|
Untitled Page
1.நீங்க குழந்தை இருக்கா? இல்லையா? என்று தெரிந்து கொள்வதைப் பற்றி சொல்லிதந்திங்க
அதுல 5ம் வீட்டின் அஷ்ட வ்ர்கம் அதில் இருக்கிற கிரகத்தின் சுய வர்கம்,5ம் வீட்டின்
அதிபதி சொன்று அமர்ந்திருக்கும்
வீட்டின் அஷ்ட்வர்கம் அதன் சுய வர்க ப்ரல் ம்ற்றும் புத்திரகாரன் குரு
அமர்ந்திருக்கும் வீட்டின் அஷ்டவர்கம் அதன் சுயவர்கம் இந்த மூன்றையும் பார்த்துதான்
குழந்தை இருக்கிறதா இல்லையா என்று சொல்லமுடியும்
என்று எடுத்துகாட்டுடன் விளக்கினீர்கள் மேலும் குருவின் பார்வை 5ஆம் வீட்டில்
விழுந்திருந்தாலும் நிச்சயமா இருக்கும் சொன்னீங்க ஆனால் எத்தனை குழந்தைங்க அதுல
பொண்ணு பையன் எத்தனை என்று கண்டு
பிடிக்க கற்றுத் தாருங்கள். மேலும் 5ம்வீட்டை 9ம் வீட்டை பார்க்கணும் என்று ரொம்ப
பேரு சொல்றங்க நீங்க இதைப்ப்ற்றி சொல்லி தாங்க எல்லோருக்கும் ரொம்ப பயனாக
இருக்கும்.
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்குக் குழந்தைப்பேறு முக்கியமானது. ஒரு ஜாதகனுக்கு
அல்லது ஜாதகிக்கு எத்தனை குழந்தைகள் என்று பார்ப்பதைவிட அவர்களுக்கு ஒரு
குழந்தையாவது பிறக்குமா? என்று பார்க்க வேண்டும்! அதைவிட முக்கியம் ஜாதகனுக்கு
அல்லது ஜாதகிக்குத் திருமணம் ஆகுமா? அல்லது ஆகாதா? என்று பார்க்கவேண்டும்!
சரி திருமணம் ஆகிவிட்டது. குழந்தைப்பேறு இருக்கிறதா? என்று தம்பதிகள் இருவரில்
ஒருவர் ஜாதகத்தை மட்டும் பார்த்துப் பயன் இல்லை. அந்த பாக்கியம் இருவர்
ஜாதகத்திலும் இருக்க வேண்டும்.
குழந்தைப்பேறு என்பது கூட்டு முயற்சி:-))))
1. குழந்தை உண்டு
2. குழந்தை இருக்காது
3. ஒரு குழந்தை மட்டுமே இருக்கும்
4. ஆண் விந்தில் உயிர் அணுக்கள் என்னிக்கையில் குறைபாடு
5. பெண்ணிற்குக் கர்ப்பப்பை அல்லது கர்ப்பப்பையில் குறைபாடு
6. கர்ப்பச் சிதைவுகள். அல்லது குழந்தை இறந்தே பிறக்கும் தன்மை
என்று தலையைக் கிறுகிறுக்க வைக்கும் விஷயங்கள் ஐந்தாம் பாவத்திற்கு உண்டு!
சுருக்கமாகச் சொன்னால் பெண் என்பவள் நிலம். ஆண் என்பவன் விதை. இரண்டுமே நன்றாக
இருக்க வேண்டும். இருந்தால்தான் செடி முளைக்கும். இல்லை என்றால் நர்சரியில் இருந்து
செடியை வாங்கி வளர்க்க வேண்டியது தான். அதற்குப் பெயர் தத்து எடுத்தல், சுவீகாரம்
Progeny = descendants எனும் ஆங்கிலச் சொல், சந்ததி, வம்சம் என்று பொருள் படும்
இதை அறிந்துகொள்ள குறுக்கு வழி ஒன்றை முன்பு சொல்லிக்கொடுத்தேன். ஐந்தாம்
வீடு.ஐந்தாம் வீட்டு அதிபதி அமர்ந்திருக்கும் வீடு, புத்திரகாரகன் குரு
அமர்ந்திருக்கும் வீடு, ஆகிய 3 வீடுகளிலும் 28 பரல்களுக்குமேல் இருக்க வேண்டும்.
இருவர் ஜாதகத்திலும் இருக்க வேண்டும்.
கணவன் மனைவி இருவரில் ஒருவர் ஜாதகத்தில் சரியான அளவில் பரல்கள் இருந்து, இன்னொருவர்
ஜாதகத்தில் பரல்கள் சரியாக இல்லை என்றால், குழந்தை பிறப்பது தாமதமாகும்.
இருவர் ஜாதகத்திலுமே பரல்கள் மிகக்குறைவாக இருந்தால், குழந்தை இருக்காது!
ஜாதகத்தில் குழந்தை பாக்கியத்திற்கான முக்கிய அமைப்புக்கள்:
1. நல்ல நிலையில் உள்ள குரு பகவான்
2. நல்ல நிலையில் உள்ள ஐந்தாம் வீடும், அதன் அதிபதியும்
3. Saptamsa chart
4. பெண்கள் ஜாதகத்தில் ஒன்பதாம் வீடு
5. நன்மை தரக்கூடிய நடப்பு தசை/புத்திகள்
மேலே உள்ளவற்றில் கோளாறு இருப்பின், அது குழந்தை பாக்கியத்திற்குத் தடையை
உண்டாக்கும். பொதுவாக சனி, செவ்வாய் மற்றும் 6 & 8ஆம் இட அதிபதிகள்
சம்பந்தப்பட்டாலும், தாமதங்கள் தடைகள் உண்டாகும். குரு பகவான் 6 அல்லது 8ல் போய்
சுகமாக உட்கார்ந்து கொண்டுவிட்டாலும் சிக்கல்தான்!
குழந்தைகளின் எண்ணிக்கை சப்தாம்ச சக்கரத்தின் மூலம் தெரியும். அதை அலசுவதிலும் பல
சிக்கல்கள் உள்ளன. (problems like miscarriages and difficulty in conception)
அதைப் பிறகு நேரம் இருக்கும்போது அலசுவோம். இப்போது அஷ்டகவர்க்கத்தை மட்டும்
உபயோகித்துப் பலனை அறிந்து கொள்ளுங்கள்.
சில கூட்டு கிரக அமைப்புகள் (அதாவது சுக்கிரன் ராகுவுடன் அல்லது சனியுடன் 5ஆம் இடத்தில் சேர்ந்திருந்தால்) அப்பெண் மாற்றானுக்கு பிள்ளை பெறுவாள் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அதே 5ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய், சனி ஆகிய 3 கிரகங்கள் அமையப் பெற்றால் இதேபோல் நிகழும்.
அடுத்ததாக 5வது இடத்தில் கொடிய கிரகங்கள் (செவ்வாய், ராகு, சனி) அமரும்போது அப்பெண் தான் பெற்ற குழந்தையை தூக்கி எறிவாள் என்றும் ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.
|