டாம் ஸ்தான அதிபதியை அதனுடைய மற்றைய ஸ்தான ஆதிபத்தியம் வைத்தே கணக்கிடவேண்டும் என்று கூறுகிறது. |