| குழந்தை பாக்கியம் தரும் விரதம் |
|
தீர்த்த நீராடலுக்கு முக்கியத்துவம் தரும் விழா மாசிமகம் ஆகும். மாசி மாதத்தில் பவுர்ணமியை ஒட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் இவ்விழா நடக்கும். தீர்த்தங்களுடன் அமைந்த பெரும்பாலான கோவில்களில், இந்நாளில் தெப்பத்திருவிழா நடக்கும். ஆண் குழந்தை வேண்டுபவர்கள், இந்நாளில் முருகனை வேண்டி விரதமிருந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.
பலன்: மாசி மகத்தன்று முருகப்பெருமானை வழிபடுவதால் ஆண் குழந்தை பிறக்கும். அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
|