| கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன? |
|
கால சர்ப்ப தோஷம் Cum யோகம்.
அதென்ன தோஷம் cum யோகம் என்று அனேகம் பேர்களுக்கு சந்தேகம் வரும். ஒன்று தோஷம்
என்று சொல்ல வேண்டும் அல்லது யோகம்
கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு தீய கிரகங்கள், வானவெளியில் 180 டிகிரியில் இன்றை
ஒன்று எதிர் நோக்கியவாறு இருக்கும். சுழற்சியில் இரண்டின் வேகமும் ஒரே அளவு
என்பதால். அந்த 180 டிகிரில் ஒரு இம்மி கூட மாற்றம் இருக்காது.
அவை இரண்டைத் தவிர மற்றும் உள்ள ஏழு கிரகங்கள், அடுத்தடுத்தோ அல்லது கூட்டாகவோ அந்த
இரண்டு கிரகங்களுக்கு நடுவே வானவெளியில் இருக்கும் சூழ்நிலையில் பிறக்கும்
குழந்தைகளின் ஜாதகத்தில், ராகு மற்றும் கேதுவிற்கு இடையில் அந்த கிரகங்கள்
மாட்டிக்கொண்டுவிடும்.
All the other seven planets will be hemmed or sandwitched between Rahu and Ketu.
This position in a horoscope is called as Kala Sarppa Dosha
அதன் கால அளவு பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் உண்டு. சிலர் அதை 33 வருட காலம்
என்று சொல்வார்கள். வேறு சிலர் அதை லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளனவோ, அததனை
வருடம் அது உணடெ ன்பார்கள். அந்தக் கருத்துப் பிரச்சினைகள் எல்லாம் இடையில் பல
ஜோதிட வல்லுனர்களால் ஏற்பட்டவை.பொதுவாக முப்பது ஆண்டுகள் என்பதுதான் அனுபவ உண்மை. |