|
கிருஷ்ண ஜெயந்தி விரதம்
ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்திற்கு எட்டாம் நாள் ரோகினி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்று அஷ்டமி திதியில் கண்ணன் பிறந்தான். அன்று வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை மாவால் பதியச் செய்வர்.
கிருஷ்ணன் தம் வீட்டிற்கு வந்ததைப் போன்ற ஓர் இனிய உணர்வு இதனால் ஏற்படுதின்றது. இவ்விரதம் தம்பதிகளாகவே செய்தல் வேண்டும். பகலில் விரதம் இருந்து இரவில் வசுதேவ தேவகியுடன் ஸ்ரீ கிருஷ்ணனை பூஜித்து கண் விழித்திருந்து அவரது சரிதத்தைக் கேட்க வேண்டும்.
மறுநாள் பூஜை செய்து அன்னதானம் செய்ய வேண்டும். பாகவத்தில் அவதார கட்டத்தைப் பாராயணம் செய்வதும் பாகவதம் கேட்பதும் புண்ணியம் தரும் |