| நாக சதுர்த்தி விரத வழிபாடு |
|
ஆடி மாதம் வளர்பிறைச் சதுர்த்தியில் மகளிர் விரதமிருந்து நாகத்தை வழிபடுவது நாக சதுர்த்தி விரதம். இதனால் நாக தோஷங்கள் அகலும்; மகப்பேறு கிடைக்கும். நாக சதுர்த்தியன்று நாகக்கல்லைப் பிரதிஷ்டை செய்தால் மகப்பேறு கிடைப்பது உறுதி. சிலர் உடன் பிறந்தவர்களுக்காக நாக சதுர்த்தி விரதம் காக்கின்றனர்.
புற்றுக்குப்பால் வார்த்து,புற்று மண்ணையே கவசக்காப்பாக அனைவரும் நெற்றியில் இட்டுக் கொள்கின்றனர். வட நாட்டில் கொண்டாடப்படுகிற ராக்கி அல்லது ரட்சாபந்தனுக்கு நிகரானது நாக சதுர்த்தி விரதம்.
|