|
தென்கிழக்கு பகுதி:-
வீட்டில் தெற்கு-கிழக்கு திசைகள் சந்திக்கும் தென்கிழக்கு பகுதி. இது வாயு பகவான் குடி கொண்டிருக்கும் பகுதி. சமையலறைக்குரிய பகுதியாகும். இங்கு சமையல் அறை அமைக்கும்போது குடும்பத்தில் சடைச் சச்சரவுகள் இன்றி ஒற்றுமை நிகழும். சுப காரியங்கள் தடையின்றி நிகழ்ந்தேறும். குடும்ப உறுபினர்களின் ஆரோக்கியம் மேலோங்கு இந்த அறையின் தளம் தெற்கு, மேற்கு பகுதி சற்று உயரமாகவும், வடக்கு, கிழக்கு பகுதி சற்று தாழ்வாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த அறையின் கிழக்கு, வடகிழக்கு, தெற்கு, தென் கிழக்கு பகுதியில் ஜன்னல்கள் அமைப்பது சிறப்பு. தென் கிழக்கு பகுதி அறையை படுக்கும் அறையாக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் விரயச் செலவு, அதிகமான மருத்துவச் செலவு, குடும்பத்தில் சண்டைச் சச்சரவு போன்றவை உண்டாகும். |