|
தலைவாசல்
நமக்கு வாய் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு ஒரு வீட்டிற்கு தலை வாசல் முக்கியம். தலைவாசலில் நான்குச் சட்டங்கள் இருக்கும். அவற்றில் கீழ் குறுக்குச் சட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. வெளியிலிருந்து நோய்க் கிருமிகள் வீட்டிற்கும் வருவதைத் தடுத்து வீட்டு உறுபினர்களின் ஆரோக்கியத்தை பாதுகாபது இந்தக் கீழ்க் குறுக்குச்சட்டம்தான். வீட்டின் தலைவாசலுக்கும், பின்வாசலுக்கும் கீழ்க் குறுக்குச் சட்டம் இருக்க வேண்டியது அவசியமாகும். தலை வாசலுக்கு நேர் எதிரே பின் வாசல் அமைய வேண்டும். தலைவாசலைவிட பின் வாசல் உயரமாகயிருக்கக் கூடாது. வீட்டில் ஒரு தலைவாசல் மட்டும் வைத்தால் அதை வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பக்கத்தில் வைபதே சிறந்த பலன்களைத் தரும். வீட்டின் கிழக்கிலும் தெற்கிலும் வீதிகள் இருக்கும்பட்சத்தில் கிழக்கு பாகத்திலும், வடக்கிலும் தெற்கிலும் வீதிகள் இருக்கும் பட்சத்தில் வடக்கு பாகத்திலும் தலைவாசல் வைக்க வேண்டும். வீட்டிற்கு கிழக்கிலும்,மேற்கிலும் வீதிகள் இருக்குமானால்கிழக்கு பாகத்திலும், வீட்டிற்கு வடக்கு,கிழக்கு
ஆகிய பகுதிகளில் வீதிகள் இருக்குமானால் வடக்கிலும் தலை வாசலை அமைக்க வேண்டும். இரண்டு தலைவாசல் அமைக்கும் பட்சத்தில் அவற்றை கிழக்கு-தெற்கு அல்லது கிழக்கு-மேற்கு அல்லது கிழக்கு -வடக்கு பாகங்களில் அமைக்க வேண்டும். மூன்று தலை வாசல் அமைக்கும் போது கிழக்கு-வடக்கு-மேற்கு ஆகிய மூன்று திசைகளில் அமைக்க வேண்டும். இவ்வாறு மூன்று தலைவாசல் அமைபதுசிறபான பலன்களைத் தரும். கிழக்கு-வடக்கு-தெற்கு ஆகிய மூன்று திசைகளில் வைக்கலாம். ஆனால் கிழக்கு-மேற்கு-தெற்கு ஆகிய மூன்று திசைகளில் மட்டும் நுழைவாசல்களை அமைக்கக் கூடாது. பெரிய வீடுகளில் நான்கு தலைவாசல்கள் அமைக்கும் போது வடக்கு-கிழக்கில் உம்ள தலைவாசல்கள் மேற்கு-தெற்கில் உள்ள தலைவாசல்களைவிட சற்று உயரம் அதிகமானதாகயிருக்க வேண்டும். |