வீடு கட்டுவதற்க்கு தவிர்க்க வேண்டிய மாதங்கள் |
வீடு கட்டுவதற்கு உகந்த மாதங்களை தெரிந்து வைத்திருக்கும் அதேவேளையில், எந்தெந்த மாதங்களில் வீடு கட்டக்கூடாது என்பதையும் அறிய வேண்டியது அவசியம் ஆகும்.
சித்திரை மாதத்தில் வீடு கட்டும் பணியை துவக்காமல் இருப்பதே நல்லதாகும். அதையும் மீறி வீடு கட்டினால், அனைத்துப் பணிகளும் முடிப்பதற்குள் பொருளாதார சிக்கல் உள்ளிட்ட பல சோதனைகளை சந்திக்க நேரிடலாம்.
அதேபோல் ஆனி மற்றும் ஆடி மாதமும் தவிர்க்கப்பட வேண்டிய மாதங்களாகும். இம்மாதங்களில் வீடு கட்டினால் எவ்வித நன்மையும் உண்டாகாது என மனையடி சாஸ்திரம் வலியுறுத்துகிறது. குறிப்பாக ஆடி மாதத்தை தவிர்த்து விடுவது நல்லது.
புரட்டாசி மாதத்திலும் வீடு கட்டுதல் வேண்டாம் என சாஸ்திரம் கூறுகிறது. அதேபோன்று, தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனியில் வீடு கட்ட வேண்டாம். ஏனெனில் வறுமை நிலைக்கு ஆளாக நேரிடும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் குடும்பத்தில் அமைதி நிலவாது.
அதேநேரத்தில் தமிழ் மாதங்களில் சமநிலையில் காணப்படும் மாதம் ஐப்பசி ஆகும். இம்மாதத்தில் வீடு கட்டினால் குறை உண்டாகும் என்பதையும் சொல்ல முடியாது; நிறை உண்டாகும் என்றும் சொல்வதற்கில்லை.
இவ்வாறு எந்தெந்த மாதங்களில் வீடு கட்டக்கூடாது என்பதை அறிந்து செயல்படுவது வாழ்வில் வளம் பெற உறுதுணைபுரியும் என்று மனையடி சாஸ்திரம் விளக்குகிறது. |