|
சந்திரன் தோஷ விரதம்சந்திர தசை,சந்திரன் பலம் இழந்து இருப்பவர்கள், சந்திர தோஷம் உள்ளவர்கள் இந்த விரதத்தை அனுசரித்தால் தோஷம் நீங்கப் பெறுவார்கள். சிவன் கோவில்களில் நவக்கிரகங்களை வணங்கி பின் சந்திர பகவான் முன் நின்று வழிபட வேண்டும். அப்பொழுது இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபட வேண்டும்
"அலைகடல் அதனில் நின்றும் அன்று வந்துதித்த போது
கலைவளா திங்களாகிக் கடவுளென் றெவரும் ஏத்தும் சிலை
முதல் உமையாள பங்கன் செஞ்சடைப் பிறையாருமேரு
மலைவல மாதவந்த மதியமே போற்றி போற்றி'
இந்த தோத்திரம் சொல்லி வணங்குபவர்கள் ஆயுள் விருத்தியும் சகல செல்வ போகங்களும் பெறுவார்கள். விரதமிருந்து சுமங்கலி பெண்களுக்கு தங்களால் முடிந்த ரவிக்கை துணி,வெத்தலை,பாக்கு,மஞ்சள்,குங்குமம்,பூ கொடுக்க வேண்டும்.
|