| தனம். கண். வாக்கு. புதியன வருதல். புதிய நபர் வருகை (மனைவி. குழந்தை) ஷேர் மார்க்கெட். குடும்பம். இளைய சகோதரத் தின் இடமாற்றம். வரவு. குழந்தையின் தொழில் வெற்றி. தந்தையின் நோய். காலணிகள். கண். பண இருப்பு விலை மதிப்புமிக்க பொருள், தனஸ்தானம் (House of Finance), குடும்ப ஸ்தானம் (House of family life), வாக்கு ஸ்தானம் (House of speech),கொடுக்கல் - வாங்கல் 2 (தணாம்) செல்வம், செழுமையை, குடும்ப உறவுகள், பேச்சு, வலது கண், கழுத்து, படைப்பு திறன், மரணம். அடிப்படை பாதுகாப்பு விவகாரங்கள், குடும்பம் பிழைப்பு, டைனமிக், ஒப்பந்தங்கள் விதிகள். அனைத்து பண விஷயம் இந்த வீட்டை நிர்வகிக்கப்படுகின்றன. சம்பாதிக்கும் திறன். லாபங்கள், சக்தி வளங்களை, பாதுகாப்பு, பொருள் சாதனைகள் நகைகள், பங்குகள், பாதுகாப்பு, பார்வை, கடன் பத்திரங்கள், விலையுயர்ந்த கற்கள், நினைவகம், கல்வி, நாக்கு, மூக்கு, பற்கள், தாடை, குடும்பம், பணம், நிதி சுற்றி நிலைமைகள் பற்றிய தடயங்களை கொடுக்கிறது. இது வளர்ச்சி-வாய்ப்பு பகுதிகளில் சுட்டிக்காட்டுகிறது. உடைமைகள், பொருள் பாதுகாப்பு, அர்த்தமுள்ள உறவு. வங்கிகள், வருமானம், பாதுகாப்பு, வெற்றிகள், இழப்புகள், இந்த விஷயங்களை பற்றி நிதி நிலை மற்றும் உங்கள் கவலை, தொண்டை, அம்மா வழி தாத்தா,
பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்:
2ஆம் வீடு: முகம், ஆண்களுக்கு வலது கண், பெண்களூக்கு
இடது கண், வாய், நாக்கு,
இரண்டாம் வீட்டின் பலன்
இரண்டாம் வீட்டிற்கு தனஸ்தானம் (House of Finance), குடும்ப ஸ்தானம் (House of
family life), வாக்கு ஸ்தானம் (House of speech) ஆகிய வேலைகள் உண்டு. ஜாதகத்தில்
இரண்டாம் வீட்டிற்கு அதிபதி, அவர் அமர்ந்த இடம், அந்த வீட்டில் வந்து அமர்ந்த
கிரகம், அந்த வீட்டின் மேல் விழும் நல்ல மற்றும் தீய கிரகங்களின் பார்வை,
அம்சத்தில் இரண்டாம் வீட்டு அதிபதியின் நிலை ஆகிய காரணங்களால் வெவ்வேறு விதமான
பலன்கள் உண்டாகும்.
இரண்டில் சனி இருந்தால் கையில் காசு தங்காது. உத்தியோக ஸ்தானம் நன்றாக இருந்து நல்ல
ஆறு டிஜிட் சம்பளம் வந்தாலும் கையில் காசு தங்காது (Expense oriented horosocope)
அதேபோல இரண்டில் சனி இருந்தால், குடும்ப வாழ்க்கை அமையாது. சில அரசியல் தலைவர்களின்
ஜாதகத்தைப் பார்த்தால் அது தெரிய வரும்.
அப்படியே எழாம் வீட்டின் காரணமாக நல்ல மனைவி கிடைத்திருந்தாலும், அவளை இங்கே விட்டு
விட்டு அவன் பொருள் ஈட்ட துபாய் போன்ற நாடுகளுக்குப் போய்விடுவான். வருடத்தில்
ஐந்து நாட்கள் அல்லது
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பத்து நாட்கள் ஊருக்கு வந்து மனைவியோடு இருந்து
விட்டுப்போவான். அதை எப்படி சிறந்த குடும்ப வாழ்க்கை என்று சொல்ல முடியும்?
அதேபோல இரண்டில் சனி இருந்தால், வாயைத் திறந்தால் சண்டைதான். தர்க்கம்தான். அவன்
பேசுவது நியாயமாக இருந்தாலும் எப்போதுமே தர்க்கம் செய்யும் குணத்தால் மற்றவர்கள்
அவனை விரும்ப மாட்டார்கள்.
ராகு அல்லது கேது இருந்தாலும் அதே பலன்தான்.
இரண்டாம் வீட்டில் குரு அல்லது சந்திரன் அல்லது சுக்கிரன் போன்ற சுபக்
கிரகங்கள் இருந்தால் மேற்கூறியவற்றிற்கு எதிரான பலன்கள் நடக்கும். கையில் காசு
தங்கும், நல்ல குடும்ப வாழ்க்கை அமையும், நல்ல சொல்வாக்குக்குப் பெற்றுத்
திகழ்வான்.
ஒரு ஜாதகத்தில் இரண்டாம் வீடு நன்றாக அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல குடும்பத்தில் பிறக்க முடியும். சிறு வயது வாழ்க்கை நன்றாக இருக்கும்.
|