Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, V24 சாப்ட்வேர்-> Rs.11,000 Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000. Share Market Financial Astrology Software Rs.19750, திருமணதகவல் மைய சாப்ட்வேர் Rs.7500, Cell Phone App Rs. 1100
Pay online
ஜோதிட சாப்ட்வேர்கள் Email Online வழியாக 30 நிமிடங்களில் கிடைக்கும் GOVINDANE Cell: 88077 01887 WhatsApp : 88709 74887 Email id : vs2008w7@gmail.com
Astrologer use Only ஜாதகம் திருமணபொருத்தம்... APP Download செய்ய click here
Free RishiAstro APP Download click here Scan RishiAstro App Download

நீங்கள் பிறந்த ஊரை தேர்வு செய்யுங்கள் துள்ளியமாக பலன் இருக்கும்
நீங்கள் பிறந்த ஊர்
Select Gender :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
Code :
Subscribe to Channel Click here to find out the code number.
Subscribe to receive notifications about new
astrological research.


09 ஒன்பதம் வீடு
ஒன்பதம் வீடு தந்தை. மத ஆச்சாரம். குல வழக்கம். குரு. உடனே பலம் தரும் தெய்வம். மதப்பற்று. மறுஉலக தொடர்பு. பெரியவர்கள். தூரத்து செய்திகள். திருமண மண்டபம். கலாச்சார விருப்பம். நீண்ட தூரப் பயணம். தொழில் விரயம். தெய்வ வழிப்பாட்டு இடம். தம்பியின் மனைவி. ஒன்றினை தியாகம் செய்தல். பணம் புரட்டுதல். ஜபம். உயர் கல்வி. வெளிநாட்டுப் பயணம்,தந்தை, தந்தை வழி உறவுகள், பூர்வீகச்சொத்துக்கள், தான, தர்ம குணங்கள்,வெளி நாட்டுப் பயணங்கள், முயற்சி இன்றிக் கிடைக்கக்கூடிய ஆதாயங்கள்.------------------------------------------------------------------------------------------------------------------------------9 மாமியார், மத தத்துவம் மற்றும் ஒரு நம்பிக்கைகள், அதிர்ஷ்டம், கடந்த நேர்மையான நன்மைகள் இயற்கை வெகுமதிகள், திருமணம் ஆகாதவர், சடங்குகள், நீண்ட பயணம், அப்பா, மதம், சட்டம், தத்துவம், உயர் கல்வி, கனவுகள், தரிசனங்கள், உள்ளுணர்வு, மற்றும் உணர்வுகள் உடன் கையாள்கிறது. இது நம்பிக்கை, ஞானம், தெய்வீக வழிபாட்டிலும், யாத்திரைக்கு, தத்துவம், செல்வம், மத மனநிலைதான், தியானம், உள்ளுணர்வு, தியாகம் மற்றும் தொண்டு விதிகள். தொலைவில் உள்ள மற்றும் தொலைதூர இடங்களில், வெளிநாட்டு பயணம், நீண்ட பயணங்கள், தந்தை, கற்றல் மற்றும் கற்பித்தல், கனவுகள் மற்றும் தரிசனங்கள், நீண்ட பயணங்கள், காற்று மற்றும் கடல் பயணம், வெளிநாட்டு பயணங்கள், மற்றும் முழங்கால்கள். உங்கள் கூட்டாளியின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள். பொருள் தேடி, கூட்டு சிந்தனை, தத்துவம். விளம்பரம், இடுப்பு, வெளியீடுகள், டிராவல் ஏஜெண்ட். ஊடகங்கள், எல்லா வழிகளிலும் ஒரு எல்லைகளை விரிவாக்கம், புத்தகங்கள், இடுப்பு, தொடைகள், கப்பல் போக்குவரத்து, கடல் போக்குவரத்து, விமான துறை, சர்வதேச தொடர்புகள் பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்: 9ஆம் வீடு: இடுப்பு, இடுப்பு இணைப்புக்கள் அனைத்தும் ஒன்பதாம் வீடு. 1. ஒன்பதில் சூரியன் சென்று நல்லவிதமாக அமர்ந்திருந்தால், ஜாதகன் பொறுப்புணர்வு மிகுந்தவனாக இருப்பான். இறை நம்பிக்கை உள்ளவனாக இருப்பான். ஜாதகன் எதிலும் ஆர்வம் உள்ளவனாக இருப்பான். ரசனை, நகைச்சுவை உணர்வுகள் மிகுந்தவனாக இருப்பான். 2. ஒன்பதில் சூரியனும், புதனும் சேர்ந்து அமர்ந்திருந்தால் (அதற்கு புத ஆதித்ய யோகம் என்று பெயர்) ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், செல்வம் மிகுந்தவனாகவும் இருப்பான். 3. ஒன்பதில் சூரியனுடன், சுக்கிரன் கைகோர்த்து அமர்ந்திருந்தால் ஜாதகன் நோய்கள் உள்ளவனாகவும், மிகுந்த உடல் உபாதைகள் உள்ளவனாகவும் இருப்பான். 4, இங்கே சூரியன் கெட்டுப்போய் அமர்ந்திருந்தால் அல்லது தீயவர்களின் கூட்டோடு அமர்ந்திருந்தால், ஜாதகன் தெனாவெட்டாக இருப்பான். தன்னுடைய தந்தை, பெரியவர்கள் என யாரையும் மதிக்க மாட்டான். இறை நம்பிக்கை இல்லாதவனாக இருப்பான். 5. ஒன்பதில் குரு அல்லது சுக்கிரன் இருவரில் ஒருவர் அமர்ந்திருந்தாலும் அல்லது இருவரும் சேர்ந்து அமர்ந்திருந்தாலும் (5 பாகை இடைவெளியுடன்) அதோடு அவர்கள் ஒன்பதாம் அதிபனின் பார்வை பெற்றிருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டம் உடையவனாக வாழ்வான். அவனுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 6. லக்கினாதிபதியும், ஒன்பதாம் இடத்து அதிபதியும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால் (அதாவது ஒருவர் வீட்டில் இன்னொருவர் மாறி அமர்வது (The lagna lord and ninth lord exchanging their houses), ஜாதகன் எல்லா விதத்திலும் அதிர்ஷ்டம் உள்ளவனாக இருப்பான். The native of the horoscope will be very lucky in all respects. 7. ஒன்பதாம் இடமும், பத்தாம் இடமும் மிகவும் முக்கியமானதாகும். ஒன்பதிற்குப் பெயர் தர்ம ஸ்தானம். 10ற்குப் பெயர் கர்ம ஸ்தானம். அந்த இரு இடங்களுக்கும் உரிய வீட்டு அதிபர்களுக்குப் பெயர் தர்ம - கர்ம அதிபதிகள். அவர்கள் இருவரும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால் (அதாவது ஒருவர் வீட்டில் இன்னொருவர் மாறி அமர்வது The ninth lord and tenth lord exchanging their houses) அந்த யோகத்திற்குப் பெயர் தர்மகர்மாதிபதி யோகம். அந்த யோகம் பெற்றவன் அதீதமான பொருள் ஈட்டுவான். ஏராளமான தர்ம காரியங்களைச் செய்வான். கோவில்களுக்குத் திருப்பணி செய்வது, இலவச மருத்துவமனைகள் கட்டுவது, பள்ளிகள், கல்லூரிகளைக் கட்டுவது, பெரிய அளவில் அடிக்கடி அன்னதானம் செய்வது, ஏழைகள், எளிய மக்களுக்கு உதவிகள் செய்வது - ஆகிய செயல்கள் தர்ம காரியங்கள் ஆகும் (இது அதைப்பற்றித் தெரியாத இளைஞர்களுக்காக விவரிக்கப்பட்டுள்ளது அல்லது எடுத்துச் சொல்லப்பட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள்) 8. ஒன்பதாம் வீட்டில் குரு அல்லது சுக்கிரன் அல்லது சந்திரன் வந்து அமர்ந்திருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன். 9. ஒன்பதாம் வீட்டில் சனி அல்லது ராகு அல்லது கேது அமர்ந்திருந்தால், ஜாதகன் துரதிர்ஷ்டமானவன். 10. 11ஆம் இடத்து அதிபதி ஒன்பதில் அமர்ந்து, பத்தாம் இடத்து அதிபதியின் பார்வை பெற்றால், ஜாதகனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. 11. அதேபோல ஒன்பதாம் வீட்டுக்காரன் 2ல் அமர்ந்து, பத்தாம் வீட்டு அதிபதியின் பார்வை பெற்றாலும் ஜாதகனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. 12. ஒன்பதில் சந்திரன் அமர்ந்திருந்தால், ஜாதகன் அதிர்ஷ்டமானவன். வளமாக வாழக்கூடியவன். நிறையக் குழந்தைகள், உறவினர்கள், நண்பர் களை உடையவன். அதிகாரத்தில் உள்ளவர்களின் தொடர்பு உடையவன். கொள்கைப்படி நடப்பவன். பெருந்தன்மை உடையவன். 13. இங்கே அமரும் சந்திரன் நல்ல பார்வை பெற்று அமர்ந்தால், ஜாதகன் பல தர்மச் செயல்களைச் செய்வான். பலவிதமான சொத்துக்களை வாங்கிக் குவிப்பான். பல நாடுகளுக்கும் சென்று வருவான். 14. ஒன்பதில் சந்திரனுடன் சனியும் சேர்ந்தமர்ந்தால் அல்லது இங்கே அமரும் சந்திரன் சனியின் பார்வை பெற்றால், ஜாதகன் பலவிதமான துன்பங்களை அனுபவிக்க நேரிடும். 15. ஒன்பதில் சந்திரன் இருந்து, அந்தச் சந்திரனை, சனி, செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் பார்த்தால் (தங்களது பார்வையால்) ஜாதகன் ஒரு அரசனைப் போல வாழ்வான். (He will be a ruler) 16. சந்திரனுடன், செவ்வாய் சேர்ந்து ஒன்பதில் இருந்தால், ஜாதகனின் தாய்க்கு விபத்து போன்ற துன்பங்கள் நேரிடலாம். 17. இங்கே இருக்கும் சந்திரன் சுக்கிரனின் சேர்க்கை பெற்றால், ஜாதகன் நெறிமுறைகள் இல்லாதவனாக இருப்பான். பல பெண்களோடு தொடர்பு கொண்டு வாழ்வான். ஜாதகிக்கும் இதே பலன்கள்தான். 18. Second lord in the 11th, 11th lord in the ninth and ninth lord in the second (exchanges), the native will be very lucky. ஆதீதமான பொருள் சேரும். 19. 3ஆம் அதிபதியும், ஒன்பதாம் அதிபதியும் சேர்ந்து நல்ல நிலைமையில் இருந்தால் அல்லது வலுவாக இருந்தால், ஜாதகன் தன் சகோதரர்கள் மூலமாக பல உதவிகளைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பான். 20. 5ஆம் அதிபதியும், 9ஆம் அதிபதியும் சேர்ந்து நல்ல நிலைமையில் இருந்தால், ஜாதகனின் பின்வாழ்க்கை நன்றாக இருக்கும். அவன் தன்னுடைய வயதான காலத்தில் தன் குழந்தைகள் மூலம் வசதியாக வாழ்வான். 21. ஒன்பதாம் வீட்டு அதிபதி பாவ கிரகங்களின் வீட்டில் அமர்ந்தல் ஜாதகன் தன் தந்தையைத் தன் இளம் வயதிலேயே இழக்க நேரிடும். 22. லக்கினத்திற்கு ஏழில் சூரியன் நல்ல நிலைமையில் இருந்தால், ஜாதகனுக்கு அவனுடைய தந்தை மூலமாக செல்வங்கள் கிடைக்கும். 23. ஜாதகத்தில் சூரியன் எந்த இடத்தில் இருந்தாலும் - நல்ல நிலைமை யில் இருந்தால், ஜாதகன் தன் தந்தைக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியவன். 24. ஜாதகத்தில் சூரியன், சனி அல்லது ராகு அல்லது கேது அல்லது மாந்தியால் கெட்டிருந்தால், ஜாதகனால் அவனுடைய தந்தைக்குத் துன்பங்கள்தான் ஏற்படும். 25. சூரியனுக்குத் திரிகோணத்தில் செவ்வாயும் அல்லது சந்திரனுக்குத் திரிகோணத்தில் சனியும் இருந்தால், ஜாதகன், அவனுடைய பெற்றோர் களால் புறக்கணிக்கப்படுவான். 26.ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் சென்றமர்ந்தால், ஜாதகன் அதிகாரங்கள் உடையவனாக இருப்பான்.வேலையில் அல்லது தொழிலில் அல்லது ஆட்சியில் அல்லது அரசில் எப்படி வேண்டுமென்றாலும் அந்த அதிகாரம் அமையும். அந்த அமைப்பானது அவனது தொழில் ஸ்தானத்தைவைத்து மாறுபடும். ஆனால் அதிகாரங்கள் உடையவனாக இருப்பான். 27. ஒன்பதாம் இடத்தில் அமரும் செவ்வாயோடு சுக்கிரன் சேர்ந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் அல்லது பெண்கள் தொடர்பு உண்டாகும். ஜாதகனுக்கு வெளிநாட்டு வாழ்க்கை ஏற்படும். 28. ஒன்பதில் செவ்வாயும், சனியும் கூட்டாக அமர்ந்தால் ஜாதகன் போதைக்கு அடிமையாவான். போதை என்பது பல விதமான போதைகளில் ஒன்றைக் குறிக்கும் (addiction to women or some other things). பிடிவாதக்காரனாகவும், முரண்பாடுகள் உடையவனாகவும் இருப்பான். 29. ஒன்பதாம் இடத்தில் புதன் அமர்ந்தால், கல்வியாளனாக ஜாதகன் இருப்பான் (scholar). 30. ஒன்பதில், புதனுடன் சுக்கிரனும் சேர்ந்திருந்தால், ஜாதகன் விஞ்ஞானியாக அல்லது பெரிய இசை மேதையாக இருப்பான். கெட்டிக்காரனாக இருப்பான். அந்த அமைப்பானது அவனது தொழில் ஸ்தானத்தை வைத்து மாறுபடும். ஆனால் மேதையாக இருப்பான். 31. ஒன்பதில், புதனுடன் குரு சேர்ந்திருந்தால், ஜாதகன் சிறந்த அறிவாளியாக இருப்பான். நகைச்சுவை உணர்வு மேலோங்கியவனாக இருப்பான். தந்தையுடன் நட்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பான். பல அமைப்புக்களில் சிறப்பாக உரை யாற்றுபவனாக இருப்பான். வெளி நாடுகளில் உள்ள கழகங்களின் அழைப்பின் பேரில் சென்று உரையாற்றுபவனாக இருப்பான். 32. ஒன்பதில் சனி இருந்தால், ஜாதகன் தனித்து வாழும்படி ஆகிவிடும். சிலருக்குத் திருமண வாழ்க்கை இல்லாதுபோய்விடும். இந்த அமைப்புள்ள ஜாதகன் ராணுவத்தில் இருந்தால் பெரிய வீரனாகச் சிறப்படைவான். 33.ஒன்பதில், சனியுடன் சூரியனும் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குத் தன் தந்தை மற்றும் தன் குழந்தைகளுடன் நேசம் இருக்காது. 34.ஒன்பதில், சனியுடன் புதன் சேர்ந்திருந்து, நல்ல பார்வை எதுவும் இல்லை யென்றால், ஜாதகன் நம்பிக்கைக்கு உரியவனாக இருக்கமாட்டான். பலரையும் ஏமாற்றிப் பிழைப்பான். அவன் செல்வந்தனாக இருந்தாலும், இப்படிப்பட்ட குணமுடையவனாகத்தான் இருப்பான். 35.ஒன்பதில் குரு இருந்தால், ஜாதகன் சட்டத்துறையில் அல்லது தத்துவத்தில் நிபுணனாக இருப்பான். இங்கே அமரும் குரு நல்ல பார்வை பெற்றால், அபரிதமான பொருள் ஈட்டுவான். சொத்துக்கள் சேரும். சகோதரர்கள் மேல் நேசமுடைய வனாக இருப்பான். 36.ஒன்பதில் இருக்கும் குரு, சந்திரன் மற்றும் செவ்வாயின் பார்வை பெற்றால், ஜாதகன் ராணுவம் அல்லது காவல்துறையில் பெரிய அதிகாரியாக விளங்குவான். 37. ஒன்பதில் குருவுடன் சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்ந்தால், ஜாதகன் நடத்தை சரியில்லாதவனாக ஆகிவிடுவான். 38. ஒன்பதில் சுக்கிரன் இருந்தால், ஜாதகன் மிகவும் அதிர்ஷ்டமானவன். கல்வி, வேலை, மனைவி, குழந்தைகள் என்று எல்லாமே அவனுக்குச் சிறப்பாகக் கிடைக்கும். மகிழ்ச்சியாக வாழ்வான். 39. ஒன்பதில் சுக்கிரனும் சூரியனும் சேர்ந்திருந்தால், ஜாதகன் அருமையாகப் பேசக்கூடியவனாக இருப்பான். உடல் உபாதைகள் உடையவனாகவும் இருப்பான். 40. ஒன்பதில் சுக்கிரனுடன் சனி சேர்ந்திருந்தால் ஜாதகன் பஞ்சாயத்து, சமரசப் பேச்சுக்கள்,தூதுவராகச் செயல்படுவது ஆகியவற்றில் சிறந்து விளங்குவான். ஒரு அரசனின் கீழோ அல்லது ஒரு நாட்டு அரசிற்கோ தூதுவனாகச் செயல்படுவான். மனிதர்களைப் பற்றியும் உலக நடைமுறை விஷயங்களைப் பற்றிய அவனுடைய கருத்துக்களும், கண்ணோட்டங்களும் சிறப்பாக இருக்கும். 41.ஒன்பதில் சுக்கிரனுடன் சூரியனும், சனியும் சேர்ந்திருந்தால் ஜாதகன் notorius criminal ஆக இருப்பான். அல்லது அதுபோன்ற விஷயங்களில் தீவிர ஈடுபாடு உடையவனாக இருப்பான். 42. ஒன்பதில் ராகு இருப்பது பலவிதங்களில் நல்லதல்ல. அந்த ராகு வேறு நல்ல கிரகங்களின் பார்வை பெறவில்லை என்றால், ஜாதகன் கடுகடுப்பான ஆசாமியாக இருப்பான். வாழ்க்கை துன்பங்கள் நிறைந்ததாக இருக்கும். 43. ஒன்பதில் ராகு இருந்து ஜாதகனின் ஏழாம் வீடும் கெட்டிருந்தால், ஜாதகனுக்கு மிகவும் அவலட்சணமான மனைவி வந்து சேர்வாள். அவனுடைய மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. 44. ஒன்பதில் ராகு இருந்தால் பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்காது. ஜாதகத்தின் வேறு அமைப்புக்களால் கிடைத்தாலும், மிகுந்த வம்பு, வழக்கு, போராட்டங்களுக்குப் பிறகே கிடைக்கும். 45. ஒன்பதில் கேது இருந்தால், ஜாதகன் உணர்ச்சி வசப்படுபவன் (short tempered). மனநிலை பிரள்பவன். 46. ஒன்பதாம் இடத்துக் கேது, ஜாதகனுக்கு அவனுடைய பெற்றோர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்தாது. 47. ஒன்பதாம் இடம், தந்தை, தந்தைவழி உறவினர்கள், பூர்வீகச் சொத்துக்கள், வெளிநாட்டுப் பயணங்கள் அல்லது வெளிநாட்டு வாழ்க்கை, முயற்சி இன்றிக் கிடைக்கும் பலன்கள் (பாக்கியம்) ஆகியவை சம்பந்தப்பட்டது. 48. பெண்களுக்கு இந்த வீடு மிகவும் முக்கியமானது. இது நன்றாக அமையப் பெற்ற பெண் வாழ்க்கையில் எல்லா பாக்கியங்களையும் பெற்று மகிழ்வோடு வாழ்வாள். 49. இந்த வீடு சரிவர அமையாத மங்கை நல்லாள் வாழ்க்கையில் பலவித இன்னல்களுக்கு ஆளாவாள். 50. இந்த ஒன்பதாம் வீட்டிற்குரிய பலன்கள், அதன் அதிபதி, மற்றும் அதில் அமர்ந்துள்ள கிரகங்களின் தசா, புத்தி காலங்களில் கிடைக்கும் அல்லது உண்டாகும் அல்லது நடைபெறும். -------------------------------------------------- ஜோதிடம் என்பது கடல். வடமொழியிலும், தமிழிலும் ஜோதிட விதிகளை எழுதிய விற்பன்னர்கள் சுமார் இரண்டு லட்சங்களுக்கும் மேற்பட்ட விதி முறைகளை எழுதி வைத்துள்ளனர். சில முக்கியமான விதிகளை மட்டுமே ஒருவர் தன் மனதில் தக்க வைத்துக் கொள்ள முடியும் எல்லாவறையும் கற்று பண்டிதன் ஆவது இன்றைய சூழ்நிலையில் சாத்தியம் இல்லாதது. ஒரளவு தெரிந்து கொள்ளலாம். அதுவும் அர்வம், தன் முனைப்பு, முயற்சி, நேரத்தைச் செலவிட்டுக் கற்றுக்கொள்ளுதல், படித்தவற்றை திரும்பத் திரும்பப் படித்து மனதில் உருவேற்றுதல், குறிப்பாக involvement& dedication ஆகியவை இருந்தால்தான் ஒருவர் ஜோதிடத்தில் தேர்ச்சி அடைய முடியும். பிறகு, பல ஜாதங்களைப் பார்ப்பதன் மூலமும், பலருடன் உரையாடுவதன் மூலமும், அனுபவம் பெற்று முழுமை பெறலாம். அனுபவம் முக்கியமானது. படித்தல் மட்டும் அல்லது மனதில் வைத்தல் மட்டும் உதவாது. அதை நினைவில் கொள்ளவும். ********************************************************************** ஒன்பதாம் வீட்டு அதிபன் அமர்ந்த இடங்களுக்கான பலன்கள் (Results of the ninth lord occupying various houses in the horoscope!) 1. ஒன்றாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the lagna) நன்றாக இருந்தால்(If well placed) நட்பு வீடாக இருந்து நல்ல கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை கிடைத்தால்: நல்ல தந்தை அமைந்திருப்பார். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். ஜாதகன் தான தருமங்கள் செய்வான். சாஸ்திரங்கள், புராணங்களில் ஈடுபாடு இருக்கும். சமூகத்தில் பெரிய பதவி அல்லது அந்தஸ்து கிடைக்கும்! தெய்வபக்தி உள்ளவனாக இருப்பான். இறைவனின் அருள் முழுமையாக இருக்கும் (பக்தி இருந்தால், அருள் இருக்காதா என்ன?) தன் தந்தை, பெரியவர்கள், குரு (வாத்தியார்) ஆகியோரின் மேல் விசுவாசமுள்ளவனாக இருப்பான். கடந்து வந்த பாதையை ஒரு நாளும் மறக்க மாட்டான். மொத்தத்தில் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருப்பான். உதாரண மனிதனாக இருப்பான். பெண்ணாக இருந்தால் உதாரண மனுஷியாக இருப்பாள். தங்கள் வேலைகளைத் தாங்களே முடிக்கும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள். ஒன்பதாம் வீட்டுக்காரனும், லக்கினாதிபதியும் கூட்டணி போட்டு, லக்கினத்திலோ அல்லது வேறு நல்ல இடங்களிலோ (except in 6th, 8th & 12th places) அமர்ந்திருந்தால் ஜாதகன் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பான். செல்வாக்கும் அந்தஸ்தும் உள்ளவனாக இருப்பான். நன்றாக இல்லாவிட்டால் (it not well placed) மேலே சொன்னவற்றிற்கு எதிரான பலன்கள் நடைபெறும் அல்லது கிடைக்கும் --- 2. இரண்டாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in second house from the lagna) நன்றாக இருந்தால் (If well placed): ஜாதகனின் தந்தை செல்வந்தராகவும், செல்வாக்கு மிகுந்தவராகவும் இருப்பார். தந்தையின் சொத்துக்கள் அப்படியே ஜாதகனுக்குக் கிடைக்கும். அவனும் தன் தந்தையைப்போலவே வசதிகள் உடையவனாகவும் சமுதாயத்தில் செல்வாக்கு உடையவனாகவும் இருப்பான். அவர்கள் குடும்பம் உயர்வான நிலமையில் இருக்கும். நன்றாக இல்லாவிட்டால் (it not well placed) பூர்வீகச் சொத்துக்களை இழக்க நேரிடும். அல்லது அழிக்க நேரிடும். அவனுடைய குடும்பம் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும். 3. மூன்றாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the third house from the lagna) நன்றாக இருந்தால் (If well placed): நன்றாக எழுதக்கூடியவன். நன்றாக மேடைகளில் பேசக்கூடியவன். எழுத்தால் பெரும் பொருளை ஈட்டக்கூடியவன். பேசப்படுபவானக உயர்வான். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்காது. அவனே நிறைய சம்பாதிப்பான். சகோதரன், சகோதரிகளின் அன்பும், ஆதரவும் உள்ளவனாக இருப்பான். நன்றாக இல்லாவிட்டால் (it not well placed) அப்போதும் எழுதுவான். ஆனால் வேண்டாததை எழுதுபவனாக இருப்பான். வேண்டாதது என்பது என்னவென்று நீங்களே ஊகம் செய்து கொள்ளுங்கள். பேசியும், எழுதியும் சிக்கல்களில் மாட்டிக்கொள்வான். ஜாதகத்தில் கிரகங்கள் எந்த அளவிற்குக் கெட்டிருக்கிறதோ அந்த அளவிற்குச் சிக்கல்கள் ஏற்படும். வம்பு, வழக்கு, நீதிமன்ற விசாரணைகள் என்று அலைந்து சொத்துக்களை விற்றுக் கடைசியில் ஒன்றும் இல்லாத நிலைக்குத் தள்ளப்படுவான். 4. நான்காம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the fourth house from the lagna) நன்றாக இருந்தால் (If well placed): பெற்றோர்களின் முழு அன்பையும், ஆதரவையும் பெற்றவனாக இருப்பான். நிலம், வீடு, வண்டி, வாகனம், வேலையாட்கள் என்று அரச வாழ்க்கை வாழ்வான். உறவினர்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கும்.(அதில் என்ன ஆச்சரியம்?) நிலம், பூமி ஆகியவை பிறப்பில் இல்லாவிட்டாலும், ஜாதகன் தன் முயற்சியால் அதாவது ரியல் எஸ்டேட் பிஸினெஸ் செய்து, அவற்றை ஈட்டுவான் அல்லது தேடிப் பிடித்துவிடுவான். மகிழ்ச்சியாக இருப்பான். வாழ்வான். நன்றாக இல்லாவிட்டால் (it not well placed) வீட்டு வாழ்க்கை நன்றாக இருக்காது. பல பிரச்சினைகள் தலைவிரித்தாடும். இறுகிய மனம் படைத்த அல்லது அன்பில்லாத தந்தையால் சிறு வயதில் பல இன்னல்களுக்கு ஆளாகியிருப்பான். அல்லது கருத்து வேற்றுமை மிக்க பெற்றோர்களால் சிறு வயது வாழ்க்கை அவலமாக இருந்திருக்கும். ஒன்பதாம் வீட்டுக்காரன், நான்காம் அதிபதி ஆகியோருடன் ராகுவும் வந்து ஒட்டிக்கொண்டிருந்தால், அல்லது அவர்கள் இருவரும் ராகுவின் பார்வை பெற்றிருந்தால், ஜாதகனின் தாய் கணவனைப் பிரிந்து வாழ்பவளாக இருப்பாள் அல்லது விவாகரத்து பெற்றவளாக இருப்பாள். 5. ஐந்தாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the fifth house from the lagna) நன்றாக இருந்தால் (If well placed): ஜாதகனின் குழந்தைகள் அம்சமாக இருப்பார்கள். உங்கள் மொழியில் சொன்னால் சூப்பராக இருப்பார்கள். திறமைசாலிகளாகவும், நுண்ணறிவுடையவர்களாகவும் இருந்து ஜாதகனுக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுப்பார்கள். ஜாதகன் அரசுப் பணிகளில் இருந்தால், பல உயர்வுகளைப் பெற்றுப் பிரபலமாக வலம் வருவான். எல்லாச் செல்வங்களும் கிடைக்கும். குடும்பம் சிறந்து விளங்கும். ஜாதகனின் தந்தையும் புகழ் பெற்றவராக, செல்வாக்கு உடையவராக இருப்பார். மொத்தத்தில் ஜாதகன் அதிர்ஷ்டகரமான, வெற்றிகளை உடைய, மதிப்புடைய வாழ்க்கை வாழ்வான். நன்றாக இல்லாவிட்டால் (it not well placed) முன் பத்திகளில் கூறியவற்றிற்கு எதிரான வாழ்க்கை அமையும். 6 ஆறாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the sixth house from the lagna) நன்றாக இருந்தால் (If well placed): ஜாதகன் போராடி, வழக்குத் தொடுத்துதான் தன் தந்தையாரின் சொத்துக்களை அடையமுடியும். நன்றாக இல்லாவிட்டால் (it not well placed): தந்தாயின் சொத்துக்களை அடையமுடியாது. அல்லது கிடைக்காது. மேற்கொண்டு தந்தையார் நிலுவையில் வைத்துவிட்டுப்போன கடன்களைத் தன் கைக்காசைக் கொண்டு தீர்க்க வேண்டியதாயிருக்கும். பொதுவாக இந்த இடம் ஒன்பதாம் வீட்டு அதிபதி அமர்வதற்கு ஏற்ற இடமல்ல! எது எப்படி இருந்தாலும் பொது அமைப்பில் ஜாதகனுடைய தந்தை நோய்களை உடையவாரகவும், பிரச்சினைகளை உடையவராகவும் இருப்பார். அப்படியே சொத்துக்கள் கிடைத்தாலும், பல வழிகளிலும் அவற்றை இழக்க நேரிடும். ஜாதகனுக்கு வயதான காலத்தில் உடல் உபாதைகள் ஏற்படும்! 7. ஏழாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the seventh house from the lagna) நன்றாக இருந்தால் (If well placed): அடக்கம், அமைதி, அழகு என்று எல்லாம் அமைந்த மனைவி ஜாதகனுக்குக் கிடைப்பாள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். தந்தையின் சொத்துக்களாலும், பிற்காலத்தில் தன் பிள்ளைகளின் சம்பாத்தியத்தாலும் ஜாதகனின் வாழ்க்கை மகிழ்ச்சி உள்ளதாக இருக்கும். (The native will get a good and fortunate wife!) ஜாதகன் வெளிநாடு சென்று, பெரும் பொருள் ஈட்டுவான். சிலர் அங்கேயே செட்டிலாகி செளகரியமாக வாழ்வார்கள். நன்றாக இல்லாவிட்டால் (it not well placed): ஜாதகனுக்கு வெளி நாட்டு வேலையும், அங்கேயே தங்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஆனால் மனதில் மகிழ்ச்சி இருக்காது. 8. எட்டாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the eighth house from the lagna) நன்றாக இருந்தால் (If well placed): ஜாதகன் தன் தந்தையைச் சிறு வயதிலேயே இழந்திருப்பான். தந்தையின் சொத்துக்களை மற்றவர்கள் அபகரித்திருப்பார்கள். விதிவிலக்காகச் சிலருக்கு மட்டும் போரட்டத்திற்குப் பிறகு தந்தையின் சொத்துக்கள் கிடைக்கும். நன்றாக இல்லாவிட்டால் (it not well placed): ஜாதகன் வறுமையில் உழல்வான். அன்றாடம் காய்ச்சியாக வாழ நேரிடும். (Poverty also will live with him). வாழ்க்கையின் நடைமுறைகளைக் காற்றில் பறக்க விட்டுவிடுவான். தன் முன்னோர்கள் சேர்த்துவைத்திருந்த நாணயம், நம்பிக்கை, நல்ல பெயர்கள் ஆகியவற்றை ஒழித்துக் கட்டிவிடுவான். தந்தையின் உடல் நிலை கெட்டிருக்கும். இவனுக்கும் புத்திர தோஷம் உண்டாகும். 9. ஒன்பதாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the ninth house from the lagna) நன்றாக இருந்தால் (If well placed): ஒன்பதாம் வீட்டு அதிபதி தன் சொந்த வீட்டில் அதாவது ஒன்பதிலேயே, ஆட்சி பலத்துடன் இருந்தால், ஜாதகனின் தந்தை தீர்க்க ஆயுள் உடையவராக இருப்பார். தான, தர்மங்கள் நிறைந்த குடும்பம் அமையும். தந்தையின் சொத்துக்கள் தானாக வந்து சேரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் பெற்று உன்னத நிலையில் வாழ்வான். அனைவரின் ஆதரவும் கிடைக்கும். மகிழ்ச்சியாக இருப்பான். அடிக்கடி வெளி நாடுகளுக்குச் செல்வான். பெரும்பொருள் ஈட்டுவான். பலர் அங்கேயே சென்று தங்கி விடுவார்கள். பெரும் பொருள் ஈட்டி உன்னத நிலையில் வாழ்வார்கள். நன்றாக இல்லாவிட்டால் (it not well placed): ஒன்பதாம் அதிபதி கெட்டிருந்தால் அல்லது 6, 8, 12 ஆம் வீடுகளில் அமர்ந்திருந்தால் ஜாதகன் தன்னுடைய சின்ன வயதிலேயே தந்தையை இழக்க நேரிடும். 10. பத்தாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the tenth house from the lagna) நன்றாக இருந்தால் (If well placed): ஜாதகன் பெரும் புகழையும், வலிமைகளையும் பெற்றுத் திகழ்வான்.(The native will become famous and powerful!) அதீதமான பொருள் ஈட்டுவான். வசதியான ராஜ வாழ்க்கை வாழ்வான். தர்ம சிந்தனைகளையுடைய வாழ்க்கை அமையும்.சட்டத்திற்குக் கட்டுப்பட்ட குடிமகனாகத் திகழ்வான். செல்வாக்கு உள்ள குடும்பமாக இருக்கும். ஒன்பதாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் கூட்டணி போட்டு நல்ல கிரகங்களின் பார்வை பெற்றிருந்தால், ஜாதகனுக்கு அரசில் உயர் பதவிகள் கிடைக்கும். சிலர் அமைச்சராகக்கூட ஆவதுண்டு! தந்தையின் சொத்துக்கள் விருத்தியடையும். தான தர்மம், தெய்வ வழிபாடு மிகுந்தவர்களாக இருப்பார்கள். உறவினர்கள், நண்பர்கள், பெரிய மனிதர்களின் தொடர்பு என்று ஜாதகன் சிற்ப்பான வாழ்க்கை வாழ்வான். நன்றாக இல்லாவிட்டால் (it not well placed): மேற்கூறிய பலன்கள் இருக்காது! 11. பதினொன்றாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the eleventh house from the lagna) நன்றாக இருந்தால் (If well placed): ஜாதகன் அதீத செல்வமுடையவனாக இருப்பான். செல்வாக்கும், அதிகாரமுமுள்ள பல நண்பர்களை உடையவனாக இருப்பான். அவனுடைய தந்தையும் அப்படியே இருப்பார் நன்றாக இல்லாவிட்டால் (it not well placed): நன்றி, விசுவாசமில்லாத நட்புக்களாலும், உறவினர்களாலும், சொத்து சுகங்களை இழக்க நேரிடும். மோசடிகளையும், துரோகங்களையும் சந்திக்க நேரிடும். அதனாலும் சொத்துக்களை இழக்க நேறிடும். ஜாதகனுடைய தந்தையார் ஆரம்ப காலங்களில் செல்வாக்கு உடையவராக இருந்தாலும், பின்னாட்களில் தாழ்வான நிலையை அடைவார். அவருடைய சொத்துக்களும் நில்லாது போய்விடும் 12. பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the twelfth house from the lagna) நன்றாக இருந்தால் (If well placed): பூர்வீகச் சொத்துக்கள் நிலைக்காது. வம்பு வழக்குகளில் அனைத்தையும் இழக்க நேறிடும். சிற்றின்ப வேட்டைகளில் ஈடுபட்டு, அதன் மூலமும் சொத்துக்களை இழக்க நேரிடும். நன்றாக இல்லாவிட்டால் (it not well placed): ஏழ்மையான சூழல் நிலவும். வாழ்க்கையே போராட்டமாக இருக்கும். கடினமாக உழைக்க வேண்டும். பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். சில அமைப்பு உள்ளவர்களுக்குத் தந்தை சிறுவயதிலேயே இறந்திருப்பார். ஜாதகனுக்கு ஒரு பைசாக் கூட பணம் இல்லாத நிலைக்கு ஆளாக்கிவிட்டுச் சென்றிருப்பார். எது எப்படியோ இந்த ஒன்பதாம் அதிபதி என்று மட்டுமில்லை - எந்த வீட்டு அதிபதியும் லக்கினத்திற்குப் பன்னிரெண்டாம் வீட்டில் அமர்வது உசிதமல்ல! பிரச்சினைதான். அது அங்கே வந்து அமரும் கிரகத்திற்கு உரிய வீட்டை முற்றிலும் பாதிக்கும். இந்தப் பதிவில் சொல்லப்பட்டுள்லது அனைத்துமே பொதுவிதிகள்தான். காரகனின் நிலைமை இது அனைத்தையும் மாற்றிவிடும். புரட்டிப்போட்டுவிடும். அதையும் கணக்கிட்டுத்தான் முடிவிற்கு வரவேண்டும். ஓன்பதாம் வீட்டில் குரு இருந்து அதை செவ்வாய் பார்த்தால் அரசியல் வாழ்க்கைக்கு அது மிகவும் நன்மையளிக்கும்
உங்கள் பிறப்பு சுய ஜன ஜாதகத்தில் ஆராய்ச்சி செய்து பாருங்கள்
RishiAstro App|எவ்வாறு பயன்படுத்துவது CLICK HERE GO...
வருமாணம் பிரச்சனையா|காரணம் என்ன| எளியமுறையில் சரிசெய்ய| psssrf CLICK HERE GO...
உங்கள் நட்சத்திரம் |Positive-வ அல்லது Negative-வ|எளிய பரிகாரம் |Psssrf CLICK HERE GO...
உங்கள் நட்சத்திரத்திற்கு |தினம் பயன்படும் பொருல்கள் வைத்து |எளிய முறை பரிகாரங்கள் CLICK HERE GO...
செவ்வாய் தோஷம் செவ்வாய் தோஷத்தை ஒருவரின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் இருப்பதாக கருதலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கல்யாணத் தடைக்கு ஆளாவார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது லக்னம், சந்திரன், சுக்கிரன் முதலியவற்றுக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாகக் கருத வேண்டும். மேற்கூறிய இடங்களில் செவ்வாய் தோஷமானது லக்கினத்திலிருந்து பார்க்கும் போது முழுமையானதாகவும், சந்திரன் நின்ற வீட்டிலிருந்து பார்க்கும் போது பாதி (1/2) தோஷத்தையும் மற்றும் சுக்கிரனிலிருந்து பார்க்கும்போது கால் பங்கு(1/4) தோஷத்தையும் அளிக்கும். பின்வரும் கிரக அமைப்புகளால் செவ்வாய் தோஷம் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் 2, 4, 7, 8 மற்றும் 12-ஆம் வீட்டிலிருந்தாலும், விதிவிலக்காகி செவ்வாய் தோஷம் இல்லாமல் செய்துவிடும். அவற்றைப் பற்றி விளக்கமாக இப்போது, காண்போம். CLICK HERE GO...
உங்களுக்கு நடக்கும் தசாபுத்தி |நன்மை கொடுக்கும் அதிரிஷ்ட |நீங்கள் தெரிந்துகொள்ள CLICK HERE GO...
அனந்த காலசர்ப்ப யோகம் ராகு 1வது வீட்டில் இருக்கிறது. கேது 7வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
குலிகா காலசர்ப்ப யோகம் ராகு 2வது வீட்டில் இருக்கிறது. கேது 8வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
வாஸுகி காலசர்ப்ப யோகம் ராகு 3வது வீட்டில் இருக்கிறது. கேது 9வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
சங்கினி காலசர்ப்ப யோகம் ராகு 4வது வீட்டில் இருக்கிறது. கேது 10வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
பத்ம காலசர்ப்ப யோகம் ராகு 5வது வீட்டில் இருக்கிறது. கேது 11வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
Save customer details psssrf.org.in, Astrology software, CLICK HERE GO...
மகாபத்ம காலசர்ப்ப யோகம் ராகு 6வது வீட்டில் இருக்கிறது. கேது 12வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
தக்‌ஷக காலசர்ப்ப யோகம் ராகு 7வது வீட்டில் இருக்கிறது. கேது 1வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
1 2 3


தலைப்பு
சூரியன் - அசுவனி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பூசம் 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
ஆணுக்கு அஸ்வனி மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...
தலைப்பு
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
விருச்சக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சந்திரன் மேஷ ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
சந்திரன் ரிஷப ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...


ஜாதக ராசி நவாம்சம் கோச்சரம் பலன்
ஜாதகர் பெயர் :
பாலினம் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Longitude
Latitude பிறந்த நாடு :பிறந்த மாவட்டம் Distric :பிறந்த மாநிலம் State:பிறந்த மாநில குறியீடு StateCode :பிறந்த ஊர் City:Longitude Latitude

திருமண பொருத்தம் பார்க்க ஜாதக பொருத்தம் விவாக பொருத்தம்
ஆண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க
பெண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க

ஜாதகர் பெயர் :
ஆண் பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Latitudegovi அட்சரேகை நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு : Longitudegovi தீர்க்கரேகை:


ஜாதகர் பெயர் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric :


ஜோதிடம் கற்க ஜோதிட சாப்ட்வேர் கிடைக்கும். WhatsApp : 8870974887 and Cell : 8870974887 கோவிந்தன் WhatsApp : 8870974887



கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது

Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, 33 சாப்ட்வேர்-> Rs.11,000 USB KEY & PASSWORD இல்லை - Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000 USB KEY உண்டு 12/15/2025 7:27:53 PM


Save customer details psssrf.org.in, Astrology software,



பணபகை நட்சத்திரம் தரும் சிறப்பு | 18வது நட்சத்திரம் |அவர் திசை நடக்கும் காலத்தில்| psssrf



உங்கள் நட்சத்திரம் |Positive-வ அல்லது Negative-வ|எளிய பரிகாரம் |Psssrf