|
வடக்கு மத்திய பகுதி:
வீட்டின் வடக்கு திசையின் மத்தியில் அமையும் வடக்கு மத்திய பகுதி அறை செல்வத்திற்கு அதிபதியான குபேரன் தங்கியிருக்கும் அறையாகும். எனவே இந்த பகுதிக்கு வீட்டில் செல்வவளத்தை உண்டு பண்ணும் சக்தி உண்டு. இந்த அறையின் தெற்கு ,மேற்கு ,தென் மேற்கு சுவர்களில் கபோடுகள் வைத்து அதில் பணம், நகை போன்றவற்றை வைத்து புழங்குவது வீட்டின் செல்வ செழிபை அதிகரிக்கும். எபோதும் தாராளமான பணபுழக்கள் இருந்து கொடேயிருக்கும். பெண்கள் மற்றும் இளைய தலைமுறையினர் தங்கும் அறையாக இந்த அறையை பயன் படுத்திக் கொள்ளலாம். வடகிழக்கு அறைக்கு அடுத்ததாக அதிக முக்கியத்துவம் கொடுத்து மிகவும் தூய்மையாக பாதுகாக்க வேண்டிய அறை வடக்கு மத்திய பகுதி அறை யாகும். இதை படிக்கும் அறையாகவும், கம்பியூட்டர்கள் போன்றவற்றை பயன்படுத்தும் அறையாகவும் பயன்படுத்தினால் மாணவர்களின் கல்வி சிறக்கும். இந்த அறையில் பரண்கள் இல்லாமல் இருபது நல்லது. |