|
கதவுகள்
வீட்டில் உள்ள எல்லாக் கதவுகளைம் ஒரே வகையான மரத்தால் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் சிறபான பலன்கள் உண்டாகும் இரண்டு வகையான மரங்களில் கதவுகளைச் செய்வதால் நடுத்தரமான பலன்களும், மூன்று வகையான மரங்களில் செய்வதால் தீமையான பலன்களும் விளைம். கதவுகளின் எணிக்கை இரட்டைபடையில் இருக்க வேண்டும். ஆனால் பத்து மற்றும் இருபது ஆகிய எணிக்கையில் கதவுகள் இருக்கக் கூடாது. இதனால் தீமையான பலன்கள் விளையும். வீட்டின் அமையும் கதவுகளின் எணிக்கைக்கேற்ப பலன்கள் விளைகிறது. ஒருவீட்டில் ஒரு கதவு மட்டும் இருந்தால் தீய பலன்கள் உருவாகும். இரண்டு கதவுகள் இருந்தால் நற்பலன்கள் விளையும். மூன்று கதவுகள் இருந்தால் விரோதம் அதிகரிக்கும். நான்கு கதவுகள் இருந்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். ஐந்து கதவுகள் இருந்தால் அடிக்கடி குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நோய்கள் உணிடாகும். ஆறு கதவுகள் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஏழு கதவுகள் இருந்தால் ஆபத்துகள் அனுகும். எட்டுக் கதவுகள் இருந்தால் செல்வம் மேலும் மேலும் அதிகரிக்கும். ஒன்பது கதவுகள் இருந்தால் வியாதிகள் அடும். பத்துக் கதவுகள் இருந்தால் வீட்டில் அடிக்கடி திருட்டு போகும். பதினோருக் கதவுகள் இருந்தால் தீய பலன்கள் உருவாகும். பன்னிரடுக்கதவுகள் இருந்தால் குடும்பத்தில் உம்ளவர்கள் பார்க்கும் வியாபாரம் தொழில் சிறப்படையும். பதிமூன்று கதவுகள் இருந்தால் குடும்பத் தலைவரின் ஆயுள் குறைம். பதினான்கு கதவுகள் அமைந்திருந்தால் செல்வம் அதிகள் சேரும். ஒரு வீட்டில் பதினைந்து கதவுகள் அமைந்திருந்தால் தீய பலன்கள் உடாகும். வீட்டில் பதினாறுக் கதவுகள் இருந்தால் நற்பலன்கள் உருவாகும்.
கதவுகளின் எணிக்கையில் சுற்றுச்சுவர்,அவுட் ஹவுஸ் போன்றவற்றில் இருக்கும் கதவுகளின் எணிக்கையை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. கதவுகளை நீண்ட சதுர வடிவதில் சிறபு. கதவின் சட்டத்தை இரண்டு சுவர்கள் சேரும் மூலையில் பொருத்தாமல் மூலைக்கு இரண்டு அங்குலம் தள்ளியே அதை பொருத்த வேண்டும். இதனால் நற்பலன்கள்
பல விளையும். கதவுகளை உட்பக்கமாக திறக்கும்படி அமைக்க வேண்டும். |