Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, V24 சாப்ட்வேர்-> Rs.11,000 Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000. Share Market Financial Astrology Software Rs.19750, திருமணதகவல் மைய சாப்ட்வேர் Rs.7500, Cell Phone App Rs. 1100
Pay online
ஜோதிட சாப்ட்வேர்கள் Email Online வழியாக 30 நிமிடங்களில் கிடைக்கும் GOVINDANE Cell: 88077 01887 WhatsApp : 88709 74887 Email id : vs2008w7@gmail.com
Astrologer use Only ஜாதகம் திருமணபொருத்தம்... APP Download செய்ய click here
Free RishiAstro APP Download click here Scan RishiAstro App Download

நீங்கள் பிறந்த ஊரை தேர்வு செய்யுங்கள் துள்ளியமாக பலன் இருக்கும்
நீங்கள் பிறந்த ஊர்
Select Gender :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
Code :
Subscribe to Channel Click here to find out the code number.
Subscribe to receive notifications about new
astrological research.


சனிபெயர்ச்சி பலன்கள் 26-09-2009 முதல் 14-11-2011 வரை கணித்தவர்:- எண்கலை வித்தகர் ஜோதிடக் கலைமாமணி சிவல்புரி சிங்காரம்
மேஷ ராசி அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்) ஆறாமிடத்தின் ஆதிக்கம்! அன்றாடம் வரும் ஆதாயம்! சமயோசித புத்தியால் சாதனைகள் நிகழ்த்தும் மேஷ ராசி நேயர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் தைரியகாரகன் என்றுஅழைக்கப்படுவார். தைரியமும், தன்னம்பிக்கையும் உங்களுக்கு ஏற்படுத்தி தரணியில் புகழ் குவிக்க அவரே வழி காட்டுகிறார். பூமிகாரகன் என்றும் அவரை அழைப்பார்கள். எனவே, பூமியோகம் உங்களுக்கு அதிகம் உண்டு. சாமி துணையும், பூமி துணையும் உங்களுக்கு இருப்பதால் தான் சந்தித்தவர்களெல்லாம் உங்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ள பிரியப்படுகிறார்கள். நீங்கள் காலடி எடுத்து வைத்த வீடுகளில் எல்லாம் காசு, பணம் குவிகிறது என்று சொல்வார்கள். வீட்டு யோகம் இருக்கும் உங்களுக்கு கூட்டு யோகம் கிடையாது. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசும் நீங்கள் ஏதேனும் தவறு நேர்ந்தால் தட்டிக் கேட்கவும் தயங்க மாட்டீர்கள். திட்டம் போட்டு செயல்படுத்துவதில் நீங்கள் கெட்டிக்காரர்கள். சில சமயங்களில் மனதில் பட்டதை மறைக்காமல் சொல்வதால் தான் பலரின் எதிர்ப்புகளுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. வரும் கிரகங்கள் தாக்குதல்களைத் தருகிறதா? அல்லது தூக்கி நிறுத்துகிறதா? என்பதை சுய ஜாதகத்தை ஆராய்ந்து செவ்வாய் இருக்கும் சார பலமறிந்து தெரிந்து கொண்டு அதற்குரிய சிறப்பு பரிகாரங்களைச் செய்தால் செல்வ வளம் பெருகும். ராசிநாதன் செவ்வாய் அம்சத்தில் இருக்கும் நிலையறிந்து அதைப் பார்க்கும் கிரகமும், அதோடு சேர்க்கை சேர்ந்த கிரகமும் பார்த்து அதற்குரிய எண்ணாதிக்கத்தில் உங்கள் பெயரையும் அமைத்துக் கொண்டால் பொன்னான எதிர்காலம் இப்பூவுலகில் வந்து சேரும். வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது தங்கு தடைகள் அகலவும், தக்க விதத்தில் வாழ்க்கை அமையவும், மங்களகாரகன் செவ்வாயின் நிலையறிந்து பொருத்தம் பார்த்து தேர்ந்தெடுப்பதே நல்லது. சகோதர காரகன் செவ்வாய் உங்கள் ராசிநாதன் என்ப தால் சகோதர பாசம் அதிகம் கொண்டவர்கள் நீங்கள். அதன் விளைவாக, தொல்லை களையும் சில சமயங்களில் சந்திப்பீர்கள். எல்லையில்லாத நற்பலன்களையும் சந்திப்பீர்கள். வெற்றி வாய்ப்புகளை வீடு தேடி வரவழைத்து கொள்ள எந்த நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சி தானா? என்பதைப் பற்றி பார்ப்போம். பொன்னான நேரம் புரட்டாசி 10 புரட்டாசி 10-ந் தேதி முதல் 6-ம் இடத்தில் சனி சஞ்சரிக்கப் போகிறார். அங்கிருந்து கொண்டு, 3, 8, 12 ஆகிய இடங்களைப் பார்த்துப் புனிதப்படுத்தப் போகிறார். இதன் விளைவாக எண்ணற்ற நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறப்போகின்றன. வளைகாப்பு, திருமணங்கள், மணி விழாக்கள் போன்றவைகளை நடத்தி மகிழ்வீர்கள். வழக்குகளில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் மேலதி காரிகள் உங்கள் திறமைகளைக் கண்டு பாராட்டுவர். பணியில் விருப்ப ஓய்வு பெறலாம் என்று நினைத்தவர்கள் கூட இனி மீண்டும் பணியைத் தொடர்வோம், என்று நினைக்கத் தூண்டும். எதிரிகள் விலகுவர். இருந்த கடன்சுமை குறையும். ரண சிகிச்சை செய்து குணமடைய வேண்டும் என்று சொன்ன நோய்கூட, சாதாரண சிகிச்சையிலேயே குணமாகிச் சந்தோஷத்தைக் கொடுத்து விடும். காக வாகனத்தானை நேசித்து, அவனுக்குரிய சனி கவசத்தைப் பாடி வழிபட்டு வந்தால் எதிர்ப்பு, வியாதி, கடன் எனப்படும் இடத்தால் வரும் தொல்லைகளை மாற்றி, எல்லையில்லாத யோகத்தை வர வழைத்துக் கொடுக்கும். ஆறாம் இடத்து சனியால் அப்படி என்ன மாற்றம் வரும்? உங்கள் ராசிக்குச் சனி பத்து, பதினொன்று ஆகிய இடங்களுக்கு அதிபதியாகிறார். தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி, ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, எண்ணிய காரியங்களையும் முடித்து வைக்கும். அந்நிய தேசத்திலும் அடி யெடுத்து வைக்கும் வாய்ப்பைக் கொடுக்கும். தைரியம் கூடும். தன்னம்பிக்கை மேலோங்கும். வரன் பார்த்துச் சென்று முடிவு சொல்லாதவர்கள் வாயிற் கதவைத் தட்டி வரும் மாதத்திலேயே முகூர்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்வார்கள். பயணங்கள் அதிகரிக்கும். புயலாக இருந்த வாழ்க்கை இனி தென்றலாக மாறும். சனியின் பார்வையால் சந்தோஷம் ஏற்படும்! கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை உங்கள் ராசிக்கு 3, 8, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. அந்த மூன்று இடங்களிலும் முக்கியமான மாற்றங்கள் உருவாகப் போகின்றன. சகோதர, சகாய ஸ்தானம், ஆயுள், ஆரோக்ய ஸ்தானம், விரய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கும் சனியால் உடன்பிறப்புகள் வழியில் ஒற்றுமை இனி உருவாகும். பாசத்தையும், நேசத்தையும் உறவினர்களிடம் காட்டுவீர்கள். எனவே விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். ஆயுள்காரகன் சனி ஆயுள் ஸ்தானத்தைப் பார்ப்ப தால், நோய்கள் இனி நொடியில் குணமாகும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்க இல்லத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அப்போது தான் கொடுத்த வாக்கையும் காப்பாற்ற இயலும், கொள்கைப் பிடிப் போடு செயல்படவும் முடியும். அடுத்தவர்கள் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கூடும். உடன்பிறப்புகளின் முன்னேற்றம் கருதி ஒரு பெரும் தொகையொன்றைச் செலவிடும் சூழ்நிலை அமையும். அவர்களது இல்லத்தில் நடை பெறும் கல்யாணக் காரியங்களுக்கும், கடல்தாண்டும் வாய்ப்பிற்கும் கைகொடுத்து உதவுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் உங்கள் உடன்பிறப்புகளை ஒரு பங்குதாரராக ஏற்றுக் கொள்ளலாமா என்று நினைப்பீர்கள். உற்சாகம் உள்ளத்தில் குடிகொள்ள ஒவ்வொரு காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை மீண்டும் வந்து சேரும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். பொதுவாக யோக பலம் பெற்ற நட்சத்திரமும், சனிக்கிழமையும் இணையும் நாளில் தெசாபுத்திக்கேற்ப தெய்வ வழிபாடுகளைத் திருப்தியாகச் செய்வதோடு, சனிப் ப்ரீதியும் செய்து வந்தால் சங்கடங்கள் தீரும். சந்தோஷங்கள் கூடும். ராகு-கேது பெயர்ச்சிக் காலம்! 27.10.2009-ல் தனுசு ராசியில் ராகுவும், மிதுன ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன் விளைவாக மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். தேவையான பணம் தேடி வந்து சேரும். தந்தை வழி உறவால் தனலாபம் கிட்டும். தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்வீர்கள். சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் அலைச்சல் அதிகரிக்கலாம். ஆனாலும் ஆதாயம் குறையாது. அரசியல் செல்வாக்கு மேலோங்கும். தொழில் கூட்டாளிகளை விலக்கி, புதியவர்களைச் சேர்க்க நினைப்பீர்கள். வீடு கட்டும் முயற்சி வெற்றி தரும். சர்ப்ப ஸ்தலங்களுக்குச் சென்று சர்ப்ப சாந்திகளை முறையாக செய்து வந்தால் முன்னேற்றம் கிட்டும். குருப்பெயர்ச்சிக் காலம்! சுமார் 2 1/2 ஆண்டுகள் கன்னி ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, 15.12.2009-ல் கும்ப ராசியில் குரு சஞ்சரித்து, அதன் பார்வை பலத்தால் பலவித மாற்றங்களைக் கொடுப்பார். 2010-ல் மீன ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது விரய ஸ்தானம் பலம் பெறுவதால் எதிர்பாராத விரயங்களை வழங்குவார். பொதுவாக குரு பார்க்கக் கோடி நன்மை என்ப தால், உங்கள் ராசிக்கு சகோதர ஸ்தானத்தையும், பஞ்சம ஸ்தானத்தையும், களத்திர ஸ்தானத்தையும் பார்க்கப்போவதால் உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். பெண் குழந்தைகளின் சுபச் சடங்குகள், பூப்புனித நீராட்டு விழாக்கள் போன்றவைகள் இல்லத்தில் நடைபெறும். பொது வாழ்வில் புகழ் கூடும். வாகன யோகம் உருவாகும். விவாகம் விருப்பப்பட்டபடி நடைபெறும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தாயின் உடல் நலம் சீராகும். இடம், பூமி வாங்கி வீடு கட்டுவீர்கள். பங்காளிகள் பகை மாறும். சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற... 14.1.2010 முதல் 31.5.2010 வரையும் மீண்டும் 27.1.2011 முதல் 13.6.2011 வரையும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 10, 11 க்கு அதிபதியாக விளங்கும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி, மாறி வந்துகொண்டேயிருக்கும். எனவே உங்கள் குறைகள் அகல வேண்டுமானால் கூடுதல் விழிப்புணர்ச்சி உங்களுக்குத் தேவை. கடன் சுமை கூடும். கவலைகள் சேரும். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும். இல்லத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லாவிட்டால் தொல்லைகள் க்ïவில் நிற்கும். முகம் சுளிக்காமல் மற்றவர்களுடன் பழகுவது நல்லது. தெய்வீகப் பணிகளில் அதிக அக்கறை செலுத்தினால் தித்திக்கும் வாழ்க்கை அமையும். படுத்திருக்கும் நேரம்கூட விழித்திருந்தால் தான் தொடர்ந்து வந்த துயர் மாறும். நண்பர் களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். எனவே இக்காலம், பொற்காலமாக அமைய வேண்டுமானால் அனுமன் வழிபாட்டிலும், சனி பகவான் வழிபாட்டிலும் ஆர்வம் காட்டுங்கள். கற்பக விநாயகரை வழிபட்டு காரியங் களைத் தொடங்குங்கள். சிறப்பு வழிபாடு கன்னிச் சனியால் எண்ணிய காரியங்களில் வெற்றி பெற வழிபாடு! நாள் செய்வதை நல்லவன் செய்யமாட்டான், கோள் செய்வதை கொடுப்பவன் செய்ய மாட்டான் என்பது பழமொழி. எனவே வார வழிபாடாக செவ்வாய்க்கிழமை தோறும் செல்வநிலை உயர முருகப் பெருமானை வழிபட்டு வாருங்கள். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சிக் கோவிலுக்குச் சென்று தன- ஆகர்ஷன சனியையும், நவபாஷன வைரவரையும் வழிபட்டு வாருங்கள். சோகங்கள் மாறும். சுகங்கள் கூடும். எள்ளினில் தீபம் ஏற்றி, எதிரினில் வைத்தேன் ஈசா! சொல்லையே செயலாய் மாற்ற துணை நின்று அருளுவாயே! என்று சனீஸ்வரன் சந்நிதியில் பாடுங்கள். இனி வரும் நாட்கள் இனிய நாட்களாக மாறும். -------------------------------------------------------------------------------- ரிஷப ராசி கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருகசீர்ஷம் 1, 2 பாதங்கள் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ, உள்ளவர்களுக்கும்) விலகி விட்டது சனி! வியக்கும் செய்திதான் இனி! பெருந்தன்மை கொண்ட மனமும், பிறரை மயக்கும் பேச்சாற்றலும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! காளையைச் சின்னமாகக் கொண்டு களைப்பின்றி உழைப்பவர்கள் நீங்கள். சுக்ரனின் ஆதிக்கத்தைப் பெற்ற ராசியாக உங்கள் ராசி இருப்பதால் இனிமையாகப் பேசி எல்லோரையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் உங்களுக்கு இயற்கையாகவே வந்து சேருகிறது. தலைமைப் பதவியில் இருந்த போதும் நேசித்தவர்களை நீங்கள் விட்டு விடமாட்டீர்கள். நந்தியைச் சின்னமாகக் கொண்ட நீங்கள் எந்த செயலிலும் முந்தி இருப்பீர்கள். தந்தி கொடுத்தால் உடனடியாகப் போய்ச்சேருவது போல, உங்களிடம் கொடுத்த வேலையை உடனடியாக செய்து முடிப்பீர்கள். நன்றி மறக்காத தன்மை உங்களுக்கு இருப்பதால்தான் நான்கு பேராவது தினமும் உங்களைப் பற்றி பேசும் வாய்ப்பு அமைகிறது. உறவினர்களின் ஒத்துழைப்பைக் காட்டிலும், நண்பர்களே உங்களுக்கு நாளும் கைகொடுத்துதவுவர். நம்பிக்கையை நீங்கள் நண்பர் களின் மீது வைப்பதால்தான் இன்பங்களை எந்நாளும் சந்திக்க இயலுகிறது. சுற்றி வரும் கிரக நிலை உங்களை தூக்கி நிறுத்துகிறதா? அல்லது தாக்குதலை தருகிறதா? என்பதை உங்கள் சுய ஜாதகத்தை ஆராய்ந்து சுக்ரன் இருக்கும் சாரபலமறிந்து பரிகாரம் செய்தால் பலன் உடனே கிடைக்கும். ராசிநாதன் சுக்ரன் நவாம்சத்தில் இருக்கும் நிலை அறிந்து அதைப் பார்க்கும் கிரகமும், அதோடு இணைந்த கிரகமும் பார்த்து அதற்குரிய எண்ணாதிக்கத்தில் உங்கள் பெயரையும் அமைத்துக் கொண்டால் எதிர்காலமும் இனிமையாக அமையும். எண்ணங்களும் ஈடேறும். களத்திர காரகன் என்று சுக்ரன் வர்ணிக்கப்படுவதால் உங்கள் கல்யாணக் கனவுகள் நனவாக அசுர குரு வீற்றிருக்கும் ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைக்க வேண் டும். பொருத்தங்களில் மூன்று முக்கிய பொருத்தங்கள் இல்லாவிட்டால், தக்க துணையில்லாமல் தடுமாற்றம் ஏற்படும். பிறர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் உங்களுக்கு சொந்த பிரச்சினைகள் எண்ணி லடங்காமல் இருக்கும். அவற்றையெல்லாம் தீர்த்துகொள்ள நல்ல ஆன்மிக நாட்டமுள்ள ஆலோசகர் ஒருவரை வைத்துக் கொள்வது நல்லது. உலகத்திற்கெல்லாம் ஒளி கொடுக்கும் சந்திரன் உங்கள் ராசியில் உச்சம் பெறுவதால் அழியாத புகழுக்கு அஸ்தி வாரமிடுவீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சி தானா? என்பதைப் பற்றி பார்ப்போம். புரட்டாசி பிறந்தது புதுவாழ்க்கை அமைந்தது! புரட்டாசி 10-ந் தேதி முதல் இதுவரை அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரித்த சனிபகவான் இப்பொழுது விலகி பஞ்சம ஸ்தானத்தில் 5-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அங்கிருந்து கொண்டு 2, 7, 11 ஆகிய இடங்களைப் பார்த்துப் புனிதப்படுத்தப் போகிறார். இதன் விளைவாக விலகி விட்டது சனி! வியக்கும் செய்திதான் இனி! என்று சொல்லப் போகிறீர்கள். உங்கள் ராசிக்குச் சனி 9, 10 க்கு அதிபதியாகிறார். அவர் 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது அற்புதமான பலன்களை வாரி வழங்குவார். 5, 9 -ம் மிஞ்சும் பலன் தரும் என்பதற்கேற்ப பொருளாதாரத்தில் விருத்தியைக் கொடுக்கப் போகிறது. குழந்தைகளின் நலன் கருதி எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் அகலும். இத்தனை நாட்களாக முடியாத பிரச்சினைகள் இப்பொழுது வேகமாக முடிவடைவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள். நீங்கள் நேசித்த ஒருவர் யோசிக்காது உங்களுக்கு உதவி செய்வார். வாழ்வில் வறட்சி நீங்கி வளர்ச்சி நேரும் நேரம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். கடந்த சில மாதங்களாக ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல் அகலும். ஐந்தாம் இடத்துச் சனி அனைவரும் போற்றும் வாழ்க்கையை தருமா? உங்கள் ராசிக்கு 9, 10 க்கு அதிபதியான சனி பகவான் ஒளிமயமான எதிர்காலத்தை வழங்குபவராக விளங்குகிறார். பஞ்சம ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கும் பொழுது அவர் உங்களுக்கு நெஞ்சம் மகிழும் வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார். நீங்கள் யார் என்பதை இந்த உலகத்திற்கு உயர்த்தப் போகிறீர்கள். மனதில் பதித்து வைத்திருந்து, வெளியில் சொல்ல முடியாத கவலைகளெல்லாம் இனி மாறப் போகிறது. குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். இதுவரை கிடைக்காத சவுகரியங்கள் இனி கிடைக்கப்போகிறது. கருத்து வேறு பாடுகள் அகலும். கை கொடுத்து உதவ நண்பர்கள் காத்திருப்பர். பிள்ளைகளின் கனவுகளை யெல்லாம் நனவாக்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். சனி பார்க்கும் பார்வை இனி என்ன கவலை? யோககாரகன் என்று உங்கள் ராசிக்கு வர்ணிக்கப்படும் சனி பகவான் 2, 7, 11 ஆகிய இடங்களைப் பார்ப்பதால் அந்த இடங்களில் எல்லாம் முக்கியமான மாற்றங்கள் உருவாகப் போகின்றன. வாக்கு, தனம், குடும்பம், களத்திரம், புதல்வர்கள், பொருளா தாரம், உடன் பிறப்பு, லாபம், இடமாற்றம், பயணம் ஆகிய துறைகளில் எல்லாம் எதிர்பார்த்த மாற்றங் களைக் காணப் போகிறீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் உருவாகும். உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் மாறும். வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளுக்கு வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகல முக்கியப் புள்ளிகள் முன் வந்து உதவுவர். கல்யாணக் கனவுகள் நனவாகும். கடல் தாண்டி வரும் செய்தி காதினிக்க வைக்கும். திருமணப் பொருத்தம் பார்த்து இதுவரை சலித்துப் போயிருந்த உங்களுக்கு இது வரை பொருந்தாத ஜாதகங்கள் இனிப் பொருந்தப் போகின்றன. மங்கல ஓசை மனையில் கேட்கப் போகிறது. தங்கமும், வெள்ளியும் தடையின்றி வந்து சேரும். புதுமனை புகுவிழாக்களை நடத்தி மகிழ்வீர்கள். லாப ஸ்தானத்தைப் பார்க்கும் சனியால் லாபம் பெருகும். உதிரி வருமானங்கள் வந்து சேரும். கடந்த ஓராண்டாகவே உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே, உயர் அதி காரிகளும் கண்டு கொள்ளவில்லையே என்று ஏங்கியவர்கள் இனி மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கப் போகிறார்கள். பற்றாக்குறை பட்ஜெட் மாறும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். யோகபலம் பெற்ற நட்சத்திரமும், வெள்ளிக்கிழமையும் இணையும் நாளில், தெசாபுத்திக் கேற்ற தெய்வ வழிபாடுகளைச் செய்தால் சங்கடங்கள் தீர்ந்து, சந்தோஷங்கள் சேரும். ராகு - கேது பெயர்ச்சிக் காலம்! 27.10.2009-ல் தனுசு ராசியில் ராகுவும், மிதுன ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். 2 மற்றும் 8 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்கள் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. கொள்கைப் பிடிப்போடு செயல் படவும் இயலாது. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் அடிக்கடி ஏற்படலாம். ஆனால் ஆதாயம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். அடுத்த நிமிடமே செலவும் உருவாகும். எனவே முறையாக சர்ப்பதோஷ நிவர்த்திப் பரிகாரங்களை அனுகூல ஸ்தலங்களுக்குச் சென்று செய்து வழிபட்டால் அத்தனை காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். குருப்பெயர்ச்சிக் காலம்! கன்னி ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, கும்ப ராசியில் குரு டிசம்பர் 15 முதல் சஞ்சரிக்கிறார். அங்கிருந்து கொண்டு பலவித மாற்றங்களை வழங்கப்போகிறார். 2010-ல் மீன ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது லாப ஸ்தான குருவால் தொழில் வளம் பெருகும். வருமானம் இருமடங்காகும். வளர்ச்சி கூடும். வங்கிச் சேமிப்பு உயரும். கும்ப குருவின் பார்வை பலத்தால் வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். சொத்துக்களால் லாபம் கிட்டும். எதிரிகள் விலகுவர். சுபகாரிய முயற்சி வெற்றி தரும். சுற்றத்தார் போற்றும் அளவில் முன்னேற்றம் கிட்டும். மீன குருவின் ஆதிக்க காலத்தால் உடன்பிறப்புகள் ஒத்துவருவர். அவர்களது குடும்ப நலனுக்காக கொடுத்து உதவுவீர்கள். அந்நிய தேச வாய்ப்பு அலை மோதும். பிள்ளைகளின் வேலை வாய்ப்பு கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உங்களோடு உறவாடி மகிழ உற்றார் உறவினர்கள் வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பர். சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற... 14.1.2010 முதல் 31.5.2010 வரை மீண்டும் 27.1.2011 முதல் 13.6.2011 வரை சனி வக்ர இயக்கத்திலிருக்கிறார். 9 மற்றும் 10 ஆகிய இடங்களுக்கு அதிபதி வக்ர கதியில் இயங்கும் இந்த நேரம் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதையும் யோசித்து செயல்படுத்துவ தோடு, பெரியவர்களிடம் ஆலோசனை பெற்றும் செய்தால் நிச்சயம் வெற்றி கிட்டும். தொழில் கூட்டாளிகளை முற்றிலும் நம்ப வேண்டாம். ஆதாயம் ஏட்டில் இருக்குமே தவிர எதிரில் இருக்காது. இடமாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். எண்ணங்களை எளிதில் செயலாக்க இறைவழிபாடு இக்காலத்தில் தேவை. பிள்ளைகள் உங்கள் சொல்லுக்கு கட்டுப்படுவார்களா என்பது சந்தேகம் தான். பிரச்சினை கள் ஏற்படாமல், முன் கூட்டியே நடவடிக்கை எடுப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களில் உங்களுக்குரிய பங்கு கிடைப்பதில் போராட்டங்கள் ஏற்படலாம். அவற்றை விற்று விட்டு புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இருந்தாலும் மந்தன் செய்வதைப் போல மகேஸ்வரன் கூடச் செய்ய மாட்டான் என்ற பழமொழியை நடத்திக் காட்டும் விதத்தில் அனுமன் வழிபாட்டில் ஆர்வம் காட்டும் பொழுது நல்ல சம்பவங்கள் நாளும் நடைபெறும். சிறப்பு வழிபாடு கன்னிச் சனியால் எண்ணிய காரியங்களில் வெற்றி பெற வழிபாடு! சனியை வழிபட்டால் சந்தோஷங் கள் வந்து சேரும். இனிய வாழ்க்கைக்கு இது உத்தரவாதமென்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் வார வழிபாடாக, வெள்ளிக்கிழமை தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தால் இன்பங்கள் வந்து சேரும். சிறப்பு வழிபாடாக மதுரை அருகில் உள்ள குச்சானூர் சென்று சுயம்பு சனிபகவானை வழிபட்டால் சொல்லைச் செயலாக்கிக் காட்டலாம். காகத்தில் ஏறி நின்று, கனிவோடு வரத்தை நல்கி, தேகத்தைக் காக்கும் ஈசா! செல்வத்தை வழங்கு வாயே! என்று சனியின் சந்நிதியில் பாடுங்கள். சந்தோஷங்களை நாளும் சந்திக்கலாம். -------------------------------------------------------------------------------- மிதுன ராசி மிருக சீர்ஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள் : க, கா, கி, கு, ஞ, ச, கே, கோ உள்ளவர்களுக்கும்) நாலில் வந்தார் சனிபகவான்! நாளும் இனிமேல் சுபவிரயம்! சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு தங்கள் இயல்புகளை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே! மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் வல்லவர்களாக விளங்குவீர்கள். மனதில் பட்டதை மறைக்காமல் பேசிவிடுவீர்கள். மற்றவர்களுக்கு வலியச் சென்று உதவுகின்ற எண்ணமும் உங்களுக்கு உண்டு. சவால் விடுவதையும் அதை சமாளிப்பதையும் கைவந்த கலையாகக் கொண்டவர்கள் நீங்கள். ஒரே கருத்தை நீங்கள் ஆதரித்தும் பேசுவீர்கள். மறுத்தும் பேசுவீர்கள். வேகமான சிந்தனை, வேகமான செயல்பாடு, வேகமான வளர்ச்சி என்பது உங்களது நோக்கமாகும். புதனின் பலத்தைப் பொறுத்தும், அதன் பாத சார அடிப்படையைப் பொறுத்தும் தான் உங்கள் வாழ்க்கை அமைகிறது. ராசிநாதன் புதன் கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகமாகவும் விளங்குவதால், பாதி வாழ்க்கைக்கு மேல் தான் திறமை பளிச்சிடும் சூழ்நிலை அமையும். செல்வம் சேர்ப்பதிலும் குறிக்கோளாக இருப்பீர்கள். உங்கள் சுய ஜாதகத்தை ஆராய்ந்து புதன் இருக்கும் சாரபலம் அறிந்து அதற்குரிய பரிகாரங்களைச் செய்து கொண்டால், தாக்குதல்கள் ஏற்படாது. தனவரவு தாராளமாக வந்து சேரும், கூக்குரல்கள் மாறும். குதூகலம் இல்லத்தில் குடியேறும். ராசிநாதன் புதனை மாமன்காரகன் என்று வர்ணிப்பர். எனவே, மாமனோடு நீங்கள் சேர்ந்து செய்யும் வழிபாடு மகத்தான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். நவாம்சத்தில் புதன் இருக்கும் நிலையை அறிந்து கொண்டு அதைப் பார்க்கும் கிரகமும், இணைந்த கிரகமும் எது என்பதை ஆராய்ந்து அவைகளுக்கு ஏற்ற விதத்தில் வரும் எண்ணாதிக்கத்தில் உங்கள் பெயரையும், உங்கள் தொழில் நிலையத்தின் பெயரையும் அமைத்துக் கொண்டால் எதிர்காலம் இனிமையாக அமையும். எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். உபய ராசியாக உங்கள் ராசி விளங்குவதால் அபயம் அளித்தவர்களே உங்களுக்கு எதிரியாகலாம். எனவே, வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் பொழுது, சண்டை, சச்சரவில்லாமல் சந்தோஷத்தையே 24 மணி நேரமும் காண திருமணப் பொருத்தம் பார்த்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது நல்லது. பொருத்தம் இல்லையேல் வருத்தம் குடியேறும். அருளாளர்கள் அல்லது ஆன்மிகப் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால் முன் வைத்த காலை பின் வைக்காமல் இருக்கலாம். இப்படிப்பட்ட உங்களுக்கு சனிப் பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சி தானா? என்பதைப் பற்றி பார்ப்போம். அர்த்தாஷ்டமச் சனியின் தொடக்கம் அதனால் வந்திடும் இடமாற்றம்! இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த குணங்களைப் பெற்ற உங்களுக்கு வரும் சனிப்பெயர்ச்சி, அர்த்தாஷ்டமச்சனியாக வருகிறது. இது அஷ்டமத்துச் சனியில் பாதி பங்கு வலிமை யுடையது. எனவே, அது கடுமையாக இருக்குமோ என்று நீங்கள் பயப்பட வேண்டாம். தாக்கும் கிரகமல்ல சனி, உங்களை காக்கும் கிரகம் தான் சனி என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் ராசிக்கு 8 மற்றும் 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக சனி விளங்குகிறார். ஆயுள்காரகன் சனி ஆயுள் ஸ்தானாதிபதியாகவும் விளங்குவதால், சனியால் ஒரு போதும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. பிரச்சினைகளை உருவாக்கி நல்ல முடிவுகளை கொண்டு வந்து சேர்க்கும். இடமாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம் போன்றவைகளால் இனிய பலன் கிட்டும். புரட்டாசி 10-ந் தேதி முதல் நான்காமிடத்தில் சஞ்சரிக்கும் சனி அங்கிருந்து கொண்டு 1, 6, 10 ஆகிய இடங்களைப் பார்த்து புனிதப்படுத்தப் போகிறார். இதன் விளைவாக, விஸ்வரூபம் எடுத்த பிரச்சினைகள் வேகமாக முடிவடையும். அர்த்தாஷ்டமச் சனி ஆரோக்கியத்தில் பாதிப்புகளைக் கொடுக்கும் இடம் தான் என்பதால் வரும் முன் காப்போம் என்ற திட்டத்தை நீங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசிய மாகும். எனவே நோய்க்கான அறிகுறிகள் தென்படும் பொழுது மருத்துவரை நாடினால் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். நான்காமிடத்துச் சனி நன்மையைத் தருமா? சனி உங்கள் ராசிநாதனுக்கு நட்பு கிரகம். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவது போல, நட்பு கிரகங்களும் கைகொடுத்து உதவும். பரபரப்பை குறைத்துக் கொண்டு பணிபுரிவது நல்லது. பெற்றோர்களையும், மற்றோர்களையும் அனுசரித்துச் செல்வதன் மூலம் பிரியங்களைக் கூட்டிக் கொள்ளலாம். சொத்துக்கள் வாங்குவதில் ஏமாற்றங்களைச் சந்திக்காதிருக்க பத்திரங்களைச் சரி பார்க்க வேண்டியது அவசியமாகும். வாகன மாற்றம் நல்லது. பயணங்கள் அதிகரிக்கும். உத்தி யோகஸ்தரர்களுக்கு பொறுப்புகளும் வேலைப்பளுவும் கூடும். பார்க்கும் சனியால் பணிகளில் மாற்றம் உங்கள் ராசியையும், ஆறு மற்றும் பத்தாமிடத்தைப் பார்க்கும் சனியால் பணிகளில் மாற்றங்கள் ஏற்படும். உடல்நிலை, எதிர்ப்பு, வியாதி, கடன், தொழில், செயல், புகழ், கீர்த்தி ஆகிய ஆதிபத்தயங்கள் தரும் இடங்களிலெல்லாம் மாபெரும் மாற்றங்களைக் காணப் போகிறீர்கள். உடல்நலம் ஒத்துழைக்கும் பொழுது உள்ளத்தில் மனக்கசப்பு தரும் சம்பவங்கள் ஒன்றிரண்டு உருவாகலாம். எனவே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வாக்கு கொடுக்கும் முன் யோசித்துச் செய்தால், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலும். உத்தி யோக மாற்றங்கள் உருவாவதைத் தவிர்க்க இயலாது. ஒரு சிலர் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பிப்பர். தெசாபுத்தி வலுப் பெற்றவர்கள் விருப்ப ஓய்வில் சுய முயற்சியில் ஈடுபடலாம். அப்படி சுயதொழில் தொடங்குவதில் மனைவி, மக்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவர் ஜாதகத்தையும் ஆராய்ந்து பார்த்து அதற்கேற்ற விதத்தில் தொழிலைத் தொடங் குவது நல்லது. செயல்பாடுகளில் அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயங்கள் அதிகரிக்கும். புதிய பங்குதாரர்கள் இணைந்து போற்றும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நல்ல தருணமாகும். கூட்டுத் தொழில் செய்வோர் கணக்கு, வழக்குகளை சரி பார்த்து கொள்வது நல்லது. சனியை வணங்கிய பின் காரியத்தைத் தொடங்கினால், சுணங்கிய காரியங்கள் கூட சுறுசுறுப்பாய் நடைபெறும். கை தொழுத மாந்தர்க்குப் பை முழுதும் பணம் குவியும். யோகபலம் பெற்ற நட்சத்திரமும், புதன்கிழமையும் இணையும் நாளில் தெசாபுத்திக் கேற்ற தெய்வ வழிபாடுகளைச் செய்தால் சங்கடங்கள் நீங்கிச் சந்தோஷங்கள் சேரும். ராகு-கேது பெயர்ச்சி காலம்! 27.10.2009-ல் தனுசு ராசியில் ராகுவும், மிதுன ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ஜென்மத்தில் கேது சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. சஞ்சலங்கள் மேலோங்கும். உற்றார், உறவினர் பகை அதிகரிக்கும். பணத்தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள சொத்துக்களை விற்க நேரிடும். சப்தம ராகு வாழ்க்கைத் துணையோடு மோதல் களை உருவாக்கலாம். எனவே, குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து சென்றால் தான் நிம்மதியைக் காண இயலும். பாம்பு கிரகங்களுக்குரிய பரிகாரங்களை முறையாகச் செய்தால் தேம்பும் நிலை மாறும். செல்வ நிலை உயரும். குருப்பெயர்ச்சிக் காலம்! கன்னி ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது 15-12-2009-ல், கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கப் போகிறார். அதன் பிறகு 2010-ல் மீன ராசியில் குரு சஞ்சரிப்பார். இதன் விளைவாக நல்ல மாற்றங்கள் இல்லம் வந்து சேரப் போகின்றன. சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். சுற்றத்தார் பாராட்ட சொந்தங்கள் வாழ்த்த, கல்யாண வாய்ப்புகள் கை கூடும். கை நிறையப் பொருள் சேரும். கும்ப குருவின் பார்வை உங்கள் ராசியிலேயே பதிவதால் உடல் நலம் சீராகும். மருத்துவச் செலவுகள் குறையும். பகையானவர்கள் நட்பாவார்கள். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். மீன குருவின் பார்வை பலத்தால் குடும்பத்தில் ஒற்றுமை கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கடுமையாக முயற்சித்தும் நடைபெறாத காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறத் தொடங்கும். உத்தியோக மாற்றம், பதவி மாற்றம், வீடு மாற்றம், ஊர் மாற்றம் போன்றவைகள் நீங்கள் கேட்காமலேயே வந்து சேரும். குரு வழிபாட்டை முறையாக மேற்கொண்டால், கொடுக்கல்- வாங்கல்கள் ஒழுங்காகும். சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற... 14.1.2010 முதல் 31.5.2010 வரை மீண்டும் 27.1.2011 முதல் 13.6.2011 வரை சனி வக்ர இயக்கத்திலிருந்து செயல்படுகிறார். இதன் விளைவாக, தொழில் மாற்றங்கள் உருவாகலாம். கூட்டுத் தொழில் செய்வோர் மாற்றுத் தொழில் செய்ய முன்வருவர். ஆற்றல் மிக்கவர்கள் செய்யும் ஒத்துழைப்பை அடுத்தவர்கள் கெடுத்துவிடாமல் இருக்க அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. காக வாகனத்தானை சேவிப்பதோடு, உங்கள் ஜாதகப்படி அனுகூலம் தரும் தெய்வீகப் படங்களை இல்லத்து பூஜை அறையிலும் வைத்து வழிபாடு செய்யுங்கள். உடன்பிறப்பு களை அனுசரித்துச் சென்றால் தான் பாகபிரிவினைகள் சுமூகமாக முடியும். பிறருக்கு பணப்பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்தால் பகையும் உருவாகும். பணமும் திரும்பாது என்பதால் முன்யோசனையுடன் நடந்து கொள்வது நல்லது. விவசாயத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கால் நடைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். வக்ர காலத்தை பொற்காலமாக்குவது வழிபாடு மட்டும் தான். சிறப்பு வழிபாடு கன்னிச் சனியால் எண்ணிய காரியங்களில் வெற்றி பெற வழிபாடு! அர்த்தாஷ்டமச்சனியால் அகப்பட்டிருக்கும் நீங்கள் முத்தான வாழ்க்கையை மேற் கொள்ளவும், முன்னேற்றம் காணவும் புதன்கிழமை தோறும் விஷ்ணுவை வழிபட்டு வாருங்கள். சிறப்பு வழிபாடாக, சேலம் அருகில் உள்ள நாமக்கல் சென்று அங்குள்ள வரம் தரும் அனுமனை வழிபட்டு வாருங்கள். அதன் சந்நிதியில், அர்த்தாஷ்ட மத்தில் நானும் அனுமனே உனை துதித்தேன்! வெற்றியை எனக்கு தந்தே வேந்தனாய் வாழ வைப்பாய்! என்று வேண்டிக் கொள்ளுங்கள். விருப்பங்கள் நிறைவேறும். -------------------------------------------------------------------------------- கடக ராசி புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய (பெயரின் முதல் எழுத்துக்கள்: ஹி, ஹீ, ஹே, ஹோ, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்) மூன்றாமிடத்தில் வந்தது சனி! முன்னேற்றம் தான் வாழ்வில் இனி! சிந்தனை ஆற்றலால் சிறப்புகளைப் பெற்று சந்தித்தவர்களையெல்லாம் சந்தோஷத்தில் ஆழ்த்தும் கடக ராசி நேயர்களே! ஏழரைச்சனி விலகி விட்டது! இனி எதிர்பார்ப்புகள் நிறைவேறப் போகிறது! சூழ்ந்த பகை விலகும்! துணிவும், தன்னம்பிக்கையும் கூடும்! நண்டு உங்கள் ராசியின் சின்னமாக விளங்குவதால் பிடிவாதக் குணம் அதிகம் பெற்றவர்கள் நீங்கள். பிரபலமானவர்களின் முகவரியில் தங்கள் பெயரும் இடம் பெற வேண்டும் என்று நினைப்பீர்கள். பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்படுபவர்கள் மத்தியில் புகழுக்கு ஆசைப்படு பவர்களாக விளங்குவீர்கள். உங்கள் ராசிக்கு அதிபதியாக சந்திரன் இருப்பதால் அது வளர்ந்து தேய்வது போல, உங்களுக்கு வளர்ச்சியும் திடீரென வந்து சேரும். தளர்ச்சியும் திடீரென வந்து சேரும். உங்கள் சுய ஜாதகத்தை ஆராய்ந்து சந்திரன் இருக்கும் சார மறிந்து, அதற்குரிய பரிகாரங்களைச் செய்து கொண்டால் எந்த நாளும் இனிய நாளாக மாறும். அது மட்டுமல்லாமல் நவாம்சத்தில் சந்திரன் இருக்கும் நிலையறிந்து, அது பார்க்கும் கிரகத்தின் தன்மையைப் பொறுத்து அதற்கேற்ற விதத்தில் வரும் எண்ணாதிக்கத்தில் உங்கள் பெயரையும், உங்கள் தொழில் நிலையத்தின் பெயரையும் அமைத்துக் கொண்டால், எதிர்காலத்தில் ஏராளமான நற்பலன்களைப் பெற முடியும். சர ராசியாக உங்கள் ராசி விளங்குவதால் சுற்றித் திரிவதில் பற்று உங்களுக்கு அதிகம் இருக்கும். கடிவாளம் இல்லாத குதிரையைப் போல, துள்ளித்திரியும் உங்களுக்கு பிடிவாத குணம் மட்டும் இல்லாவிட்டால் பெரிய முன்னேற்றத்தை இளம் வயதிலேயே காணஇயலும். அரசியல் முதல் ஆன்மிகம் வரை கற்று வைத்திருந்தாலும் உங்களுக்கென்று ஒரு பிரச்சினை வந்து விட்டால் உள்ளூர மனப்பயம் கொள்வீர்கள். மனது காரகன் என்று வர்ணிக்கப்படும் சந்திரன் உங்கள் ராசிநாதனாக விளங்குவதால், மன அமைதி கிடைக்க வேண்டுமானால் வாழ்க்கைத் துணை சரியாக அமைய வேண்டும். பொருத்தம் பார்த்து செய்யும் திருமணங்களால் தான் பொன்னான வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இப்படிப்பட்ட உங்களுக்கு சனிப் பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சி தானா? என்பதைப் பற்றிப் பார்ப்போம். ஏழரைச் சனிதான் விலகியது! இனிமேல் வெற்றி தொடங்கியது! உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சகல யோகங்களையும் தரும் பெயர்ச்சியாக அமையப்போகிறது. காரணம், கடந்த ஏழரை ஆண்டுகளாக உங்களோடு இணைந்திருந்து நன்மைகளையும், தீமைகளையும் வாரி வாரி வழங்கிய சனி, இப்பொழுது விலகும் நேரத்தில் விருப்பங்களையெல்லாம் முடித்து கொடுக்கப்போகிறது. உடன்பிறப்புகள் வழியே உதவிகள் கிடைக்கும். ஊர் மாற்றம், இடமாற்றம், உடனிருக்கும் தொழில் மாற்றம் என்று எண்ணற்ற மாற்றங்களைக் கொடுக்க முதலில் மன மாற்றத்தைக் கொடுப்பார் இந்த சனிபகவான். இந்த சமயத்தில் நள்ளாறு சென்று நளன் குளித்த ஊரணியில் குளித்து, வல்லவன் சனியின் முன் நின்று, கருநிறக் காகம் ஏறி காசினி தன்னைக் காக்கும் என்ற சனி கவசம் பாடலை பாடுங்கள். கவசம் பாடினால் கவலைகள் அகலும். புரட்டாசி 10-ந் தேதி முதல் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சனி அங்கிருந்து கொண்டு 5, 9, 12 ஆகிய இடங்களைப் பார்த்து புனிதமடைய வைக்கப்போகிறார். இதன் விளைவாக, பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். பிரச்சினைகள் ஒவ்வொன்றாகத் தீரும். உங்கள் ராசிக்கு ஏழு மற்றும் எட்டு ஆகிய இடங்களுக்கு அதிபதியாக சனி விளங்குகிறார். முக்கிய புள்ளிகள் உங்கள் இல்லம் தேடி வந்து தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். மூன்றாமிடத்துச் சனியால் முன்னேற்றம் ஏற்படுமா? களத்திர ஸ்தானம் மற்றும் ஆயுள் ஸ்தானத்திற்கு அதிபதியான சனி மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் பொழுது முன்னேற்றங்கள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிநாதனோடு இணையும் பொழுது, சனிச்சந்திர யோகம் என்று ஒரு யோகத்தைக் கொடுப்பார். சனியும், சந்திரனும் பரிவர்த்தனையானால், அரசாளும் யோகம் வந்து சேரும். வழக்குகளில் வெற்றி கிட்டும். தன்னம்பிக்கை அதிகம் பெற்ற நீங்கள் சனி வழிபாட்டில் அதிக அக்கறை காட்டும் பொழுதும், சனி பிடிக்காத தெய்வம் என்று வர்ணிக்கப்படும் ஆனை முகப் பெருமானையும், அனுமனையும் சனிக் கிழமை தோறும் வழிபட்டு வந்தால், இந்த இடத்தில் மட்டுமல்ல, எந்த இடத்தில் சனி இருந்தாலும் இனிய பலன்களை நீங்கள் காணலாம். பிரிந்த சகோதரர் வந்திணைவர். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். பணவரவு திருப்தி தரும். சஞ்சலம் தீர்க்கும் சனியின் பார்வை! உங்கள் ராசிக்கு ஐந்தாமிடம் மற்றும் ஒன்பதாம் இடம், பனிரெண்டாமிடம் ஆகிய மூன்று இடங்களையும் சனி பார்க்கப் போகிறார். எனவே, புத்திர ஸ்தானம், தகப்பனார் ஸ்தானம், பூர்வ புண்ணியம், பயணம், விரயம் போன்ற ஆதிபத்யங்கள் தரும் இடங்களில் எல்லாம் நல்ல மாற்றங்கள் வந்து சேரப் போகின்றன. பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் தீரும். அவர்களின் கல்விக்காக எடுத்த முயற்சி கை கூடும். கடல் பயண வாய்ப்பிற்காகவும் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் அகலும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் நலம் ஒத்துழைக்கும். ஊர் மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். பிள்ளைகளுக்கு ஆயிரக்கணக்கில் வரன் வந்தும் அண்டை, அயலார் மூலம் விட்டுப்போனதே என்ற கவலை இனி அகலும். தந்தை ஸ்தானத்தை சனி பார்ப்பதால், தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் மறையும். முன்னோர் சொத்துக்கள் முறையாக கைக்கு வந்து சேரும். இதுவரை பாசம் செலுத்தாத பெற்றோர்கள் இனி ஆசையோடு பேச முன்வருவர். வெளிநாட்டு தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். விரய ஸ்தானத்தை சனி பார்ப்பதால், திடீர் விரயங்கள் உருவாகத்தான் செய்யும். இருப்பினும், அதை சமாளிப்பீர்கள். வீண் விரயங்களிலிருந்து தப்பிக்க சுபவிரயங்களை மேற்கொள்ளலாம். விழிப்புணர்ச்சியோடு செயல்பட்டால் நண்பர்கள் பகைவர்களாக மாட்டார்கள். யோக பலம் பெற்ற நட்சத்திரமும், திங்கட்கிழமையும் இணையும் நாளில் தெசா புத்திக் கேற்ற தெய்வ வழிபாடுகளை தேர்ந்தெடுத்துச் செய்தால் சங்கடங்கள் தீரும். சந்தோஷங்கள் சேரும். ராகு- கேது பெயர்ச்சி காலம்! 27.10.2009-ல் தனுசு ராசியில் ராகுவும், மிதுன ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். 6-ல் ராகு சஞ்சரிப்பதால் அஷ்டலெட்சுமி யோகம் செயல்படும். அதே நேரத்தில் 12 ல் கேது சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. எவ்வளவு வருமானம் வந்தாலும் நிம்மதி இருக்காது. பணியாளர் தொல்லை அதிகரிக்கும். பக்கபலமாக இருப்பவர்களை மாற்றுவீர்கள். ஆன்மிக பயணங்கள் ஏற்படும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி களுக்கு ஆதாயம் கிடைக்கும். ராகு- கேதுக்களுக்குரிய சர்ப்ப சாந்திகளை முறையாகச் செய்தால் அற்புத பலன்கள் வந்து சேரும். குருப்பெயர்ச்சிக் காலம்! கன்னி ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது 15.12.2009 கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கப்போகிறார். அதன் பிறகு 2010-ல் மீன ராசியில் குரு சஞ்சரிப்பார். இதன் விளைவாக, வளர்ச்சியும், தளர்ச்சியும் உங்களுக்கு மாறி மாறி வரப்போகிறது. வளர்ச்சி ஏற்படும் பொழுது நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டீர்கள். தளர்ச்சி ஏற்படும் பொழுது தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தகுந்த பரிகாரங் களையும், குரு வழிபாட்டையும் முறையாகச் செய்தால், இழந்தவைகளை நீங்கள் ஈடு செய்ய முடியும். கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, விரய ஸ்தானத்தையும், தன ஸ்தானத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பதால் விரயத்திற்கேற்ற பணம் வந்து கொண்டேயிருக்கும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது மிகச்சிறந்த பலன்களை உங்களுக்கு அள்ளி வழங்கப்போகிறார். அதன் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். விவாகப் பேச்சுக்கள் முடிவாகும். சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற... 14.1.2010 முதல் 31.5.2010 வரை மீண்டும் 27.1.2011 முதல் 13.6.2011 வரை சனி வக்ர இயக்கத்திலிருந்து செயல்படுகிறார். இதன் விளைவாக, எண்ணற்ற மாற்றங்கள் உங்களுக்கு வந்து சேரப் போகின்றன. ஏழு, எட்டுக்கு அதிபதியான சனி பகவான் வக்ரம் பெறும் பொழுது சில இழப்புகளையும் சந்திக்க நேரிடும். நண்பர்களை நம்பி ஏமாறும் சூழ்நிலையும் உருவாகலாம். குறிப்பாக, வாழ்க்கைத் துணையோடு அனுசரித்து சென்றால் தான் வசந்த காலத்தை வரவழைத்துக் கொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீரென்று ஊர் மாற்றங்கள் வந்து சேரும். கண்டிப்பாக, மாறியே தீர வேண்டுமென்று சொல்வார்கள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களுக்கே வந்து சேரலாம். மாற்று கருத்துடையோர் எண்ணிக்கையை கூட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சனிக்கிழமை தோறும் விரதமிருந்து காக வாகனத்தானை வழிபட்டால் கை நிறைய பொருளும் கிடைக்கும். கனிவான வாழ்க்கையும் அமையும். சிறப்பு வழிபாடு கன்னிச் சனியால் எண்ணிய காரியங்கள் வெற்றி பெற வழிபாடு! ஏழரைச்சனி விலகி விட்டது. இனி வாழ்வில் வசந்தம் வரப்போகிறது. நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வர திங்கட்கிழமை தோறும் தென்முகக் கடவுளை வழிபட்டு வாருங்கள். சிறப்பு வழிபாடாக, சிவகங்கை மாவட்டத்திலுள்ள வைரவன்பட்டியை நோக்கி வாருங்கள். அங்குள்ள வளரொளி நாதர், வடிவுடையம்மன், வைரவரை வழிபட்டு, வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயரை வணங்கி மகிழும் ராமபிரானையும் வழிபட்டு வாருங்கள். வளம் தரும் வைரவர் சந்நிதிவந்தே வாழ்வில் உயர வரத்தை கேட்டேன்! நலம் தரும் செய்திகள் நாளும் வந்திட நாயகனே நீ அருள்புரிவாயே! என்று சந்நிதியில் பாடுங்கள். சந்தோஷங்கள் வந்து சேரும். -------------------------------------------------------------------------------- சிம்மராசி மகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்) குடும்ப ஸ்தான சனியாலே கூடுதல் லாபம் இனிமேலே! கம்பீரமான தோற்றத்தால் காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் சிம்மராசி நேயர்களே! ஏழரைச் சனியில் ஐந்தாண்டுகள் முடிந்து விட்டன. இனி குடும்பச்சனி இரண்டரை ஆண்டுகளும் குதூகலத்தை வரவழைத்துக் கொடுக்கப் போகிறது. முதல் ஆளாக இருந்து முன்னேற்றம் காண என்ன வழி என்பதைப் பற்றி யோசிப்பீர்கள். உங்கள் ராசிக்கு அதிபதியான சூரியன் ராஜகிரகம் என்பதால், ராஜ யோகமான வாழ்க்கை அமையும். பக்கபலமாக இருப்பவர்கள் அத்தனை பேரையும் அனுசரித்து வைத்திருப்பீர்கள். உங்கள் சுயஜாதகத்தை ஆராய்ந்து, சூரியன் இருக்கும் சாரபலமறிந்து, அதற்குரிய பரிகாரங்களைச் செய்து கொண்டால் எந்தநாளும் இனிய நாளாக மாறும். நவாம்சத்தில் சூரியன் இருக்கும் நிலையறிந்து, அதைப் பார்க்கும் கிரகம், அதோடு இணைந்த கிரகம் ஆகியவற்றை ஆராய்ந்து அவைகளுக்கு ஏற்ற விதத்தில் வரும் எண் களின் ஆதிக்கத்தில் உங்கள் பெயரையும், உங்கள் தொழில் நிலையத்தின் பெயரையும் அமைத்துக் கொண்டால் எதிர்காலம் இனிமையானதாக அமையும். ஸ்திர ராசியாக உங்கள் ராசி விளங்குவதால், உங்கள் குடும்பத்தில் இதே ராசியைச் சார்ந்த வேறொரு நபர் இருந்தால் உடனடியாக அதற்குரிய பரி காரங்களைச் செய்வது நல்லது. அப்பொழுது தான் குடும்ப முன்னேற்றம் கூடும். அதே போல சப்தமாதிபதி யாகச் சனி விளங்குவதால், திருமண வாழ்க்கையும் தித்திப்பாக அமைய பொருத்தம் பார்க்க வேண்டியது அவசியமாகும். இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்குச் சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சி தானா என்பதைப் பற்றிப் பார்ப்போம். ஜென்மச் சனி விலகியது! சிக்கல்கள் எல்லாம் ஓய்ந்தது! உங்களுக்கு வரும் சனிப்பெயர்ச்சி குடும்பச் சனியாக வருகிறது. ஏழரைச்சனி முதல் இரண்டரை ஆண்டுகள் விரயச் சனியாகி நடைபெற்றது. அடுத்த இரண்டரை ஆண்டுகள் ஜென்மச் சனியாக நடைபெற்றது. இப்பொழுது குடும்பச் சனி என்றழைக்கப்படும் விதத்தில் 2-ம் இடத்தில் சனி சஞ்சரிக்கப் போகிறார். குடும்பத்தில் ஏற்படும் குழப்பங் களைத் தீர்த்து வைத்து, கொள்கைப் பிடிப்போடு செயல்படும் அமைப்பையும் உருவாக்க வேண்டியது இந்த சனியின் கடமையாகும். அந்த அடிப்படையில் நாம் பார்க்கும் பொழுது, காக வாகனத்தானை நீங்கள் கைகூப்பித் தொழ திருநள்ளாறுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். யோசிக்காது நீங்கள் செய்த காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு 6, 7க்கு அதிபதியாகிறார். புரட்டாசி மாதம் 10-ந் தேதி முதல் 2-ல் சஞ்சரிக்கும் சனி அங்கிருந்து கொண்டு 4, 8, 11 ஆகிய இடங்களைப் பார்த்து புனிதப்படுத்தப் போகிறார். எனவே திடீர் இடமாற்றங்கள் தித்திக்க வைக்கலாம். வீடு வாங்கும் யோகம் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சித்தப்பா, பெரியப்பா என்று உங்களைச் சார்ந்தவர்களெல்லாம் உயர்வதற்கு வழி வகுத்துக் கொடுப்பீர்கள். யோகாதி பதியாகவும் சனி விளங்குவதால் தேக நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய நேரமிது. இரண்டாம் இடத்துச் சனி இனிமை தருமா? சனி உங்கள் ராசிக்கு ரண, ரோக ஸ்தானத்திற்கும், களத்திர ஸ்தானத்திற்கும் அதிபதி யாவார். உங்கள் ராசிநாதன் சூரியனுக்குப் பகைவனாகவும் விளங்குகிறார். "இரண்டில் சனி வந்தால் திரண்ட நிதி வரும் என்று சொல்லுவர். எனவே எதை நினைத்தீர்களோ அதை நினைத்த மாத்திரத்தில் செய்ய இயலும். குடும்பத்தில் கொடி கட்டிப் பறந்த பிரச்சினைகள் படிப்படியாக மாறும். கணவன் -மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். நிதிப் பற்றாக்குறை இனி ஏற்படாது. நீங்கள் செய்யும் செயலுக்கு ஏற்ற தொகை தேவையான நேரத்தில் வந்து சேரும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு உதிரி வருமானம் பெருகும். விருப்ப ஓய்வில் வெளியே வந்து தொழில் செய்ய முற்படுவர். பார்க்கும் சனியால் ஏற்படும் மாற்றங்கள்! உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தையும், 8-ம் இடத்தையும் 11-ம் இடத்தையும், சனி பார்க்கப் போகிறார். சனி நிற்கும் இடம் தன ஸ்தானம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பணக்காரரின் பார்வை உங்கள் மீது பதிந்தால் உதவிக்கரம் நீட்டுவார்கள் அல்லவா? அதைப்போல தன ஸ்தானத்தில் இருக்கும் சனியின் பார்வை உங்கள் மீது பதியும் போது பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். சுக ஸ்தானத்தில் சனியின் பார்வை பதிவதால் ஒருசில சமயங்களில் காய்ச்சல், தும்மல், கால், கை, இடுப்பு வலி போன்றவைகள் அலைச்சல் காரணமாக உருவாகலாம். தாயின் உடல் நலத்தில் திடீர் பாதிப்புகள் ஏற்படலாம். சுய ஜாதகம் வலுவாக இருந்தால் கவலைப் பட தேவையில்லை. எட்டாமிடத்தைப் பார்க்கும் சனியால் இழப்புகளை ஈடு செய்ய ஒரு வழி பிறக்கும். சேமிப்புகள் கரைந்ததே என்று கவலைப்பட்ட உங்களுக்கு இனி அவைகளை ஈடுகட்டும் விதத்தில் வாய்ப்புகள் வந்து சேரும். வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும். கொடுக்கல் -வாங்கல்களில் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது. வியாபாரத்தில் விசுவாசமுள்ள ஊழியர்கள் விலகிச் செல்லலாம். 6க்கு அதிபதியாக சனி விளங்குவதால் அடுத்த பணியாளர் உங்களுக்கு உடனே கிடைப்பார். வாகனப் பழுதுகள் அதிகரிக்கும் இந்த நேரத்தில் புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வாகன எண் உங்களுக்கு யோகம் தரும் எண் தானா? என்பதை ஆராய்ந்து வாங்குவது நல்லது. இருந்தாலும், அஷ்டம ஸ்தானத்தை சனி பார்ப்பதால் வாகனங்களில் எப்பொழுது சென்றாலும் மிககவனமாக இருப்பதே நல்லது. லாப ஸ்தானத்தை சனி பார்ப்பதால் மூடிக்கிடந்த தொழிலை மீண்டும் திறப்பு விழா நடத்தி மகிழ்வீர்கள். தூரதேச பயணங்களை மேற்கொள்ள விரும்புபவர்கள் ஹோரைப் பார்த்து புறப்பட்டுச் சென்றால் உயர்ந்த நிலையை அடையலாம். யோக பலம் பெற்ற நட்சத்திரமும், திங்கட்கிழமையும் இணையும் நாளில் தெசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை திருப்தியாக தேர்ந்தெடுத்துச் செய்தால் வெற்றி மீது வெற்றியை குவிக்கலாம். ராகு-கேது பெயர்ச்சி காலம்! 27.10.2009-ல் தனுசு ராசியில் ராகுவும், மிதுன ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். கோதண்டராகு உங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்திëற்காக எடுத்த முயற்சிகளை வெற்றி பெறச் செய்வார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற உயர் பதவிகளையும் மற்றும் அரசியலில் புதிய பொறுப்புகளையும் உங்கள் வாரிசுகள் பெறுவர். அதைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். பூர்வீக சொத்துக்களால் மிகப்பெரிய லாபம் கிட்டும். கேது பலத்தால் புதிய ஒப்பந்தங்களில் ஒன்றிரண்டு கை நழுவிப் போகலாம். இருப்பினும், புதிய கூட்டாளிகள் வந்திணைந்து தொழில் வளர்ச்சிக்கு ஆதரவு கொடுப்பர். மாற்றினத்தவர் களால் நன்மை கிடைக்கும் நேரமிது. ராகு-கேதுக்கள் நல்ல வாய்ப்புகளை வீடு தேடி வரவழைக்க சர்ப்ப சாந்திகளை முறையாக ஸ்தலங்களுக்குச் சென்று செய்து வருவது நல்லது. குருப்பெயர்ச்சிக் காலம்! கன்னி ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது குரு கும்பராசியில் பெயர்ச்சியாகிறார். அந்த இனிய நாள் 15.12.2009. கும்பத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால், வியாழ நோக்கம் வீடு தேடி வருகிறது. இதுவரை எண்ணற்ற வரன்கள் பார்த்து எதுவும் முடிவடையவில்லையே என்று அங்கலாய்த்தவர்கள் இப்பொழுது மகிழ்ச்சி கடலில் மிதக்கப்போகிறார்கள். மங்கல ஓசை இல்லத்தில் கேட்கும். தங்கு தடைகள் தானே அகலும். மீன ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது அஷ்டமத்துக் குருவின் ஆதிக்கம் மேலோங்கு கிறது. எனவே, விரயங்கள் கூடும். வீடு மாற்றங்கள் ஏற்படும். நாடு மாற்றம் செய்தவர்கள் மீண்டும் பழைய இடத்திற்கே வந்து சேருவர். பிள்ளைகள் வழியில் பெரும் செலவொன்று ஏற்படலாம். நல்ல வாய்ப்புகள் இல்லம் வந்து சேர திசை மாறிய தென்முகக் கடவுளை வழிபட்டு வாருங்கள். தித்திக்கும் விதத்தில் வாழ்க்கைப் பாதை அமையும். சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற... 14.1.2010 முதல் 31.5.2010 வரை மீண்டும் 27.1.2011 முதல் 13.6.2011 வரை சனி வக்ர இயக்கத்திலிருந்து செயல்படுகிறார். இந்த நேரத்தில் பணத்தேவைகள் பூர்த்தியாகும். கடன் சுமைகள் குறையும். ஆறுக்கு அதிபதி வக்ரம் பெறும் பொழுது எதிரிகள் விலகுவர். தொழில், உத்யோகத்தில் திடீர் மாற்றங்களைக் காண்பீர்கள். வரும் மாற்றம் வளர்ச்சி தரும் மாற்றம் தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதே நேரத்தில் ஏழாமிடத்திற்கும் சனி அதிபதியாவதால் குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் ஏற்படாமலிருக்க அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரமிது. சனிக்கிழமை தோறும் விரத மிருந்து விநாயகப் பெருமானுக்கு வெற்றி மாலை சூட்டி வழிபட்டு வாருங்கள். கட்டாயம் உங்கள் கனவுகள் நனவாகும். சிறப்பு வழிபாடு கன்னிச் சனியால் காரியங்களில் வெற்றி பெற வழிபாடு! ஏழரைச் சனியின் ஆதிக்கம் விலகும் சமயத்தில் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். எனவே, வார வழிபாடாக, ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று உமா மகேஸ்வரர், நந்திதேவர் ஆகியோரை வழிபட்டு வாருங்கள். சிறப்பு வழிபாடாக, சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டியை நோக்கி வாருங்கள். அங்கு வடக்கு நோக்கி வீற்றிருந்து அருள் வழங்கும் கற்பக மூர்த்தியை வழிபாடு செய்யுங்கள். சந்நிதியில், "தும்பிக்கை கொண்டவனே! தூதாகச் சென்றவனே! நம்பிக்கை கொண்டு நானுன்னைத் தொழுகின்றேன்! அம்புவியில் எனக்குவரும் அன்றாடப் பிரச்சினையை இன்பமுடன் தீர்த்துவைக்க எழுந்துவா கற்பகமே! என்று பாடினால், நம்பிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். -------------------------------------------------------------------------------- கன்னி ராசி உத்ரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்) ராசியில் வந்தார் சனிபகவான்! யோசித்துச் செய்தால் பலன் தருவார்! நிதானத்தையும், நேர்மையையும் கடைப்பிடித்து நிம்மதியைக் காணும் கன்னி ராசி நேயர்களே! உங்கள் ராசியில் சனி அடியெடுத்து வைக்கப் போகிறார். இந்த ஜென்மச் சனியின் ஆதிக்கம் வரும் முன்னதாகவே உங்களுக்குத் தெரிந்து விடும். சனி உங்கள் ராசியை நோக்கி வருகிறதே என்று பயப்பட வேண்டாம். உங்கள் ராசிநாதனுக்கு அவர் நண்பர் என்பதால், அதிக அளவில் பாதிப்புகளைக் கொடுக்க மாட்டார். உங்களுக்கு இப்பொழுது நடைபெறும் ஏழரைச் சனி முதல் சுற்றா, இரண்டாவது சுற்றா, மூன்றாவது சுற்றா என்பதை ஆராய்ந்து பாருங்கள். முதல் சுற்று என்றால் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகள் வந்து சேரும். இரண்டாவது சுற்று என்றால் இனிய பலன்கள் ஏராளமாக நடைபெறும். மூன்றாவது சுற்று என்றால் உடல் நிலையில் முக்கிய பாதிப்புகள் ஏற்படும். விலகும் சனியை அல்லது வந்திடும் சனியை விரும்பிக் கொண்டாட தாராபலம் பெற்ற நட்சத்திரம் பார்த்து பிரத்யேகமான வழிபாடுகளை வைத்துக் கொண்டால் ஜோரான பலன்கள் வந்து சேரும். உங்களுக்குள் ஓர் ஒப்பற்ற திறமை இருப்பது உங்களுக்கே தெரியாது. நீங்கள் மனக் கணக்குப் போடுவதில் வல்லவர்கள். மூச்செல்லாம் உங்கள் முன்னேற்றத்தில் இருப்ப தால்தான் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் உங்கள் வாழ்க்கை அமைகிறது. பெண்ணிற்கு, பெண்ணே எதிரி என்பது போல, கன்னிக்கு கன்னியே எதிரியாகலாம். எனவே இரண்டு கன்னி ராசிக்காரர்கள் ஒரு வீட்டில் இருந்தால் அதிகம் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உங்கள் சுயஜாதகத்தை ஆராய்ந்து, அதில் புதன் இருக்கும் சாரமறிந்து, நவாம்சத்தில் புதன் இருக்கும் நிலையையும் அறிந்து, அதற்குரிய எண்களின் ஆதிக்கத்தில் உங்கள் பெயரையும், உங்கள் தொழில் நிலையத்தின் பெயரையும் அமைத்துக் கொண்டால், உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். எடுத்த காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். திருமணப் பொருத்தங்கள் பார்க்கும் பொழுது, கணப்பொருத்தமும், ராசி அதிபதிப் பொருத்தமும், ரஜ்ஜ×ப் பொருத்தமும் அவசியம் தேவை. செவ்வாய்தோஷம் இருந்தால் எந்த விகிதத்தில் உள்ளதோ, அந்த விகிதத்தில் உள்ள வரன் வந்தால்தான் ஒற்றுமையாக இருக்கும். இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி, சாதகமான பெயர்ச்சிதானா என்பதைப் பற்றிப் பார்ப்போம். விரயச் சனி விலகியது! விடிவு காலம் துவங்கியது! ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சனி 2 1/2 ஆண்டு காலம் அங்கிருந்து ஆட்சி செய்யப் போகிறார். அதன் பிறகு இரண்டாம் இடத்திற்கு வந்து அங்கும் 21/2 ஆண்டு காலம் தங்கியிருப்பார். இந்த ஏழரைச் சனி தான் எண்ணற்ற மாற்றங்களை உங்களுக்குத் தருவதாகும். அனுபவத்தால் உலக நடப்புகள் அனைத்தையும் புரிந்து கொள்வீர்கள். அடுத் தடுத்து வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்ற சிந்தனை மேலோங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகலாம். இல்லத்தில் இருப்பவர்களைத் திருப்திப்படுத்த இயலாது. உதட்டில் ஒன்றும், உள்ளத்தில் ஒன்றும் வைத்துப் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உங்கள் ராசியில் வீற்றிருக்கும் சனி 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியாகிறார். அதன் பார்வை 3, 7, 10 ஆகிய இடங்களைப் புனிதப்படுத்துகிறது. எனவே அந்த இடங்களுக்குரிய ஆதிபத்யங்களிளெல்லாம் நல்ல மாற்றங் களைக் கொண்டு வந்து சேர்க்கும். குறிப்பாக சகோதர ஸ்தானம், களத்திர ஸ்தானம், தொழில் ஸ்தானம் ஆகிய இடங்கள் சனியின் பார்வைக்கு உட்படுவதால் சகோதர வழியில் பிரச்சினை ஏற்பட்டு அகலும். அவர்களின் குடும்ப விழாக்களுக்கு கொடுத்து உதவி குதூகலம் காண்பீர். தொழில் உத்யோகத்தில் தொல்லைகள் அதிகரிக்கும் என்பதால் நீங்களாகவே மாற்றம் செய்ய முன்வருவீர்கள். சூரியனின் மகனைச் சொல்லால் புகழ்ந்தால் காரியங்கள் சித்திக்கும், கடமை நிறைவேறும். அர்ச்சனைகள் செய்தால் அன்றாடம் துயர் விலகும். அபிஷேகம் செய்து பார்த்தால் அகிலமே வசமாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஜென்மச்சனியால் சிறப்புகள் ஏற்படுமா? ஜென்மத்தில் சஞ்சரிக்கும் சனி தொல்லைகளையே அதிகம் வழங்குவார். ஆனால் உங்கள் ராசிநாதனுக்கு அவர் நண்பராகிறார். எனவே நண்பர்கள் நட்பு வைத்துக் கொண்டால் நன்மைகளை சந்திப்பது போல, சனி பகவானையும் நீங்கள் வழிபட்டு வந்தால் வளர்ச்சி கூடும். உத்யோகம் பார்க்கும் இடத்தில் இருந்து ஊரில் உள்ளவர்கள் வரை யாரிடம் நீங்கள் பழக்கம் வைத்துக் கொண்டாலும், அவர்கள் உங்களைப் பற்றி விமர்சனம் செய்தால் அதை நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம். பொல்லாதவர்களை இனம் கண்டு, விலகி விடுவது நல்லது. புதுமுயற்சிகளில் ஈடுபடும் பொழுது அது பற்றி யோசியுங்கள். மற்றவர்களை நம்பிச் செயல்படும் பொழுது, அவர்கள் உங்களுக்கு உண்மையிலேயே உதவிக் கரம் நீட்டுவார்களா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். விலையுயர்ந்த பொருட்களைக் கையாளும் போது கவனம் தேவை. சஞ்சலம் தீர்க்கும் சனியின் பார்வை! உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், ஜென்மத்தில் நின்று கொண்டு 3, 7, 10 ஆகிய மூன்று இடங்களையும் பார்த்து புனிதப்படுத்தப் போகிறார். அவரது புனிதப் பார்வைக்கு மனிதர்களை மாற்றும் ஆற்றல் உண்டு. சகோதர ஸ்தானத்தில் பார்வை பதிவதால், உடன் பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். நீங்கள் தொடங்கப்போகும் தொழிலைப் பற்றி குறிப்பிட்ட நபர்களிடம் மட்டும் ஆலோசனை கேட்பது நல்லது. மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டால் போட்டித் தொழில் வைக்கவும் முன்வந்து விடுவார்கள். தொழிலில் வேலை பார்க்கும் பணியாளர்களிடமும் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது. யோக பலம் பெற்ற நட்சத்திரமும், புதன்கிழமையும் இணையும் நாளில் தெசா புத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் சிறப்பான வாழ்க்கையை காணலாம். ராகு-கேது பெயர்ச்சி காலம்! 27.10.2009-ல் தனுசு ராசியில் ராகுவும், மிதுன ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். கோதண்ட ராகுவாக, சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சர்ப்ப கிரகம் நற் பலன்களை வாரி வழங்கும். அற்புதமாக வீடு கட்டி குடியேறுவீர்கள். திருமண மண்டபம் மற்றும் காம்பளக்ஸ் போன்றவைகள் மூலம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். கேதுவின் சஞ்சார பலத்தால் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தொழிலுக்கு புதிய கூட்டாளிகளை சேர்த்துக் கொள்வீர்கள். எப் பொழுதோ வாங்கிய இடம் இப்பொழுது நல்ல விலைக்கு விற்று லாபத்தை கொடுக்கும். ராகு-கேதுக்களுக்கு உரிய சர்ப்ப சாந்தியை முறையாகச் செய்தால் சோகங்களிலிருந்து விடு படலாம். குருப்பெயர்ச்சிக் காலம்! கன்னி ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது 15.12.2009 அன்று கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கப் போகிறார். அதன்பிறகு 2010-ல் மீன ராசியில் குரு சஞ்சரிப்பார். இதன் விளைவாக, உத்யோக மாற்றங்கள் ஒரு சிலருக்கு வந்து சேரலாம். ஒரு சிலர் விருப்ப ஓய்வு பெற்று விரும்பும் விதத்தில் தொழிலை அமைத்துக் கொள்ளலாம். எதிர்ப்புகள் மாறும். புதிய திட்டங்களை தீட்டி பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது மிகச் சிறந்த பலன்கள் உங்களுக்கு வந்து சேரும். குருவின் நேர்பார்வை உங்கள் ராசியில் பதிவதால் வியாழ நோக்கம் செயல்படப்போகிறது. தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். துணையாக இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். பட்ட துயரங்கள் இனி விலகியது என்று பலரிடமும் சொல்வீர்கள். பணம் காசுகள் எதிர் பார்த்தபடியே வந்து சேரும். இக்காலத்தில் வியாழக்கிழமை தோறும், தென்முகக் கடவுளை வழிபட்டு வருவதோடு, திசை மாறிய தென்முகக் கடவுள் வீற்றிருந்து அருள் வழங்கும் திருக்கோவில்களுக்கும் சென்று வழிபட்டு வந்தால் செல்வநிலையை மேலும் உயர்த்திக் கொள்ளலாம். சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற... 14.1.2010 முதல் 31.5.2010 வரை மீண்டும் 27.1.2011 முதல் 13.6.2011 வரை சனி வக்ர இயக்கத்திலிருந்து செயல்படுகிறார். இதன் விளைவாக, பிள்ளைகள் வழியில் சில பிரச்சினைகள் உருவாகலாம். அவர்களின் திருமணம் சம்பந்தமாக நீங்கள் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளும் சூழ்நிலை உருவாகலாம். பூர்வீக சொத்துக்களை விற்கும் பொழுது பத்திரங்களை நன்றாக படித்துப் பார்த்து கையெழுத்திடுவது நல்லது. பஞ்சாயத்துக்கள் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே போகலாம்! உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்பது நல்லது. வசந்த காலம் உருவாக, சில விஷயங்களை கண்டும், காணாமலும் இருப்பது நல்லது. பிறரைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது உத்தமம். மாற்று கருத்துடையோரின் எண்ணிக்கை கூடாமல் இருக்க மற்றவர்களை அனுசரித்து செல்லலாம். சனிக்கிழமை தோறும் விரதமிருந்து மந்தனை வழிபட்டால் வந்த துயரங்கள் விலகி ஓடும். சிறப்பு வழிபாடு கன்னிச் சனியால் எண்ணிய காரியம் வெற்றி பெற வழிபாடு! ஜென்மச் சனியின் ஆதிக்கத்திலிருந்து விடுபடவும், சிறப்பான வாய்ப்புகள் வந்து சேரவும், உண்மையிலேயே உங்களுக்கு உறுதுணை புரியும் தெய்வங்களை நாடிச் சென்று வழிபட்டு வருவது நல்லது. புதன் கிழமை தோறும் விஷ்ணு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சிறப்பு வழிபாடாக, நாகர்கோவில் அருகிலுள்ள சுசீந்திரம் தானுமாலையன் கோவிலில் உள்ள ஆஞ்ச நேயரை வழிபட்டு வாருங்கள். அல்லல்கள் தீரும், ஆனந்தம் பெருகும். சனிக்கிழமை சனீஸ்வரர் சந்நிதியில், சங்கடம் தீர்க்க வந்த சனியெனும் ஈசா! நீயும் மங்கல வாழ்வைக் காண மகிழ்வுடன் அருளு வாயே! என்று பாடுங்கள். இன்பங்கள் இல்லம் வந்து சேரும். -------------------------------------------------------------------------------- துலாம் ராசி சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரி, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்) ஏழரைச் சனியின் தொடக்கம்! எதிலும் வேண்டும் கவனம்! நம்பி வந்தவர்களை கைகொடுத்து காப்பாற்றும் நல்ல உள்ளம் படைத்த துலாம் ராசி நேயர்களே! ஏழரைச் சனி உங்களுக்கு தொடங்கி விட்டது. வாழ்வில் அனுபவங்களின் வாயிலாக பலவற்றையும் நீங்கள் அறிந்து கொள்ளப் போகிறீர்கள். உலகம் இப்படித்தான் இருக்கும் என்பதை உணர வைப்பது ஏழரைச் சனி தான். முதல் இரண்டரை ஆண்டு விரயச்சனி, அடுத்து வருவது ஜென்மச்சனி, அதன் பிறகு வருவது குடும்பச்சனி. ஆக மொத்தம் வாழ்வில் ஏழரை ஆண்டுகளும் திடீர் திடீரென திருப்பங்கள் ஏற்படும். கேள்விக் குறியாக இருந்த நீங்கள் ஆச்சரியக்குறியாக மாறப் போகிறீர்களா? இல்லை ஆச்சரியக் குறியாக இருந்த நீங்கள் கேள்விக்குறியாக மாறப் போகிறீர்களா? என்பதை உங்கள் சுய ஜாதகத்தைப் பொறுத்தே முடிவு செய்ய வேண்டும். ஜோதிட துறையில் மிகுந்த ஈடுபாடுகளை வரவழைத்துக் கொடுப்பது ஏழரைச் சனியின் ஆதிக்க காலம் தான். இருப்பினும், உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு சனி நட்பு கிரகம் என்பதால், பெரியதாக பாதிப்புகளைக் கொடுக் காது. எல்லாவற்றிற்கும் வடிகாலாக விளங்குவது வழிபாடுகள் தான். அந்த வழிபாட்டில், விநாயகப் பெருமான், அனுமன், சனீஸ்வரர் ஆகிய மூவர் மீதும் பக்தி செலுத்தி துயரங்கள் குறைய வழி காணுங்கள். எதைச் செய்தாலும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்தால் வெற்றிக்கு வித்திடலாம். நீங்கள் சுக்ரனின் ஆதிக்கம் பெற்றவர்கள். சுகங்களையும், சந்தோஷங்களையும் அதிகம் காண்பீர்கள். நீதிக்கும், நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். சுய ஜாதகத்தில் சுக்ரனின் சார பலமறிந்து பரிகாரங்களைச் செய்தால் சொல்லை செயலாக்கி காட்ட இயலும். நவாம்சத்தில் சுக்ரன் இருக்கும் நிலையறிந்து, அதைப் பார்க்கும் கிரகம், இணைந்த கிரகத்தின் பலமறிந்து அதற்கு உரிய எண்களின் ஆதிக்கத் தில் உங்கள் பெயரையும், உங்கள் தொழில் நிலையத்தின் பெயரையும் அமைத்துக் கொண்டால், எதிர்காலம் இனிமையாக இருக்கும். இல்லம் தேடி இனிய செய்திகளும் வந்து சேரும். களத்திரகாரகன் சுக்ரன் ராசிநாதனாக அமைவதால், கல்யாணப் பொருத்தம் பார்க்க வேண்டியது அவசியமாகும். வெள்ளிக்கிழமை பிறந்தவர்களாக இருந்தால் துல்லியமான பொருத்தங்களைப் பார்ப்பதன் மூலமே நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயலும். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த உங்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சி தானா? என்பதைப் பற்றிப் பார்ப்போம். விரயச் சனியின் பலனாலே விதவிதமாகப் பொருள் சேரும்! உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி ஏழரைச் சனியாக வருகிறது. சனி வந்து விட்டதே என்று நீங்கள் சங்கடப்பட வேண்டாம். இனிதான் உங்களுக்கு எதிர்காலமே இருக்கிறது. முதல் சுற்று சனி நடந்தால் முக்கிய காரியங்களை யோசித்துச் செய்ய வேண்டும். மறு சுற்று சனி நடந்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஒரு சுற்று, இரு சுற்று முடிந்து மறு சுற்று வந்தாலும், மந்தன் இருக்கும் ஆலயங்களை நோக்கி அனுகூல நட்சத்திரமன்று சென்று வழிபட்டு வந்தால் வந்த துயரங்கள் விலகி ஓடும். வளர்ச்சியும் கூடும். வந்த சனியை வரவேற்க நீங்கள் பெயர்ச்சியாகும் நேரத்தில், பெயர்ச்சியாகும் நாளில் வளர்ச்சி ஏற்பட ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வையுங்கள். அபிஷேக நேரத்தில் அவன் பெயரை உச்சரியுங்கள். ஆனந்த வாழ்க்கை அமையும். உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான் புரட்டாசி 10 முதல் 12-ல் சஞ்சரிக்கப் போகிறார். அங்கிருந்து கொண்டு அதன் அருட்பார்வையை 2, 6, 9 ஆகிய இடங்களில் செலுத்துகிறார். அதன் விளைவாக பல வித மாற்றங்களை நீங்கள் காணப் போகிறீர்கள். வாக்கு, தனம், குடும்பம், ரோகம், எதிர்ப்பு, ஜீவனம், தந்தை, பூர்வீகம் ஆகியவற்றைக் குறிக்கும் இடங்களிளெல்லாம் புதிய மாற்றங்களைக் காணப் போகிறீர்கள். கல்யாணக் கனவுகளை நனவாக்க முயற்சி எடுப்பீர்கள். குடும்பப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். உடன் பணி புரிபவர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் அகலும். பிரபலங்களின் தொடர்பால் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். வாகன மாற்றம் செய்வதன் மூலம் பழுதுச் செலவுகளிலிருந்து தப்பிக்க இயலும். தந்தை வழி உறவில் இருந்த விரிசல் மறையும். சகோதரர்களுடன் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விட்டுக் கொடுத்துச் செல்வதே நல்லது. 12-ம் இடத்துச் சனி பண வரவு தருமா? சனி உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்திற்கும், பஞ்சம ஸ்தானத்திற்கும் அதிபதியாகிறார். அது விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது உங்கள் உடல் நலத்திற்காகவும், உங்கள் குழந்தைகளின் உடல் நலத்திற்காகவும் ஒரு தொகையைச் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் உங்கள் சொல்லுக்கு கட்டுப்படாமல் பிரச்சினைகளை உருவாக்கலாம். சுப காரியங்களை நடத்துவதில் உறவினர் குறுக்கீடு அதிகரிக்கும். நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க எடுக்கும் முயற்சிகள் ஒரு சில மட்டுமே வெற்றி பெறும். கவுரவத்தை தக்க வைத்துக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். பார்க்கும் சனியால் ஏற்படும் மாற்றங்கள்! சனி உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியாகிறார். அவர் புரட்டாசி மாதம் 10-ந் தேதி முதல் 12-ல் சஞ்சரித்தபடியே 2, 7 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். எனவே அந்த இடங்களில் எல்லாம் என்னென்ன ஆதிபத்யம் இருக்கிறதோ, அவற்றில் எல்லாம் மாற்றங்களையும், தெசாபுத்தி வலுப்பெற்றவர்களுக்கு ஏற்றங்களையும் கொடுப்பார். உங்களிடம் உள்ளன்போடு பழகியவர்கள் விட்டு விலகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சகோதரர்களில் ஒரு சிலர் மட்டுமே ஒத்து வருவர். உத்யோகத்தைப் பொறுத்தவரை திடீர் இடமாற்றங்கள் உருவாகும். காரணம் உடன் பணிபுரிபவர்களின் எதிர்ப்புத்தான். பூர்வீக சொத்துக்களில் சரியான முறையில் பாகப்பிரிவினைகள் ஏற்படாது. புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். எல்லாவற்றிற்கும் வடிகால் சனி பகவானின் வழிபாடுதான். எனவே திருநள்ளாறு முதல் குச்சானூர் வரை தேடிச் சென்று சனிபகவானின் ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டினால் இனி வரும் வாழ்க்கை இனிய வாழ்க்கையாக மாறும். யோகபலம் பெற்ற நட்சத்திரமும், வெள்ளிக்கிழமையும் கூடும் நாளில் தெசாபுத்திக்கேற்ப தெய்வ வழிபாடுகளையும் தேர்ந்தெடுத்துச் செய்தால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். ராகு - கேது பெயர்ச்சிக் காலம்! 27.10.2009 ல் தனுசு ராசியில் ராகுவும், மிதுன ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். 3-ல் சஞ்சரிக்கும் ராகு உடன் பிறப்புகள் வழியில் ஒத்து வர வைப்பார். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வழக்குகளில் வெற்றி கிட்டும். பெண் வழிப் பிரச் சினைகள் நல்ல முடிவிற்கு வரும். ஒன்பதில் சஞ்சரிக்கும் கேது உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்போடு இல்லம் கட்டிக் குடியேற வழி பிறக்கும். ஆன்மிக வழிபாட்டிற்கென்று செலவழிப்பீர்கள். தூர தேசத்தில் இருந்து வரும் தகவல் மகிழ்ச்சியைக் கொடுக்கும். சர்ப்ப சாந்திகளை முழுமையாக செய்து கொண்டால் ராகு - கேதுக் களால் நற்பலன்களை நாளும் வர வழைத்துக் கொள்ளலாம். குருப்பெயர்ச்சிக் காலம்! கன்னி ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கிறார். 15.12.2009ல் வரும் கும்ப குருவால் உங்கள் ராசி புனிதமடைகிறது. எனவே பண வரவு திருப்தி தரும். பகை மாறும், மனதில் குடி கொண்டிருந்த கவலை மாறும். மங்கல ஓசை இல்லத்தில் கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழில் முன்னேற்றம் கூடும். அதன் பிறகு மீன ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. வாங்கிய கடனை வசூலிக்கப் பலரும் வீடு தேடி வருவர். ஆனால் கொடுத்த கடன்கள் வசூலாகாது, வீடு மாற்றம் செய்யலாமா, நாடு மாற்றம் செய்யலாமா என்ற எண்ணம் அலை மோதும். இருப்பினும் தென்முகக் கடவுள் திசை மாறியிருக்கும் கோவிலுக்குச் சென்று நீங்கள் வழிபட்டால் நன்மைகளை நாளும் சந்திக்கலாம். சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற... 14.1.2010 முதல் 31.5.2010 வரை மீண்டும். 27.1.2011 முதல் 13.6.2011 வரை சனி வக்ர இயக்கத்திலிருந்து செயல்படுகிறார். இதன் விளைவாக, ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். எந்த நோய்க்கும் நீங்களாகவே முடிவெடுத்து ஒரு மருந்தைச் சாப்பிடாமல் தக்க விதத்தில் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது. வீடு வாங்குவதற்கு போட்ட திட்டங்கள் நிறைவேற பூமிகாரகனை வழிபடுவது நல்லது. பிள்ளைகள் எடுக்கும் திடீர் முடிவு உங்களுக்கு பிரச்சினைகளை உருவாக்கலாம். அவர்களை கண்காணித்தாலும் கோபம் வரும். கண்காணிக்காவிட்டாலும் பிரச்சினை வரும். எனவே, அவர்களை அன்பு காட்டி, அரவணைத்து உங்கள் கருத்துக்களை மூன் றாம் நபர் வாயிலாக சொல்லி செயல்படுத்தும் சூழ்நிலை அமையும். பூர்வீக சொத்துக்கள் விற்பனையாகலாம். சனியை வழிபட்டால் சந்தோஷம் கிடைக்கும். சிறப்பு வழிபாடு கன்னிச் சனியால் எண்ணிய காரியங்களில் வெற்றி பெற வழிபாடு! விரயச் சனியின் ஆதிக்கத்தால் சுப விரயம் ஏற்படவும், சொல்லை செயலாக்கி காட்டவும், வெள்ளிக்கிழமை தோறும் விநாயகப் பெருமான், சிவன், பார்வதி ஆகியோரை வழிபட்டு வாருங்கள். சிறப்பு வழிபாடாக, சிவகங்கை மாவட்டம் கீழச்சீவல்பட்டியிலுள்ள கூடல் அழகிய சுந்தர ராஜ பெருமாள், சுந்தரவல்லி தாயார் ஆகியோரை வழிபட்டு அருகில் இருக்கும் வாலில் மணிகட்டிய ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள். அல்லல்கள் தீரும். சனிக்கிழமை சனீஸ்வரர் சந்நிதியில், "கருப்பினில் பிரியம் வைத்த கனிவான சனியே! உன்னை விருப்புடன் வணங்குகிறேன்! வெற்றியை வழங்குவாயே! என்று பாடுங்கள். நன்மைகளை நாளும் சந்திக்கலாம். -------------------------------------------------------------------------------- விருச்சிக ராசி விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந. நி, நே, நோ, ய, யி, யு உள்ளவர்களுக்கும்) லாப ஸ்தானச் சனியாலே நாளும் குவியும் வருமானம்! வி.ஐ.பி.க்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் விருச்சிக ராசி நேயர்களே! ஆண்டவனைப் பற்றியும், ஆண்டு கொண்டிருப்பவரைப் பற்றியும் அடிக்கடி எண்ணிக் கொண்டிருப்பவர்கள் நீங்கள். இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்பிற்கு ஆளாகப் போகிறீர்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் லாபம் இரு மடங்காகும். நீச்ச சந்திரனுக்கு நீங்கள் சொந்தக்காரர் என்பதால், ஆச்சர்யப்படும் விதத்தில் உங்கள் வாழ்க்கை அமையும். கால் நூற்றாண்டு வயது உங்களுக்கு வரும் பொழுதே காசினியில் புகழையும், பொருளையும் குவிக்க தொடங்கி விடுவீர்கள். அரை நூற்றாண்டுக்கு மேல் உங்கள் வயது வரும் பொழுது, நீங்கள் வி.வி.ஐ.பி.யின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். உங்கள் சுய ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் சார பலமறிந்து அதற்குரிய பரிகாரங்களை முறையாகச் செய்து கொண்டால், வெற்றித் தேவதை உங்கள் வீட்டில் எந்நாளும் குடியேறும். நவாம்சத்தில் செவ்வாய் மற்றும் சனி இருக்கும் நிலை அறிந்து, அதோடு இணைந்த கிரகம், பார்க்கும் கிரகம் ஆகியவற்றையும் ஆராய்ந்து அதற்கேற்ற விதத்தில் வரும் எண் ஆதிக்கத்தில் உங்கள் பெயரையும், உங்கள் தொழில் நிலையத்தின் பெயரையும் அமைத்துக் கொண்டால் செல்வ நிலையும் உயரும், செல்வாக்கும் மேலோங்கும். திருமணத்தை பொறுத்தவரை உங்களுக்கு சப்தமாதிபதி சுக்ரன் என்பதால், திருத்தம் நிறைந்த பெண்ணாக இருந்தாலும், பொருத்தம் பார்த்து செய்தால் தான் வருத்தமில்லாத வாழ்க்கை அமையும். பழைய சடங்கு சம்பிர தாயங்களில் அதிக நம்பிக்கை கொண்ட உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி எந்தெந்த வழிகளில் எல்லாம் நன்மையைச் செய்யப் போகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம். வந்தது லாபச்சனி, வருமானம் குவியும் இனி! உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இதுவரை சஞ்சரித்து வந்த சனி பகவான், இனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். வரும் இரண்டரை ஆண்டு காலம் உங்கள் லட்சியங்கள் அனைத்தும் நிறைவேறப் போகின்றன. அந்நிய தேசத்திலிருந்து அழைப்புகள் வந்து சேரலாம். உங்கள் ராசிக்கு பதினொன்றில் வீற்றிருக்கும் சனி தன் பார்வையை 1, 5, 8 ஆகிய இடங்களில் பதிக்கிறார். ஜென்மத்தைப் பார்க்கும் சனியின் பார்வையால் சிறு சிறு தொல்லைகள் உடல் நிலையில் ஏற்பட்டாலும், மருத்துவத்தால் அப்போதைக்கு அப்போது குணமாகி விடும். உங்கள் எண்ணத்திற்கு வலிமை அதிகம் என்பதால், நடக்கும் என்று நீங்கள் நினைத்தால் நிச்சயம் நடந்தே தீரும். பூர்வ புண்ணியத்தால் உங்களுக்கு எந்தெந்த யோகங்கள் எல்லாம் வந்து சேர வேண்டுமோ அவை எல்லாம் இப்பொழுது வந்து சேரும். நல்ல காரியங்கள் பலவற்றிற்கும் பிள்ளையார் சுழி போடுவீர்கள். கவுரவம், புகழ் கூடும். பொன்னும் பொருளும் போற்றுகிற செல்வாக்கும் இன்னும் பெருகி இயல்பான வளர்ச்சி காண, காக வாகனத்தானை கை கூப்பி வழிபடுவது நல்லது. பொருள் வளத்தைப் பெருக்கும் புனிதமான சனி! பதினொன்றில் சனி வந்தால் பண வரவு அதிகரிக்கும் என்றும், நதி போல துயர் விலகி நலம் யாவும் தேடி வரும் என்றும் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகி, வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். பூமி பூஜை செய்தும் கட்டிடப் பணியை தொடர முடியவில்லையே என்று கவலைப்பட்டவர்கள், இப்பொழுது மீண்டும் யோகமான நாள் பார்த்து, அனுகூல நட்சத்திரத்தில் பூமி பூஜை செய்தால் கட்டிடம் வளர்ச்சி பெறும். சந்தோஷம் அளிக்கும் சனியின் பார்வை! உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக விளங்குபவர் சனிபகவான். அவர் லாப ஸ்தானத்தில் இருந்து கொண்டு 1, 5, 8 ஆகிய இடங்களைப் பார்வை யிடுகிறார். அதன் பார்வை பலத்தால் பல நல்ல வாய்ப்புகள் இல்லத்தில் வந்து சேரப் போகின்றன. ஜென்ம ராசியைப் பார்க்கும் சனி சகாய ஸ்தானத்திற்கும், சுக ஸ்தானத்திற்கும் அதிபதியாக இருப்பதால், வசதி வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்வார். குடும்ப முன்னேற்றம் கருதி நீங்கள் எடுத்த முடிவுகள் வெற்றி பெறும். குல தெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். ஊர் மாற்றங்கள், இடமாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டாம். இருக்கும் இடமே உங்களுக்கு இனிய இடமாக மாறப் போகிறது. எதிரிகள் விலகுவர். உயரதிகாரிகள் உங்களுக்கு மட்டும் நிறைய சலுகைகள் தருவர். பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். பத்திரிகை, கலை, ஜோதிடம், மருத்துவம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்களுக்கெல்லாம் பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பப்போகிறது. வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். குழந்தைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பங்காளிகள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பர். தங்கு தடையில்லாமல் காரியங்கள் தானாகவே நடக்கவும், மங்கல ஓசை மனையில் கேட்கவும் யோக பலம் பெற்ற நாளில், யோக பலம் பெற்ற நட்சத்திரமும், செவ்வாய்க்கிழமையும் இணையும் நாளில் தெசா புத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். குறிப்பாக, திசை மாறிய விக்னேஷ்வரர், திசை மாறிய நந்திகேஷ்வரர், திசை மாறிய சர்வேஸ்வரர், வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயர் போன்ற தெய்வங்கள் வீற்றிருக்கும் புராதன கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால், உங்கள் நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெற்று விடும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். ராகு - கேது பெயர்ச்சி காலம்! 27.10.2009-ல் தனுசு ராசியில் ராகுவும், மிதுன ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். கோதண்ட ராகுவாக அமைந்து தனஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் குடும் பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் ஏராளம் நடை பெறும். கடை திறப்பு விழாக்களை நடத்திப் பார்ப்பீர்கள். தங்கம், வெள்ளி தாராளமாக வந்து சேரும். எதிரிகள் விலகுவர். அஷ்டமத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மாற்று வைத்தியத்தால் உடல் நலம் சீராகும். மக்கட் செல்வாக்கு அதிகரிக்கும். கூட்டு முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். கொடுக்கல் - வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். பாராட்டு விழாக்களும், விருது வழங்கும் விழாக்களும் உங்களைத் தேடி வரும். பெற்றோர்களும், மற்றோர்களும், உற்றார், உறவினர்களும் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சர்யப்படுவர். அரவு கிரகங்கள் மேலும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கவும், இரவு, பகலாக பாடு பட்டதற்கேற்ற பலன்கள் கிடைக்கவும், யோக பலம் பெற்ற நாளில் சர்ப்ப கிரகங்களுக்குரிய ஆலயத்திற்குச் சென்று சர்ப்ப சாந்தியை முறையாகச் செய்வது நல்லது. குருப்பெயர்ச்சிக் காலம்! கன்னி ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கிறார். 15.12.2009 முதல் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. குரு பார்க்க கோடி நன்மை அல்லவா? எனவே, உங்கள் உடல் நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கடன் சுமை குறையும். கவலைகள் தீரும். தொழில் வளம் பெருக புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை மேற்கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பயணங்களால் பலன் கிடைக்கும். 2010-ல் மீனத்தில் குரு சஞ்சரிக்கப் போகிறார். அதன் பார்வை உங்கள் ராசியில் முழுமையாகப் பதிவதால், வியாழ நோக்கம் முழுமையாக செயல்படப் போகிறது. தொழில் வளம் சிறப்பாயிருக்கும். விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவுக்கு வரும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் ஏராளம் நடைபெறும். திசை மாறிய தென்முகக் கடவுளை வழிபட்டு வாருங்கள். செல்வ நிலையை மேலும் உயர்த்திக் கொள்ளலாம். புதுக்கோட்டை மாவட்டம் மலையக் கோவில் வழிபாடு மகத்துவம் வழங்கும். சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற... 14.1.2010 முதல் 31.5.2010 வரை மீண்டும் 27.1.2011 முதல் 13.6.2011 வரை சனி வக்ர இயக்கத்திலிருந்து செயல்படுகிறார். இதன் விளைவாக, உடன் பிறப்புகள் வழியே ஏற்படும் ஒரு நல்ல காரியத்தை முன் நின்று நடத்தி வைப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் பாக பிரிவினைகள் சுமூகமாக முடியும். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். வீட்டிற்கு தேவையான அத்யாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை வாங்கிச் சேர்ப்பீர்கள். வீடு கட்டும் முயற்சியில் வெற்றி கிட்டும். தாய் வழி ஆதரவோடு தக்க விதத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். கல்விக்காக எடுத்த முயற்சி கை கூடும். கடல் தாண்டும் முயற்சியில் ஆர்வம் காட்டியவர்கள் சுய ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து அதன் பிறகு முடிவெடுப்பது நல்லது. சனிக்கிழமை தோறும் விரதமிருந்து எள் தீபமேற்றி சனி பகவானை வழிபடுவதோடு, காகத்திற்கும் சோறு வைத்தால் தேக நலனும் சீராகும். சிறப்பான வாழ்க்கையும் வந்து சேரும். சிறப்பு வழிபாடு கன்னிச் சனியால் எண்ணிய காரியம் வெற்றி பெற வழிபாடு! லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் வருமானம் குவிக்கவும், வளமான வாழ்க்கை அமையவும் சனிக்கிழமை தோறும் விநாயகப் பெருமானையும், அனுமனையும், சனீஸ் வரரையும் வழிபட்டு வாருங் கள். செவ்வாய்க்கிழமை தோறும் முருகப் பெருமானை வழிபடுவதோடு, பவுர்ணமி தோறும் கிரிவலம் வாருங்கள். சிறப்பு வழிபாடாக, புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன் பட்டியிலுள்ள நெய் நந்தீஸ்வரரை வழிபட்டு, நலம் தரும் நந்தீஸ்வரர் பாடலை சந்நிதியில் பாடுங்கள். சனிக்கிழமை சனீஸ்வரர் சந்நிதியில், சூரியன் மகனாய் வந்து சுகத்தினை வழங்கும் ஈசா! காரிய வெற்றி காண கனிவுடன் அருளுவாயே! என்று பாடுங்கள். வெற்றி நிச்சயம் வந்து சேரும். விருப்பங்களும் நிறைவேறும். -------------------------------------------------------------------------------- தனுசு ராசி மூலம், பூராடம், உத்ராடம் 1-ம் பாதம் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள் யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கும்) பத்தாமிடத்தில் வந்த சனி பதவியும் புகழும் தந்திடுமே! வந்த விருந்தினர்களை வரவேற்பால் திணறடிக்கும் தனுசு ராசி நேயர்களே! இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு இதயம் மகிழும் விதத்தில் அமையப் போகிறது. சொந்தங்கள் பாராட்ட, சுற்றத்தார் வியப்படைய முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். எப்பொழுதும் உற்சாகத்துடன் காணப்படுபவர்கள் நீங்கள். எதிரியைப் பேச வைத்து எடை போடுவதிலும் வல்லவர்கள். உள்ளத்தில் அன்பு செலுத்தினால், இந்த உலகத்தை வசமாக்கலாம் என்ற தத்துவத்தை அறிந்து வைத்திருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, சனி உங்களுக்கு யோகம் செய்யும் கிரகம் என்பதால் வந்த வரனின் ஜாதகத்திலும் சனி பலம் பெற்றிருக்கும் அமைப்பைப் பார்த்து திருமணம் செய்து கொள்வது நல்லது. விண்கணிதமும், எண் கணிதமும் இணைத்து பார்த்து திருமணம் செய்து கொண்டால், தாரத்தால் தொல்லைகள் ஏற்படாது. தக்க விதத்தில் முன்னேற்றங்களும் வந்து சேரும். சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பது உங்களுக்கு கை வந்த கலை. சேமிப்பு உங்களுக்கு இருக்குமா? என்பது சந்தேகம் தான். வரவைச் செலவாக்கி, வரும் விருந்தை உபசரித்து, இரவு பகலாக இன்பத்தை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் நீங்கள். நான் என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகப்படுத்துவீர்கள். அரசியல் முதல் ஆன்மிகம் வரை அறிந்து வைத்திருக்கும் நீங்கள் உங்கள் சுய ஜாதகத்தை ஆராய்ந்து, அதில் குரு இருக்கும் சார பலமறிந்து, நவாம்சத்தில் குருஇருக்கும் நிலையையும் அறிந்து அதற்குரிய எண்ணின் ஆதிக்கத்தில் உங்கள் பெயரையும், உங்கள் தொழில் நிலையத்தின் பெயரையும் அமைத்துக் கொண்டால், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காணலாம். உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சி தானா என்பதைப் பற்றிப் பார்ப்போம். பத்தாமிடத்தில் சனி வந்தார்! பலவித நன்மை அவர் தருவார்! இதுவரை ஒன்பதாமிடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இனி இரண்டரை ஆண்டு காலம் பத்தாமிடத்தில் சஞ்சரித்து உங்களுக்கு பக்கபலமாக இருந்து பலவித வாய்ப்புகளை அள்ளிக் கொடுப்பார். எனவே, சிக்கல்கள் தீரும். சிரமங்கள் குறையும். பணவசதியைப் பெருக்கிக் கொள்ள தொலைதூரத்திலிருந்து அழைப்புகள் வந்து சேரும். மூல கணபதியையும், முருகப் பெருமானையும் காலநேரம் பார்க்காமல், கை தொழுது வந்தால் ஞாலம் போற்றும் வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார். பெற்றோர்களின் உடல்நிலையில் திடீர் பாதிப்புகளைக் கொடுக்கலாம். அவர்களின் சுய ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்து அதற்குரிய பரிகாரங்களைச் செய்தால் பாதிப்பிலிருந்து விடுபட இயலும். இக்காலத்தில் அன்னதானம் செய்வதிலும், வஸ்திர தானம் செய்வதிலும் ஈடுபாடு கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு இரண்டு, மூன்று ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான் பத்தாமிடத்தில் சஞ்சரித்தபடி அதன் பார்வையை 4, 7, 12 ஆகிய இடங்களில் செலுத் துகிறார். ஆகவே, அந்த இடங்களில் எல்லாம் நல்ல மாற்றங்களைக் கொடுக்கப் போகிறார். தாய் ஸ்தானம், குடும்பம் மற்றும் அந்நிய தேச தொடர்புகள், உறவினர் வகைகளில் எல்லாம் இந்த சனிப்பெயர்ச்சியால் நிறைய மாற்றங்கள் உருவாகப் போகின்றன. குறிப்பாக, வாகன மாற்றம் உங்களுக்கு இக்காலத்தில் அவசியம் தேவை. வெளியில் புகழ், கீர்த்தி அதிகம் இருக்கும். உங்களுக்கு வீட்டிற்குள் எதிர் பார்த்த அளவிற்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். மந்தனின் பார்வையால் மகத்தான பலன் காண, சிந்தனையை நீங்கள் சனியின் மீது செலுத்துங்கள். "மந்தனாம் காரி, நீலா மணியான மகர வாசா! எந்த நாள் ஆனபோதும் இனிய நாள் ஆக மாற்று! என்று பாடி வழிபட்டால், எல்லா நாட்களும் இனிய நாட்களாக மாறும். வந்த சனி என்ன செய்யும்? பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி செயல் ஸ்தானத்தைப் பலப்படுத்துகிறது. எனவே, செய்யும் செயல்கள் சிறப்படையும். இதுவரை இழுபறியில் இருந்த காரியங்கள் இப்பொழுது துரிதமாக முடிவடையும். வர்த்தகம் தழைக்கும். வாரிசுகளின் முன்னேற்றம் கண்டு ஆச்சர்யப்படுவீர்கள். பெற்றோர் வழியே வரும் பிரச்சினைகளை சுமூகமாக முடித்துக் கொள்வது நல்லது. அவர்களின் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வைத்தியச் செலவு மேலோங்கும். அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருக்க அனுசரித்து செல்வது நல்லது! மந்தன் பார்வையால் உருவாகும் மகத்தான பலன்கள்! உங்கள் ராசிக்கு இரண்டு, மூன்றுக்கு அதிபதியான சனி பகவான் பத்தில் நின்று கொண்டு 4, 7, 12 ஆகிய இடங்களை நன்றாகப் பார்க்கின்றார். யோகம் செய்யும் கிரகத்தின் பார்வை பதிவது நன்மைதான். தெசாபுத்தியும் வலுப்பெற்றிருந்தால் தித்திக்கும் விதத்தில் வாழ்க்கை அமையும். குறிப்பாக, தாய் ஸ்தானத்தைப் பார்க்கும் சனியால் தாய்வழி ஒத்துழைப்பு கிடைக்கும். சின்ன வயதில் விளையாட பொம்மை வாங்கிக் கொடுத்தவர்கள் இப்பொழுது, வியாபாரம் செய்ய பணம் கொடுத்துதவுவர். வீடு கட்டும் முயற்சியில் இதுவரை இருந்த தடை அகலும். கட்டிய வீடாக வாங்கலாமா? அல்லது வீடு கட்டலாமா? என்று நினைத்தவர்கள் நல்ல முடிவுக்கு வருவர். குடும்பத்தில் அனைவர் ஜாதகமும் அலசிப்பார்த்து குடும்ப உறுப்பினர்களில் யார் ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றிருக்கிறதோ அவர்கள் பெயரில் சொத்துக்கள் வாங்குவது நல்லது. தொழிலில் இடமாற்றங்கள் உருவாகலாம். பதவி உயர்வுகள் வந்து சேரும். சப்தம ஸ்தானம் புனிதமடைவதால் கல்யாணக் கனவுகள் நனவாகும். நினைத்தபடி சீரும் சிறப்புமாக நடை பெறும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். விருப்ப ஓய்வில் வந்தவர்கள் சுயதொழில் செய்ய முன்வருவர். பனிரெண்டாமிடம் புனிதமடைவதால், பயணங்கள் அதிகரிக்கும். தூரதேசத்திலிருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள். கோவில் திருப்பணிகளை முன்நின்று நடத்துவீர்கள். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு செல்வாக்கு மேலோங்கும். யோக பலம் பெற்ற நட்சத்திரமும், வியாழக்கிழமையும், இணையும் நாளில் தெசா புத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால், செல்வநிலை உயரும். ராகு-கேது பெயர்ச்சிக் காலம்! 27.10.2009-ல் தனுசு ராசியில் ராகுவும், மிதுன ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். கோதண்ட ராகுவாக, உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் ராகு மிகுந்த யோகத்தை வழங்கப் போகிறார். பணத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய துறைகளில் கால் பதிப்பீர்கள். உறவினர்களுடன் வந்த உரசல்கள் மாறும். உடல் நலத்தில் மட்டும் சிறு, சிறு தொல்லைகள் வந்து சேரும். சப்த ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் வாழ்க்கைத் துணை வழியே வாக்கு வாதங்கள் ஏற்படலாம். எனவே, விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் சில பிரச்சினைகளை கண்டும், காணாமலும் இருந்தால்தான் நிம்மதி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் திடீர் செலவுகள் உருவாகலாம். எனவே, ராகு-கேதுப் பெயர்ச்சி காலத்தில் அவற்றிற்குரிய பரிகாரங்களை முறையாகச் செய்து கொண்டால் முன்னேற்றமான வாழ்க்கையைக் காணலாம். குருப்பெயர்ச்சிக் காலம்! கன்னி ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கப் போகிறார். 15.12.2009 முதல் கும்பத்தில் இருக்கும் குருவின் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதியப் போகிறது. எனவே, குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். கொடுக்கல் -வாங்கல்கள் ஒழுங்காகும். பெருமைக்குரிய விதத்தில் பிள்ளைகளின் முன்னேற்றம் ஏற்படும். உரிமையோடு பழகியவர்கள் உங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பர். தந்தை வழியில் தனலாபம் கிடைக்கும். 2010-ல் மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியத்தில் அடிக்கடி கவலை ஏற்படும். நண்பர்கள் எதிரியாகலாம். பணம் எவ்வளவு வந்தாலும் விரயமாகிறதே என்று கவலைப்படுவீர்கள். பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இக்காலத்தில் குருபகவான் வழிபாட்டை முறையாக மேற்கொண்டால், அதன் அருட்பார்வையால் அனைத்துக் காரியங்களும் நல்லபடியாக நடைபெறும். சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற... 14.1.2010 முதல் 31.5.2010 வரை மீண்டும் 27.1.2011 முதல் 13.6.2011 வரை சனி வக்ர இயக்கத்திலிருந்து செயல்படுகிறார். இதன் விளைவாக, சில நல்ல மாற்றங்களும் உங்களுக்கு வந்து சேரும். திடீர் பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். காரணம், தனாதிபதியாகவும் சனி விளங்குகிறார். சகாய ஸ்தானாதிபதியாகவும் விளங்குகிறார். எனவே, குடும்பப் பிரச்சினைகள் அதிக ரிக்கும். இந்த நேரத்தில் உடனிருப்பவர்களையும், குடும்ப உறுப்பினர்களையும் அனு சரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் சில தடுமாற்றங்கள் வந்து சேரும். எனவே, சனி வழிபாட்டை முறையாகச் செய்து வந்தால், கருநிற காகம் ஏறும் சனி பகவான் அருளினைத் தருவதோடு, பொருளையும் உங்களுக்கு தருவார். சிறப்பு வழிபாடு கன்னிச் சனியால் எண்ணிய காரியம் வெற்றி பெற வழிபாடு! பத்தாமிடத்துச் சனியால் பலவித நன்மைகளைக் காணவும், முத்தான வாழ்க்கை வந்து சேரவும், சனிக் கிழமை தோறும் சனி வழிபாட்டை மேற்கொள்வதோடு, வியாழக்கிழமை தோறும் குரு வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். சிறப்பு வழிபாடாக கும்பகோணம் அருகில் உள்ள உப்பிலியப்பன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள விஷ்ணுவையும், இலக்குமியையும் வழிபட்டு வருவதோடு, மதுரை நன்மை தருவார் கோவிலில் உள்ள மத்தியபுரீஸ்வரர், மத்தியபுரியம்மன், நந்தீஸ்வரரையும் வழிபட்டு வாருங்கள். குரு சந்நிதியில், குருவே நீ பார்த்தால் போதும் கோடியாய் நன்மை சேரும்! அருள்தர வேண்டி உன்னை அன்போடு துதிக்கின்றோமே! என்று பாடுங்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். -------------------------------------------------------------------------------- மகர ராசி உத்ராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம், அவிட்டம் 1, 2 பாதம் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்) ஒன்பதாமிடத்துச் சனியால் வன்பகை மாற வழி பிறக்கும்! நினைத்ததை அடைய நிதானத்தைக் கடைபிடிக்கும் மகர ராசி நேயர்களே! இதுவரை அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தில் இருந்த நீங்கள் இப்பொழுது அதிலிருந்து விடுபடப் போகிறீர்கள். கடந்த இரண்டரை ஆண்டுகளாக நீங்கள் பட்ட துயரங்கள் குறையும். பணத் தேவைகள் பூர்த்தியாகி மகிழ்ச்சியை வழங்கும். உங்கள் ராசிநாதனாக சனி விளங்குவதால், தளராத மனதைப் பெற்றிருப்பீர்கள். எந்தச் செயலையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து நிதானமாகவேச் செய்து முடிப்பீர்கள். உங்கள் சுய ஜாதகத்தை ஆராய்ந்து, சனி இருக்கும் நிலையறிந்து அதற்குரிய பரிகாரங்களை முறையாகச் செய்தால் சஞ்சலங்கள் தீரும். சங்கடங்கள் மாறும். நவாம்சத்தில் சனி இருக்கும் நிலையறிந்து, அதைப் பார்க்கும் கிரகத்தின் நிலையறிந்து, அதற்குரிய எண் ஆதிக்கத்தில் உங்கள் பெயரையும், உங்கள் தொழில் நிலையத்தின் பெயரையும் அமைத்துக் கொண்டால், உங்கள் லட்சியங்கள் நிறைவேறும். திருமணப் பொருத்தங்கள் பார்க்கும் பொழுதும், குடும்ப ஸ்தானாதிபதியாகவும் சனி விளங்குவதால், அதிகபட்சமான பொருத்தங்கள் இருந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக அமையும். குறிப்பாக சந்திர பலமும், சனியின் பலமும், செவ்வாயின் ஆதிக்கமும், வரன்களின் ஜாதகத்தில் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, பொருத்தமானதாக இருக்கிறதா என்று பார்த்து மணம் முடித்துக் கொண்டால் தான் குணத்தோடு வாழ இயலும். இந்த சனிப் பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சியா, என்பதைப் பற்றிப் பார்ப்போம். விலகிய சனியை வணங்குங்கள்! விரைவில் நன்மை காணுங்கள்! மாபெரும் கிரகம் என்று வர்ணிக்கப்படுவதும் சனியாகும். அதன் ஆட்சி இரண்டரை ஆண்டு காலம் அஷ்டமத்தில் இருந்தது மனக் கஷ்டத்தையும் கொடுத்திருக்கும். பணக் கஷ்டத்தையும் கொடுத்திருக்கலாம். தினந் தோறும் அலைச்சலும், ஆரோக்கியக் குறைவும் வந்திருக்கலாம். அந்த நிலை மாறும் விதத்தில் இப்பொழுது அஷ்டமத்துச் சனி விலகுகிறது. விலகும் சனியை நீங்கள் விரும்பி வரவேற்று வழிபாடு செய்ய வேண்டும். விலகும் சனியை வணங்கி "சங்கடம் தீர்க்கும் சனி பகவானே, என் வாழ்வில் இனிமையைச் சேர்ப்பாய் என்று சனிப் பெயர்ச்சியன்று வழிபாடு செய்யுங்கள். ராசி நாதனாகவும், இரண்டாம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் சனிபகவான் 9-ம் இடத்திலிருந்து கொண்டு அதன் புனிதப் பார்வையை 3, 6, 11 ஆகிய இடங்களில் பதிக்கிறார். இதன் விளைவாக சகோதரம், வழக்கு, எதிர்ப்பு, வியாதி, கடன், வெளிநாட்டுப் பயணம், லாபம் ஆகிய துறைகளில் எல்லாம் திடீர் மாற்றங்கள் உருவாகப் போகின்றன. ஜென்ம குருவின் ஆதிக்கமும் உள்ளதால் என்னதான் சனி விலகினாலும் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்ட வேண்டிய நேரமிது. விரயாதிபதி மட்டுமல்ல, சகாய ஸ்தானாதி பதியாகவும் குரு விளங்குவதால் நீங்கள் தீட்டிய திட்டம் வேறு, முடிந்தது வேறாக இருக்கலாம். தற்சமயம் ஜென்மத்தில் ராகுவும், 7-ல் கேதுவும் இருக்கிறார்கள். அடுத்துப் பெயர்ச்சியாகும் பொழுது, அக்டோபர் மாதத்திற்கு மேல் கேது 8-ல் அல்லவா சஞ்சரிக்கப் போகிறார். எனவே குடும்பப் பிரச்சினைகள் கொடி கட்டிப் பறக்கலாம். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் மேலோங்காமல் இருக்க ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. எனவே எதையும் யோசித்தும், பூஜித்தும் செய்வதோடு சனிப் பிரீதி, ராகுப் பிரீதி, குருப் பிரீதி ஆகியவற்றை முறையாகச் செய்வது நல்லது. ஒன்பதாம் இடத்துச் சனியால் வன்பகை மாறுமா? ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி ஒரு சில காரியங்கள் நல்ல விதமாக முடிய வழிகாட்டுவார். குறிப்பாக, இது வரை அஷ்டமத்துச் சனியில் ஏற்பட்ட பகை மாறும்! ஆனால் உறவினர்களுக்குள் மட்டும் உள்ள பகை மாறுமா என்பது சந்தேகம் தான். எந்த முடிவையும் உடனடியாகச் சொல்லி விடாமல், பிறகு நாங்கள் சொல் கிறோம் என்று தளர்த்தி வைப்பது நல்லது. அரசியல் ஈடுபாடு கொண்டவர்கள் பொறுப்புகளிலிருந்து திடீரென மாற்றப்படுவர். அதிகாரிகள் நீண்ட தூரங்களுக்கு மாற்றலாகலாம். இருந்தாலும் வரும் மாற்றங்கள் ஜாதக ரீதியாக அனுகூலமாக இருக்குமானால் மாறிக் கொள்ளலாம். இல்லையேல் ஏப்ரலுக்கு மேல் வரும் மாற்றங்களை உபயோகப் படுத்திக் கொள்ளலாம். மந்தனின் பார்வையால் ஏற்படும் மாற்றங்கள்! கந்தனின் பார்வையால் ஏற்படும் மாற்றங்கள் கைநிறையப் பொருள் குவிய வைக்கும். மந்தனின் பார்வையால் ஏற்படும் மாற்றங்கள் உங்கள் மகத்தான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும். அதன் பார்வை 3, 6, 11 ஆகிய இடங்களில் பதிவதால், சகோதர வழியில் இதுவரையில் ஒத்துழைத்தவர்கள் விலகலாம். வேறொரு சகோதரர் உங்களுக்கு உதவ முன்வருவார். ராசிநாதன் சனியின் பார்வை புனிதமான பார்வைதான். ஆனால் சுய ஜாதகத்தில் திசையோ, புத்தியோ சனி நடைபெற்றாலும், ஒரே குடும்பத்தைச் சார்ந்த மற்றவர்களுக்கு சனி ஆதிக்கம் நடைபெற்றாலும் வளர்ச்சிக்கு இடைïறுகள் வந்து சேரலாம். எனவே இது போன்ற அமைப்பில் உள்ளவர்கள் அனுமனையும், சனியையும் வழிபாடு செய்து வர வேண்டும். குறிப்பாக 6-ம் இடத்தில் சனியின் பார்வை பதிகிறது. எதிர்ப்பு, வியாதி, கடன் எனப்படும் இடத்தில் பதிவதால் எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றல் உங்களுக்கு வந்து சேரும். இருப்பினும் உறவினர் பகை அதிகரிக்கும். உடல் நிலையில் ஒரு தொல்லை நிவர்த்தியானால் அடுத்த தொல்லை வந்து சேரும். எனவே மருத்துவப் பரிசோதனைகளை செய்து நோய் வருவதற்கான அறிகுறிகள் தென்படும் போதே அவை தீர வழியமைத்துக் கொள்வது நல்லது. வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். நீங்கள் இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது புத்தி சாலித்தனமாகும். புதிய உத்யோக வாய்ப்புகளையோ, ஊர் மாற்றங் களையோ உபயோகப்படுத்திக் கொள்வது அவ்வளவு நல்லதல்ல. புதிய வாய்ப்புகளில் வேலைப்பளு கூடும். அதே நேரம் வெளிநாட்டு வாய்ப்புகளும் வரலாம். யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது. யோக பலம் பெற்ற நட்சத்திரமும், புதன்கிழமையும் இணையும் நாளில் தெசா புத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் நல்ல பலன்கள் வந்து சேரும். ராகு - கேது பெயர்ச்சிக் காலம்! 27.10.2009-ல் தனுசு ராசியில் ராகுவும், மிதுன ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார். கோதண்ட ராகுவாகி அயன, சமனஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சர்ப்ப கிரகம் நற்பலன்களையே வழங்கும். குறிப்பாக 12க்கு அதிபதி குரு நீச்சம் பெற்றிருக்கும் பொழுது, இருக்கும் நிலைமையைக் காட்டிலும் 12-ல் ராகு சஞ்சரிக்கும் பொழுது கூடுதல் பயணம் உங்களுக்கு கிடைக்கும். வீடு கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும். அந்நிய தேசத் தொடர்பு அனு கூலம் தரும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 6-ல் கேது சஞ்சரிக்கும் பொழுது எதிரிகளின் தொல்லை அதிகரிக்கலாம். சங்கிலித் தொடர் போல கடன் சுமை உருவாகும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. குறிப்பாக சர்ப்ப கிரகங்கள் நற் பலன்தர யோக பலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்திகளை முறையாகச் செய்து கொள்ள வேண்டும். குருப்பெயர்ச்சிக் காலம்! கன்னி ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, குரு கும்ப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். 15.12.2009 முதல் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு அதன் பார்வையை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிக்கிறார். எனவே உடல் நலம் சீராகும். உள்ளத்தில் தெம்பும், உற்சாகமும் கூடும். கடன் சுமை குறையப் புதிய வழி பிறக்கும். கல்யாண வாய்ப்புகள் படியேறி வரும். இழந்தவைகளைப் பெற புதிய கூட்டாளிகளுடன் செயல்படுவீர்கள். 2010-ல் மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது சகோதர ஒற்றுமை பலப்படும். சகோதரியால் வந்த சிக்கல்கள் தீரும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். பிறருக்கு வாங்கிக் கொடுத்த தொகை மீண்டும் உங்களிடம் வந்து சேரும். வாழ்க்கைத் துணை வழியே இருந்த பிரச்சினைகள் அகன்று பிரிந்தவர்கள் இணைவர். இக்காலத்தில் திசைமாறிய தென் முகக் கடவுளை வழிபட்டு வருவதன் மூலம் தேனான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற... 14.11.2010 முதல் 31.5.2010 வரை மீண்டும் 27.1.2011 முதல் 13.6.2011 வரை சனி வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கிறார். இதன் விளைவாக உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். பொதுவாக ராசி நாதனும், குடும்ப ஸ்தானாதிபதியும் வக்ரமாக இருந்தால் நிம்மதி என்ற நான் கெழுத்தை நாம் காண இயலாது. எனவே இக்காலம் முழுவதும் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்ட வேண்டிய நேரமாகும். சமூகத்தில் உங்களுக்கென்று இருக்கும் தனி மதிப்பை தக்க வைத்துக் கொள்ள பிரயாசை எடுக்கும் சூழ்நிலை உருவாகும். வம்பு, வழக்குகள் வராமல் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வது நல்லது. பரபரப்பைக் குறைத்து பணியில் அக்கறை காட்டினால் வரும் துயரங்கள் வழிமாறிச் செல்லலாம். சனிக்கிழமை விரதம் மற்றும் காக வாகனத்தான் வழிபாடு உங்கள் சஞ்சலங்களைத் தீர்க்கும். விரயங்கள் ஏற்படும் இந்த நேரத்தில் விழிப்புணர்ச்சி உங்களுக்குக் கூடுதலாகத் தேவை. சிறப்பு வழிபாடு கன்னிச் சனியால் எண்ணிய காரியம் வெற்றி பெற வழிபாடு! ஒன்பதாமிடத்துச் சனியால் வன்பகை மாறவும், வளர்ச்சி அதிகரிக்கவும், சனிக்கிழமை தோறும் சனீஸ்வர வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. பெருமாள் வழிபாட்டின் மூலமும் பெருமை சேரும். சிறப்பு வழிபாடாக, திருநள்ளாறு சென்று சனீஸ்வர வழிபாட்டை முறையாக மேற்கொண்டு வந்தால் முன்னேற்றங்கள் அதிகரிக்கும். சனியின் சந்நிதியில், நீலத்தில் பிரியம் வைத்த நிகரில்லாச் சனியே! என்றென் வாழ்விற்கு வழியைக் காட்டு, வளர்ச்சியை நாளும் கூட்டு! என்று பாடுங்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.   -------------------------------------------------------------------------------- கும்ப ராசி அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்) அஷ்டமச் சனியின் ஆதிக்கம்! அலைச்சல் இனிமேல் அதிகரிக்கும்! கடமையிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கும் கும்ப ராசி நேயர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இப்பொழுது அஷ்டம ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கப் போகிறார். எட்டில் வரும் சனியால் நீங்கள் ஏராளமான மாற்றங்களைக் காணப் போகிறீர்கள். உங்கள் ராசிக்கு சனி ராசிநாதனாகவும், பனிரெண்டாமிடத்திற்கு அதி பதியாகவும் விளங்குகிறார். எனவே, கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதற்கேற்ப, நல்ல வாய்ப்புகளையும் உங்களுக்கு அள்ளித் தருவார். மனக்கசப்பு தரும் சம்பவங் களையும் நடைபெற வைப்பார். எனவே, விடாது சனியை வழிபட்டால் வியக்கும் வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார். சூரியன் உங்கள் ராசிநாதனுக்கு பகைவனாக இருப்பதால் தந்தை வழி ஒத்துழைப்புகள் உங்களுக்கு ஓரளவே கிடைக்கும். கற்ற கல்வியைக் காட்டிலும், பெற்ற அனுபவமே உங்களுக்கு கை கொடுத்து உதவும். களத்திர ஸ்தானாதிபதியாக சூரியன் விளங்கு வதால், தக்க விதத்தில் பொருத்தம் பார்த்து செய்தால்தான் வாழ்க்கையில் தாரத்தால் மன அமைதியும், முன்னேற்றமும் கிடைக்கும். சனி, சூரியன் அருகருகில் இருக்கும் ஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்து அதன்பிறகு, தக்க பொருத்தமும் பார்த்து தாலி கட்டும் விழா நடத்தினால் வாழ்வில் வசந்த காலங்கள் உருவாகும். உங்கள் சுய ஜாதகத்தில் சனி இருக்கும் நிலை அறிந்து, நவாம்சத்தில் சனி இருக்கும் இடம், அதைப் பார்க்கும் கிரகம் ஆகியவற்றை ஆராய்ந்து, அவைகளுக்கு ஏற்ற விதத்தில் வரும் எண் ஆதிக்கத்தில் உங்கள் பெயரையும், உங்கள் தொழில் நிலையத்தின் பெயரையும் அமைத்துக் கொண்டால் வருங்காலம், செல்வங்கள் வரும் காலமாக மாறும். உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சிதானா? என்பதைப் பற்றிப் பார்ப்போம். அஷ்டமச்சனியின் ஆதிக்கம் அடிக்கடி உடல்நலம் பாதிக்கும்! மாபெரும் கிரகம் என்று வர்ணிக்கப்படும் சனி, இதுவரை உங்களுக்கு கண்டகச்சனியாக இருந்தது. இனி அஷ்டமத்துச்சனியாக அடியெடுத்து வைக்கிறது. எட்டில் வந்த சனி எல்லோருக்கும் பாதிப்பைக் கொடுத்தாலும், உங்களைப் பொறுத்தவரை உற்சாகத்தோடு பணிபுரிய வைக்கும். மனக்கசப்பு தரும் சம்பவங்களைக் கொடுத்தாலும், பணப்புழக்கத்தை அதிகரிக்க வைக்கும். இடமாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம், வாகன மாற்றம், உத்யோக மாற்றம் என்று பலவித மாற்றங்களைச் செய்ய முன் வருவார். சுய ஜாதகம் வலிமையாக இருந்தால் தான் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல், இரண்டரை ஆண்டு காலம் கழித்தே முடிவெடுக்க வேண்டும். உங்கள் ராசிக்கும், பனிரெண்டாமிடத்திற்கும் அதிபதியான சனி பகவான் எட்டாமிடத்தில் சஞ்சரித்தபடியே அதன் பார்வையை 2, 5, 10 ஆகிய இடங்களில் செலுத்துகிறார். வாக்கு, தனம், குடும்பம், புத்திரர், பூர்வ புண்ணியம், தொழில், செயல் ஆகிய ஆதிபத்தியங்களில் எல்லாம் மாற்றங்களை உருவாக்கப் போகிறார். உங்கள் ஆசைகளை நிறைவேற்றுவது சனி பகவான் தான். குறிப்பாக, குடும்பத்தில் சுப விரயங்கள் அதிகரிக்கும். பழைய வீட்டை வாங்கலாமா? புதிய வீடாக விலைக்கு வாங்கலாமா? என்ற சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விடாமல் தன் பக்கம் இருக்க வழியென்ன என்று யோசிப்பீர்கள். பிள்ளைகளின் வெளிநாட்டு முயற்சிகளில் செய்த ஏற்பாடு வெற்றி தரும். தொழிலில் ஓரிடத்தில் ஸ்திரமாக இருந்து வேலை பார்க்க இயலாது. மனம் அலை பாயும். எந்தச் செயலையும் செய்யத் தொடங்கும் முன் ஒரு யோசனை உருவாகும். பிறகு செய்யும் பொழுது மற்றொரு யோசனை உருவாகும். பொதுவாக, காக வாகனத்தான் வழிபாட்டில் அதிக கவனம் செலுத்தி அவருக்குரிய கவச பாராயணங்களைப் படித்து வந்தால் உங்களுக்குரிய யோக வாய்ப்புகளை நாளும் வரவழைத்துக் கொடுக்கும். எட்டாமிடத்துச்சனி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா? சனி உங்களுக்கு ராசிநாதனாகவும், பனிரெண்டாம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குகிறார். மற்ற ராசிக்காரர்களுக்கெல்லாம் அஷ்டமத்துச் சனி வந்தவுடன் எதிர்பாராத சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி என்பது பழமொழி. ஆனால், உங்கள் ராசியைப் பொறுத்த வரை விபரீத ராஜயோக அடிப்படையில் செயல்படப் போகிறது. 6, 8, 12-க்கு அதிபதிகள் 6, 8, 12-ல் சஞ்சரிக்கும் பொழுது யோகம் தான். எந்த வழியிலேனும் நீங்கள் ஒரு பெரிய முன்னேற்றம் காண சனி வழி வகுத்துக் கொடுப்பார். பார்க்கும் சனியால் ஏற்படும் மாற்றங்கள்! எட்டில் இருக்கும் சனி குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால், குடும்பச் செலவுகள் கூடும். பம்பரமாய் சுழன்று பணி புரிந்தாலும் இன்று வரவேண்டிய தொகை நாளை தான் வரும். இல்லத்தில் அமைதி நிலவ எல்லோரையும் அனுசரித்து செல்வது நல்லது. ஐந்தாமிடத்தில் சனியின் பார்வை பதிவதால், குழந்தைகளுக்குத் தேவையான ஆடை, ஆபரணங்களை அதிகம் வாங்கிக் கொடுப்பீர்கள். குழந்தைகள் நலன் கருதி எதிர்கால திட்டங்களுக்காக ஒரு தொகையை வைப்பு நிதியாக்குவீர்கள். வெளிநாடு சென்று கல்வி கற்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கவும் உங்கள் நண்பர்கள் கைகொடுத்துதவுவர். தொழில் மாற்றம் பற்றி சிந்திக்க தொடங்குவீர்கள். எதிரிகள் போட்டிக்கடை வைத்தி ருக்கிறார்களே என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். சில காலங்கள் கழித்து அவர்களாகவே மாறிச் சென்று விடுவர். புதிய பங்குதாரர்களை நம்பி செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. அவர்களின் முழு ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். பெற்றோர்களின் உடல் நலத்தில் திடீர் தாக்குதல்கள் ஏற்படலாம். பத்தில் சனி வரும் பொழுது குடும்பத்திலுள்ள பெரியவர்களின் உடல் நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வந்தவுடன் ஆறு மாதங் களும், விலகும் பொழுது ஆறு மாதங்களும், நடுவில் ஆறு மாதங் களும் சனியின் வலிமை அதிகரிக்கும். அக்காலத்தில் விநாயகர் மற்றும் அனுமன் வழிபாட்டை முறையாக மேற்கொள்ள வேண்டும். யோக பலம் பெற்ற நட்சத்திரமும், வியாழக்கிழமையும் கூடும் நாளில் தெசா புத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை தேர்ந்தெடுத்துச் செய்தால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். ராகு - கேது பெயர்ச்சி காலம்! 27.10.2009-ல் தனுசு ராசியில் ராகுவும், மிதுன ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன் விளைவாக, புதிய ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். கோதண்ட ராகு உங்களுக்கு ராஜ யோகத்தை வழங்கப் போகிறார். இதுவரை பாதியில் நின்ற பணிகள் இனி மீதியும் தொடரும். வெளி நாட்டு அனுகூலம் கிட்டும். ஐந்தில் சஞ்சரிக்கும் கேதுவின் பலத்தால் புத்திர விருத்திக்கான அறிகுறிகள் தோன்றும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நிறைவேற்றுவீர்கள். அவர்களுக்காக வேலைகள் வாங்கிக் கொடுக்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். தங்கம், வெள்ளி போன்றவைகளை தாராளமாக வாங்கிச் சேர்ப்பீர்கள். சர்ப்ப கிரகங்களின் ஆலயத்திற்குச் சென்று சர்ப்ப சாந்திகளை முறையாகச் செய்தால் மேலும் நற்பலன்களைப் பெறலாம். குருப்பெயர்ச்சிக் காலம்! கன்னி ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, குரு கும்ப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். 15.12.2009 முதல் உங்கள் ராசியிலேயே குரு சஞ்சரிக்கப் போகிறார். ஜென்ம குருவாக இருந்தால் சிறப்புகளைக் கொடுக்குமா? என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். தனலாபாதிபதி உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது தனலாபத்தை அள்ளி வழங்குவார். எனவே, பொருளாதார பிரச்சினை அகலும். புகழ் கூடும். மதிப்பும் மரியாதையும் உயரும். மக்கட் செல்வங்களால் மேன்மை கிட்டும். தொழில் வளர்ச்சி கூடும். 2010 சனி மீன ராசியில் சஞ்சரிக்கும் பொழுது மேலும் நற்பலன்களைக் காணப் போகிறீர்கள். தனாதிபதி தனஸ்தானத்தில் சஞ்சரிக்கும் அந்த நேரத்தில் தொட்ட காரியங்கள் வெற்றி பெறும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். வங்கிகளிலும் கடனுதவி கிடைத்து வைத்திருக்கும் தொழிலை விரிவு செய்வீர்கள். வியாழக்கிழமை தோறும் தெட்சிணாமூர்த்தி வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் விரும்பிய நற்பலன்களை மேலும் பெறலாம். சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற... 14.1.2010 முதல் 31.5.2010 வரை மீண்டும் 27.1.2011 முதல் 13.6.2011 வரை சனி வக்ர இயக்கத்தில் இருந்து செயல்படுகிறார். இதன் விளைவாக, திடீர் பயணங்கள் அதிகரிக்கும். தெய்வீக நாட்டமும் கூடும். பங்குதாரர்கள் உங்களை விட்டு விலகலாம். அலைச்சல் அதிகரிக்கும். ஆனால், ஆதாயத்தில் குறைவு ஏற்படாது. உத்யோகம், தொழிலில் உடனடியாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பொழுது யோசித்து கையெழுத்திடுவது நல்லது. கூட்டாளிகள் விலகாமல் இருக்க குணத்தோடு நடந்து கொள்வது நல்லது. விரயங்கள் ஏற்படாமல் இருக்க சனிக்கிழமை தோறும் சனி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. எள் தீபம் ஏற்றி வழிபட்டால் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். சிறப்பு வழிபாடு கன்னிச் சனியால் எண்ணிய காரியம் வெற்றி பெற வழிபாடு! அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும் இந்த நேரத்தில் சனிக்கிழமை தோறும் அருகம்புல் மாலை சூட்டி ஆனைமுகப் பெருமானையும், பழ விளக்கேற்றியும், பழம் கற்கண்டு வைத்தும் அர்ச்சனை செய்து அனுமனையும் வழிபட்டு வருவதும் நல்லது. காரைக்குடி அருகிலுள்ள தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அரியக்குடிக்கு சென்று விஷ்ணு இலக்குமியையும், திருப்பத்தூர் அருகில் உள்ள திருக்கோஷ்டிïருக்குச் சென்று சவுமிய நாராயணப் பெரு மாள் - இலக்குமி வழிபாட்டையும் செய்து வருவது நல்லது. சனீஸ்வரர் சந்நிதியில்.... காக வாகனத்தானே உன்னை கண்டு நான் தெரிசிக்கின்றேன்! யோகங்கள் வந்து சேர விரைவினில் அருளுவாயே! என்று பாடுங்கள். மணியான வாழ்க்கை மலரும். -------------------------------------------------------------------------------- மீன ராசி பூரட்டாதி 4-ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி முடிய (பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்) நிதானத்தோடு செயல்பட்டால் நிச்சயம் வெற்றி உங்களுக்கு! நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மீன ராசி நேயர்களே! எப்பொழுது பார்த்தாலும் ஏதேனும் ஒன்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் நீங்கள். இப் பொழுது உங்கள் சிந்தனையெல்லாம் சனிப் பெயர்ச்சியிலேயே இருக்கும். வரும் சனி கண்டகச் சனியாக வருகிறது. ஏழாமிடத்தில் வந்த சனி சப்தம பார்வையாக உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறது. அந்தச் சனி உங்களுக்கு பெரியளவில் பாதிப்புகளைக் கொடுக்க மாட்டார். காரணம், உங்கள் ராசிநாதன் சுப கிரகமான குருவாகும். நல்லவர்களோடு இணைந்து நீங்கள் செயல்படும் பொழுது சனியின் ஆதிக்கம் உங்களைத் தாக்காது. கடமையிலேயே கண்ணும், கருத்துமாக இருப்பதால் தான் இளமையிலேயே நீங்கள் ஏராளமான பதவிகளை வகிக்க முடிகிறது. வாழ்க்கைத் துணை தான் வாழ்வின் வெற்றிக்கு காரணம் என்று சொல்வீர்கள். குல தெய்வ நம்பிக்கை உங்களுக்கு அதிகம் உண்டு. சனி உங்கள் ராசிக்கு லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்குகிறார். எனவே, லாபம், விரயம் இரண்டுமே சனியின் கையில்தான் இருக்கிறது. உங்கள் சுய ஜாதகத்தில் குரு இருக்கும் நிலையறிந்து அதற்குரிய சிறப்பு பரிகாரங்களை முறையாகச் செய்தால் எந்த நாள் ஆன போதும் இனிய நாளாக மாறும். தென்முகக் கடவுள் கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசம் செய்யும் ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நன்மைகளை அதிகம் சந்திக்க நேரிடும். நவாம்சத்தில் குரு இருக்கும் நிலையறிந்து, அதைப் பார்க்கும் கிரகத்தின் பலமறிந்து அதற்குரிய எண்ணாதிக்கத்தில் உங்கள் பெயரையும், உங்கள் தொழில் நிலையத்தின் பெயரையும் அமைத்துக் கொண்டால் வாழ்க்கை வளமாக அமையும். களத்திர காரகன் சுக்ரன் என்பதால், திருமணப் பொருத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பெயர்ச்சி தானா என்பதைப் பற்றிப் பார்ப்போம். ஏழாமிடத்துச் சனியால் இனிய பலன் ஏற்படுமா? இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இப்பொழுது ஏழாமிடத்திற்கு வரப் போகிறார். கண்டகச் சனியாக வருகிறதே என்று கவலைப்பட வேண்டாம். கொண்டாடி வழிபட்டால் கண்டகச் சனி கூட கவலையில்லாத வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் என்பதை அனுபவத்தில் காணலாம். உங்கள் ராசிக்கு பதினொன்று, பனிரெண்டுக்கு அதிபதியாக விளங்குகிறார். அவர் லாப ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியாவதால், அவர் 7-ல் சஞ்சரிக்கும் பொழுது வாழ்க்கைத் துணை வழியே லாபமும் வரலாம், விரயமும் வரலாம். எனவே, வாழ்க்கைத் துணையின் பெயரில் அமைந்த தொழிலிலும் இதே போல் ஏற்ற இறக்கமான நிலை ஏற்படலாம். தொழிலில் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது. இட மாற்றம், ஊர் மாற்றம், இலாகா மாற்றங்களும் ஒரு சிலருக்கு உருவாகும். தெசா புத்தி வலுப்பெற்றவர்கள் மனக்கசப்பு தரும் சம்பவங்களை அதிகம் சந்திக்க மாட்டார்கள். சப்தம ஸ்தானத்திற்கு வரும் சனியால் அது பார்க்கும் இடங்கள் 1, 4, 9 ஆகிய இடங்களாக அமைகிறது. எனவே, உடல் ஆரோக்கியம், அறிவாற்றல், சுகம், தாய், தந்தை, பூர்வீகம், கால்நடைகள், வாகன யோகம் ஆகிய அனைத்து ஆதிபத்யங்களிலும் மாற்றங்களை உருவாக்கப் போகிறார். குறிப்பாக, ஆரோக்கியத்தில் அடிக் கடி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். அலைச்சல் அதிகரிக்கும். கொடுக் கல் - வாங்கல்களில் கூடுதல் கவனம் செலுத்தினால் விரயங்களிலிருந்து விடுபடலாம். வாகனங்களில் செல்லும் பொழுது விழிப்புணர்ச்சியுடன் சென்றால் வழியில் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கலாம். சனி வழிபாட்டை முறையாக செய்து காகத்திற்கு சோறிட்டு அவர் வாகனத்தையும் திருப்திப்படுத்தி வந்தால் வரும் இடைïறுகள் வந்த வழியே திரும்பும். வந்த சனி தந்திடும் பலன்கள்! ஏழாமிடத்தில் வந்த சனி முதலில் வரவைக்காட்டிலும் செலவை அதிகரிக்க வைப்பார். வருங்கால நலன் கருதி எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒரு சிலர் விலகுவர். மருத்துவ செலவுகள் கூடும். மன அமைதி இல்லையே என்று சிந்திப்பீர்கள். லாபாதிபதியாகவும் சனி விளங்குவதால், கடைசி நேரத்தில் பணம் வந்து சேர்ந்து காரியங்களை முடிக்க வைக்கும். மூத்த சகோதரத்தால் ஏற்பட்ட இடைïறுகள் அகலும். முன்னேற்றப் பாதையை நோக்கி நீங்கள் அடியெடுத்து வைக்கும் பொழுது உறவினர்களைக் காட்டிலும் நண்பர்களே ஒத்துழைப்புச் செய்வர். இரட்டித்த சிந்தனை களைத் தவிர்ப்பது நல்லது. மந்தன் பார்வையால் ஏற்படும் பலன்கள்! உங்கள் ராசிக்கு பதினொன்று மற்றும் பனிரெண்டுக்கு அதிபதியான சனி பகவான் ஏழில் நின்று கொண்டு 1, 4, 9 ஆகிய இடங்களைப் பார்ப்பதால், இந்த சனிப் பெயர்ச்சி காலம் முழுவதும் நீங்கள் அருகில் இருப்பவரை அனுசரித்துச் செல்வதன் மூலமே பெருகிய பலன்களைக் காண இயலும். சனியின் பார்வை உங்கள் மீது நேரடியாகப் பதிவதால் துணிவும், தன்னம்பிக்கையும் குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டால் முட்டுக் கட்டைகளை தகர்க்க இயலும். வீடு வாங்க எடுத்த முயற்சியில் ஆர்வம் குறையலாம். இருப்பினும், குடும்ப உறுப்பினர்களில் யார் பெயரில் சொத்துக்கள் வாங்கி னால் நிலைக்கும் என்பதைக் கண்டறிந்து, பிறகு அனுகூலம் தரும் நாளில் பூமிநாதசாமி கோவிலுக்கும், பூமியோகம் தரும் கோவிலுக்கும் சென்று வழிபட்டு வருவது நல்லது. அதன் பிறகு சொத்துக்கள் நிலைக்கும் ஆற்றல் உண்டு. தகப்பனார் ஸ்தானத்தைப் பார்க்கும் சனி, பாகபிரிவினைகளை சுமூகமாக முடித்து வைக்கும். பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். வெளிநாட்டு பயணம் கைகூடும். கூட்டு முயற்சியில் ஈடுபடுவோர் தனித்தியங்க முற்படும் நேரமிது. ஆனால், மாற்றினத்தவர்களை கூட்டாகச் சேர்த்துக் கொண்டால் மகிழ்ச்சியை கடைசி வரை தக்க வைத்துக் கொள்ள இயலும். யோக பலம் பெற்ற நட்சத்திரமும், வியாழக்கிழமையும் இணையும் நாளில் தெசா புத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால், வளர்ச்சியும் கூடும். வருமானமும் திருப்தி தரும். ராகு - கேது பெயர்ச்சி காலம்! 27.10.2009-ல் தனுசு ராசியில் ராகுவும், மிதுன ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். பத்தாமிடத்தில் சஞ்சரிக்கப் போகும் கோதண்ட ராகு உங்களுக்கு முத்தான வாய்ப்புகளை அள்ளி வழங்கப் போகிறார். தொழில் வளம் பெருகும். தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சியைக் கொடுக்கும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க வள்ளல்கள் வரிசையாக வந்து நிற்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நான்காமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் நற்பலன்கள் கிடைக்குமா? என்பது சந்தேகம் தான். சுகங்களும், சோகங்களும் மாறி மாறி வரும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன் பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். இக்காலத்தில் ராகு - கேதுக்களுக்குரிய சிறப்பு பரிகாரங்களை அதற்குரிய ஸ்தலங் களுக்கு சென்று முறையாக செய்து வந்தால் முன்னேற்றமான வாழ்க்கை அமையும். குருப்பெயர்ச்சிக் காலம்! கன்னி ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, கும்ப ராசியில் குரு 15.12.2009 முதல் சஞ்சரிக்கப் போகிறார். ராசிநாதன் விரயஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் விரயங்கள் கட்டுக் கடங்காமல் போகலாம். வீடுகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை விலைக்கு கொடுக்கும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு உருவாகலாம். தெசா புத்தி பலம் இழந் திருப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக அவைகளை ஒழுங்கு செய்து கொள்வது நல்லது. தொழிலில் வரும் இழப்புகளைச் சமாளிக்க பணியாளர்களை அடிக்கடி கண்காணிப்பது நல்லது. உத்யோகஸ்தர்கள் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லாவிட்டால், வீண் பழிகள் வந்து சேரலாம். எனவே, விருப்ப ஓய்வில் ஒரு சிலர் விலகிக் கொள்வர். பிரதோஷ வழிபாட்டையும், நந்தி வழிபாட்டையும், பவுர்ணமி கிரிவல வழிபாட்டையும் மேற்கொண்டால் துயரங்கள் துள்ளி ஓடும். குரு தெட்சிணாமூர்த்தியை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். மீனத்தில் குரு வரும் பொழுது தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொகை வந்து கொண்டேயிருக்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற... 14.1.2010 முதல் 31.5.2010 வரை மீண்டும் 27.1.2011 முதல் 13.6.2011 வரை சனி வக்ர இயக்கத்தில் இருந்து செயல்படுகிறார். இதன் விளைவாக, தொழிலில் வரவேண்டிய தொகைகள் தங்கி நிற்கலாம். பிரயாசை எடுத்து எதையும் முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அடுத்தவர்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது யோசித்துச் சொல்வது நல்லது. எதிரிகளின் பலம் குறைய இறை வழிபாடு உங்களுக்கு கை கொடுக்கும். அரசியலில், பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு பதவி மாற்றங்கள் உருவாகலாம். உத்யோகஸ்தர்களுக்கு நீண்ட தூரங்களுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்பு கூட வந்து சேரலாம். எள் தீபமேற்றி சனியை வழிபட்டால், நல்ல பலன்களை நாளும் எதிர்பார்க்கலாம். சிறப்பு வழிபாடு கன்னிச் சனியின் எண்ணிய காரியம் வெற்றி பெற வழிபாடு! ஏழாமிடத்தில் வரும் சனியால் இனிய பலன்களைக் காணவும், எடுத்த காரியங்களில் வெற்றி பெறவும், வியாழக்கிழமை தோறும் குரு வழிபாட்டை முறையாக மேற்கொள்வது நல்லது. சிறப்பு வழிபாடாக, சிவகங்கை மாவட்டம் இரணிïரை நோக்கி வாருங்கள். அங்குள்ள ஆட்கொண்ட நாதர், சிவபுரந்தேவியை பூக்கொண்டும், பாக் கொண்டும் வழிபட்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள். அங்குள்ள சனீஸ்வரர் சந்நிதியில், "மந்தனாம் சனியே! உந்தன் மகத்துவம் அறிந்து கொண்டேன்! வந்ததோர் துயரம் நீக்கு! மனதினில் அமைதி கூட்டு! என்று பாடுங்கள். சனி உங்களுக்கு சகல யோகத்தையும் வழங்குவார்.
உங்கள் பிறப்பு சுய ஜன ஜாதகத்தில் ஆராய்ச்சி செய்து பாருங்கள்
RishiAstro App|எவ்வாறு பயன்படுத்துவது CLICK HERE GO...
வருமாணம் பிரச்சனையா|காரணம் என்ன| எளியமுறையில் சரிசெய்ய| psssrf CLICK HERE GO...
உங்கள் நட்சத்திரம் |Positive-வ அல்லது Negative-வ|எளிய பரிகாரம் |Psssrf CLICK HERE GO...
உங்கள் நட்சத்திரத்திற்கு |தினம் பயன்படும் பொருல்கள் வைத்து |எளிய முறை பரிகாரங்கள் CLICK HERE GO...
செவ்வாய் தோஷம் செவ்வாய் தோஷத்தை ஒருவரின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் இருப்பதாக கருதலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கல்யாணத் தடைக்கு ஆளாவார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது லக்னம், சந்திரன், சுக்கிரன் முதலியவற்றுக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாகக் கருத வேண்டும். மேற்கூறிய இடங்களில் செவ்வாய் தோஷமானது லக்கினத்திலிருந்து பார்க்கும் போது முழுமையானதாகவும், சந்திரன் நின்ற வீட்டிலிருந்து பார்க்கும் போது பாதி (1/2) தோஷத்தையும் மற்றும் சுக்கிரனிலிருந்து பார்க்கும்போது கால் பங்கு(1/4) தோஷத்தையும் அளிக்கும். பின்வரும் கிரக அமைப்புகளால் செவ்வாய் தோஷம் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் 2, 4, 7, 8 மற்றும் 12-ஆம் வீட்டிலிருந்தாலும், விதிவிலக்காகி செவ்வாய் தோஷம் இல்லாமல் செய்துவிடும். அவற்றைப் பற்றி விளக்கமாக இப்போது, காண்போம். CLICK HERE GO...
உங்களுக்கு நடக்கும் தசாபுத்தி |நன்மை கொடுக்கும் அதிரிஷ்ட |நீங்கள் தெரிந்துகொள்ள CLICK HERE GO...
அனந்த காலசர்ப்ப யோகம் ராகு 1வது வீட்டில் இருக்கிறது. கேது 7வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
குலிகா காலசர்ப்ப யோகம் ராகு 2வது வீட்டில் இருக்கிறது. கேது 8வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
வாஸுகி காலசர்ப்ப யோகம் ராகு 3வது வீட்டில் இருக்கிறது. கேது 9வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
சங்கினி காலசர்ப்ப யோகம் ராகு 4வது வீட்டில் இருக்கிறது. கேது 10வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
பத்ம காலசர்ப்ப யோகம் ராகு 5வது வீட்டில் இருக்கிறது. கேது 11வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
Save customer details psssrf.org.in, Astrology software, CLICK HERE GO...
மகாபத்ம காலசர்ப்ப யோகம் ராகு 6வது வீட்டில் இருக்கிறது. கேது 12வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
தக்‌ஷக காலசர்ப்ப யோகம் ராகு 7வது வீட்டில் இருக்கிறது. கேது 1வது வீடு வீட்டில் இருக்கிறது. CLICK HERE GO...
1 2 3


தலைப்பு
சூரியன் - அசுவனி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பூசம் 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
ஆணுக்கு அஸ்வனி மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...
தலைப்பு
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
விருச்சக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சந்திரன் மேஷ ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
சந்திரன் ரிஷப ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...


ஜாதக ராசி நவாம்சம் கோச்சரம் பலன்
ஜாதகர் பெயர் :
பாலினம் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Longitude
Latitude பிறந்த நாடு :பிறந்த மாவட்டம் Distric :பிறந்த மாநிலம் State:பிறந்த மாநில குறியீடு StateCode :பிறந்த ஊர் City:Longitude Latitude

திருமண பொருத்தம் பார்க்க ஜாதக பொருத்தம் விவாக பொருத்தம்
ஆண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க
பெண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க

ஜாதகர் பெயர் :
ஆண் பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Latitudegovi அட்சரேகை நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு : Longitudegovi தீர்க்கரேகை:


ஜாதகர் பெயர் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric :


ஜோதிடம் கற்க ஜோதிட சாப்ட்வேர் கிடைக்கும். WhatsApp : 8870974887 and Cell : 8870974887 கோவிந்தன் WhatsApp : 8870974887



கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது

Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, 33 சாப்ட்வேர்-> Rs.11,000 USB KEY & PASSWORD இல்லை - Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000 USB KEY உண்டு 12/15/2025 7:32:52 PM


உங்கள் நட்சத்திரம் |Positive-வ அல்லது Negative-வ|எளிய பரிகாரம் |Psssrf



Psssrf ஜோதிட சாப்ட்வேரில். ஜோதிடர் முகவரி பதிவு செய்து. பிரிண்ட் செய்யும் முறை.



உங்கள் நட்சத்திரத்திற்கு |தினம் பயன்படும் பொருல்கள் வைத்து |எளிய முறை பரிகாரங்கள்