|
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று மாலை குளித்து, சத்திய நாராயணரை துளசி. மற்றும் செண்பக மலர்களால் அர்ச்சனை செய்து பால், பாயசம், கற்கண்டு, கனி வகைகள் வைத்து வணங்கிய பிறகு இரவு உணவு உண்ண வேண்டும். இதனால் துன்பங்கள் விலகிக் துடும்பத்தில் சுபிட்சமும், செல்வமும் சேரும் என்பது முதியோர் வாக்கு. சித்திரை மாதத்தில் வரும் போது சித்ரா பவுர்ணமி என்று சிறப்பு பெறுகிறது.
இதை அம்மன் கோவில்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள். மாதந்தோறும் பவுர்ணமி விரதம் இருப்பவர்கள் சித்ராபவுர்ணமி அன்று சத்திய நாராயணபூசையை முடித்து விட்டு, மகாவிஷ்ணு - மகா லெட்சுமி கோவிலுக்கு சென்று வணங்கி, பிறகு தங்களால் முடிந்த வரை அன்னதானம் செய்துவது நலம் தருவதோடு, இறையருள் பெறவும் உதவும்.
|