|
ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும், அங்காரக தோஷமும் செவ்வாய் நீச்சமடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் தோஷங்கள் நீங்க செவ்வாய் கிழமை விரதம் இருக்க வேண்டும். செவ்வாய் தோறும் அதிகாலையில் எழுந்து குளித்து சிவப்பு நிற ஆடை அணிந்து அம்மன் கோவிலுக்கு சென்று செந்நிற மலர்கள் அல்லது செண்பக மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நிவேதனத்திற்குச் செந்நிறக்கனிகளே உகந்தது. காலையில் அம்மனையும், மாலையில் முருகனையும் வழிபட வேண்டும்.ஏழைகளுக்கு துவரம் தானம் செய்தல் நல்லது.சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம், கொடுக்க வேண்டும். செம்பவழத்தினை மோதிரத்திலோ கழுத்துச் சங்கிலிலோ அமைக்க வேண்டும்.
இவ்விரதம் இருப்பவர்களுக்கு அம்மன் அருள் கிடைக்கும். ரத்த சம்மந்தமான நோய்கள் நீங்கும். |