|
ஆடி மாதம் சுக்ல பஞ்சமியில் நாகபஞ்சமி விரதம் இருக்க வேண்டும். பகவான் நாரயணன் அனந்தன் என்னும் நாகமாக இருந்து பூமியைக் காக்கிறார். இவ்விரத நாளன்று புற்றுக்குப் பால் ஊற்றி நாகங்களை வணங்கினால் நன்மை உண்டாகும். குழந்தை பாக்கியம் வேண்டி இவ்விரதம் இருந்து நாக பிரதிஷ்டை செய்தால் பலன் கிட்டும்.
இவ்வாறு பிறக்கும் குழந்தைகளுக்கு நாகசாமி, நாகராஜன், நாகலட்சுமி என்று பெயர் சூட்டுவார்கள். சுக்லபஞ்சயில் கருட பஞ்சமி விரதம் ஆரம்பிக்கலாம். இரண்டு விரதங்களையும் கடைபிடிப்போர் குடும்பத்தில் மகிழ்ச்கியும் செல்வமும் நிலைக்கும்.
இரு பண்டிகைகளும் சகேதரர்களின் சுபிஷத்திற்காக சகோதரிகள் கொண்டாட வேண்டிய விரதங்களாகும். நாக சதுர்த்திப் பற்றி ஒரு புராணக்கதை ஒன்று உண்டு. நாகப்பாம்பு கடித்து இறந்து போன ஐந்து சகோதரர்களுக்காக சகோதரி நாக பஞ்சமி விரதம் இருந்து சகோதரர்களை உயிர் பெற செய்தாள்.
|