| ஐந்தாம் அதிபதி 1ஆம் வீட்டில் |
| 1ல் இருந்தால்:
மிகவும் நல்லது. அதோடு நல்ல சேர்க்கையும், பார்வையும் பெற்றிருந்தால்
தலைமைப் பதவி தேடிவரும். நிறைய வேலை ஆட்கள் இருப்பார்கள். அமைச்சராகக்
கூட ஆகலாம், நீதிபதியாகவும் ஆகலாம். (அது பத்தாம் இடத்துடனும் சம்பந்தப்பட்ட
தாகையால், நான் ஆணிபிடுங்கும் கம்பெனியில் டீம் லீடராக இருக்கிறேன். எனக்கு
எப்படி நீதிபதி பதவி தேடி வரும் என்று கேட்க வேண்டாம்.
அந்த டீம் லீடர் பதவி கூட தலைமைப் பதவிதானே!)
அதே நேரத்தில் 5th lord ஒன்றில் அமர்ந்தும், தீய கிரகங்களின் பார்வை, அல்லது
சேர்க்கை பெற்றிருந்தால் மேலே கூறியவற்றிற்கு எதிரான பலன்களே நடைபெறும்
சராசரி சேர்க்கை என்றால் மிக்சட் ரிசல்ட்!
பொதுவிதி. தனிப்பட்ட ஜாதகங்களில் உள்ள
கிரகஅமைப்புக்களை வைத்து இந்தப் பலன்கள் கூடலாம் அல்லது குறையலாம் கிரக
சேர்க்கைகள், மற்றும் கிரக பார்வைகளை வைத்துப் பலன்கள் மாறுபடும் |