|
இரண்டு, ஐந்து, பதினொன்று ஆகிய மூன்று வீடுகளும் சேர்ந்துதான் ஒரு ஜாதகனின் பணபலத்தை நிர்ணயம் செய்யும். இம்மூன்று வீடுகளும் பலமாக இருந்தால் ஜாதகனுக்கு நிறையப் பணம் வரும் செல்வந்தனாக உருவெடுப்பான். இல்லையென்றால் இல்லை
இரண்டாம் வீடுதான் House of finance என்றாலும், அங்கே பணத்தைக் கொண்டுவந்து கொட்டுபவை மற்ற இரண்டு வீடுகள்.
ஐந்தாம் வீட்டை லெட்சுமிகரமான வீடு என்று சொல்லலாம். எதிர்பாராத பண வரவுக்கெல்லாம் இந்த வீட்டின் அமைப்புத்தான் காரணம். பங்கு வணிகத்தில் சிலர் லட்சம் லட்சமாக அல்லது கோடி கோடியாகச் சம்பாதிப்பதற்கெல்லாம் இந்த வீடுதான் காரணம். The house which governs the money coming from speculation - shares, stock market and related instruments. வலிமையான ஐந்தாம் வீடும், வலிமையான ஒன்பதாம் வீடும் இருக்கும் ஜாதகனுக்குப் பணம் மழையாகக் கொட்டும். அண்டாக்களில் பிடித்துவைத்துக்கொள்ள வேண்டியது மட்டுமே அவனுடைய வேலை. ஒன்பதாம் வீட்டிற்கு அதிலிருந்து ஒன்பதாம் இடம் ஐந்தாம் வீடு அதை மனதில் கொள்க A powerful 5th house along with 9th house will bring luck to an individual. 9th house is called as bhagyasthana. 5th being 9th from 9th also represents luck in the horoscope.
பதினொன்றாம் வீடு லாபஸ்தானம். House of profit ஒரு ஜாதகனின் வாழ்க்கை முறைக்கு, உங்கள் மொழியில் சொன்னால் Life Styleற்கு இந்த வீட்டின் அமைப்புத்தான் காரணம். உங்களுக்குப் பல ஆசைகள் இருக்கலாம். அந்த அசைகளை நிறைவேற்றிவைப்பது இந்த வீடுதான். பதினொன்றாம் வீடும், அதன் அதிபதியும்தான் உங்களுக்குக் கொட்டும் பணமழையின் அளவை நிர்ணயிப்பவர்கள். 11th house alone will determine what a person will earn from. The strength of the house and ruler would determine the size of source of income. This house represents gains of all kinds.
2ஆம் வீடு. இதற்குத் தனஸ்தானம் என்று பெயர் ஒரு ஜாதகனுக்கு என்ன தேறும் என்பதை அது சொல்லும். அதே போல ஜாதகனுக்கு என்ன தங்கும் என்பதையும் அது சொல்லும் 2nd House: Financially, house number 2 (dhanasthana) This house represents the net worth of an individual. It also denotes the extent to which the individual will be able to retain the money earned through sources represented by 5th and 11th house. அந்த இரண்டு வீடுகள் மட்டும் நன்றாக இருந்து அதாவது 5ம் 11ம் நன்றாக இருந்து, இந்த வீடு கெட்டிருந்தால் பணம் வரும், ஆனால் வரும் பணம் கையில் தங்காது. பல வழிகளில் செலவாகிவிடும். அதை ஓட்டைக் கை ஜாதகன் என்பார்கள். ஓட்டைக் கையில் என்ன தங்கும்? ஓட்டை வாளியில் என்ன தங்குமோ அதுதான் தங்கும்!
பதினொன்றாம் வீட்டைத் தண்ணீர்க் குழாய்க்கும் இரண்டாம் வீட்டை வாளி அல்லது அண்டாவிற்கும் உதாரணமாகச் சொல்லலாம். 11th house can be thought of as a tap and 2nd house as a bucket. The bucket is filled with water flowing from the tap. How much water will accumulate depends on the rate water flows from the tap and size of the bucket. நான்காம் வீடு சுகஸ்தானம். பணம் இன்றி சுகமேது? ஆகவே ஒரு ஜாதகன் சுகமாக வாழ்வதற்கு இரண்டாம் வீடு நன்றாக இருக்க வேண்டும். இங்கே ஒரு அதிசய ஒற்றுமையைப் பாருங்கள் இரண்டாம் வீடு, பதினொன்றாம் வீட்டிலிருந்து நான்காம் வீடு. Second house represents the accumulated wealth of the individual. ஜாதகனின் கையில் தங்கும் செல்வத்திற்கான வீடு இரண்டாம் வீடு! அதை மனதில் கொள்க!
பணவரவு எப்படி வேறுபடுகிறது? இந்த மூன்று வீட்டு அதிபதிகளின் வலிமை முக்கியம். அதோடு அவர்கள் ஒருவருக்கொருவர் ஜாதகத்தில் இணைந்து கூட்டாக அல்லது பரிவர்த்தனையாக அல்லது பரஸ்பர பார்வையோடு இருப்பதும் முக்கியம். அந்தக் கூட்டணி எந்த அளவிற்கு உள்ளதோ அந்த அளவிற்கு பணம் கிடைக்கும்.
Planetary combinations of wealth, are formed when rulers of these houses are associated with each other and with rulers of 1st, 5th and 9th house. This association could be through conjunction in good houses, exchange and through mutual aspect. Involvement of Jupiter as benefic planet in these combinations is considered extremely auspicious.
---------
பணமின்றி வறுமையில் வாடுவதேன்? அல்லது பணக்கஷ்டத்தில் உழல்வதேன்? இந்த மூன்று வீட்டு அதிபதிகளும், 6ஆம் வீடு, 8ஆம் வீடு அல்லது 12ஆம் வீட்டதிபதிகளுடன் சகவாசம் வைத்திருந்தால் எப்போதும் பணக் கஷ்டம்தான் சகவாசம் என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.
--------
2ஆம் வீட்டதிபர், பதினொன்றாம் வீட்டதிபர் ஆகிய இருவரும் வலிமை இல்லாமல் இருந்தால் (அதாவது சுயவக்கத்தில் குறைந்த பரல்களுடன் இருந்தால்) ஜாதகனுக்கு வறுமை என்பது நிரந்தர நண்பனாகிவிடும். பணக்கஷ்டம் என்பது பகல் பொழுதாகிவிடும்.
|