|
இடித்து சலித்த பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து இளநீர் கலந்து கெட்டியாக பிசைந்து காமாட்சி விளக்கை போல் செய்து கொள்ள வேண்டும். இந்த மாவிளக்கை பிசைந்த மாவின் மீது வைத்து மலர்களால் அலங்கரித்து வைத்து விட வேண்டும். விரதம் இருப்பவர்கள் குளித்து ஆசார அனுஷ்டானங்களை முடித்து விட்டு விநாயகரை முதலில் வழிபட வேண்டும்.
மாவிளக்கில் நெய்விட்டு பஞ்சுத்திரி போட்டு விளக்கு ஏற்றி இஷ்ட தெய்வம் எதுவோ அதன் மீதான பக்தி ஸ்தோத்திரங்களை சொல்லி. இளநீர், கல்கண்டு, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு ஆகியவற்றை நிவேதனம் செய்து வணங்க வேண்டும்.
இந்த மாவிளக்கு மாவிளக்கு விரதபூஜையை வெங்கடாஜலபதியை நினைத்தும் கருமாரியம்மன், மாரியம்மன், காளியம்மன், முத்தாளம்மன், காமாட்சி அம்மன், முருகன் இவர்களுடன் ஏதாவது தெய்வத்தை நினைத்தும் செய்கிறார்கள்.
எந்த தெய்வத்தை நினைத்து செய்தாலும் மாவிளக்கு விரதபூஜையினால் குடும்ப நலம் நோயகள் குணமாகுதல் சொத்துத் தகராறு தீருதல் விரோதிகள் குறைதல் போன்ற நன்மைகள் ஏற்படுகின்றன. சிலர் மாவிளக்கு மாவிளக்கு விரதபூஜையை விரதமிருந்து கோவிலில் சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி மேற்கொள்கிறார்கள்.
|