| இரண்டாம் எண் சந்திரனுக்கு உரியது. சந்திரன் மனகாரகன்.இரண்டாம் எண்ணிற்கு உரியவர்கள் மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள். மெல்லிய உணர்வுகளை உடையவர்கள்.
உயர்வான, சாதுவான, இனிமையான குணமுடையவர்களாக இருப்பார்கள். நுண்ணிய, சமாளிக்கும் திறன்மிக்க, ராஜதந்திரமிக்க, பொறுமையுள்ள, நேர்மையுள்ளவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். உண்மையானவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்களுக்கு என்ன தேவை என்று உணரக்கூடியவர்களாக இருப்பார்கள். அதன்காரணமாக ஒரு குழுவாகச் செயல்படும் தன்மையை உடையவர்களாக இருப்பார்கள். அழகை நேசிப்பவர்களாக இருப்பார்கள்.
ஆசிரியர், ஆலோசகர், இசைக்கலைஞர், கட்டடக்கலைஞர், தூதுவர் போன்ற தொழில்களில் அல்லது வேலைகளில் பரிணமளிப்பார்கள். அதாவது பெயர் எடுப்பார்கள்.
சிலர், கோழைத்தனம், பயஉணர்வு அல்லது தன்னம்பிக்கைக் குறைபாடுகள் உடையவர்களாக இருப்பார்கள். அதன் காரணமாக வெற்றிபெற முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடும். இதுவும் அந்த எண்ணின் தன்மையாகும். தேய்பிறைச் சந்திரனில் பிறந்தவர்களுக்கு இந்தத்தன்மை இருக்கும்!
சிலர் சட்டென்று மனதளவில் காயப்படுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களின் எதிர்ப்பில் இருந்தும், விமர்சனங்களில் இருந்தும் தப்பிக்கும் உணர்வுடையவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த எண்ணிற்கு நட்பான எண்கள் 1, 3
நட்பு இல்லாத எண்கள் 5, 4
உரிய நாள்: திங்கட்கிழமை
உரிய நிறம்: வெண்மை! (White)
உரிய நவரத்தினம்: முத்து (Pearl)
உரிய உலோகம்: வெள்ளி (Silver)
தொழில் அல்லது வேலை:
நீதித்துறையில் சிறப்பாகப் பணியாற்றக்கூடியவர்கள். இந்த எண்காரர்களுக்கு இயற்கையாகவே பேச்சுத்திறமை இருக்கும் என்பதால், அவர்களால் நீதித்துறையில் வெற்றிபெறமுடியும். அதுபோலவே இந்த எண்காரர்களுக்கு அரசியலும் பொருத்தமான துறையாகும். நடனம், இசை, இலக்கியம், சிற்பக்கலை ஆகிய துறைகளும் இவர்களுக்கு வெற்றிகரமான துறையாகும். பதிப்பகம், ஜவுளித்துறை, நகைவியாபாரம் ஆஇய துறைகளில் பணியாற்றும் இந்த எண்காரர்களுக்கு அபரிதமான செல்வம் சேரும்.
உடல் நலம்: நீரழிவு நோய்க்கு (Diabetes) ஆட்பட நேரிடும். கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கும் ஆளாக நேரிடும்.
திருமணம்: இந்த எண்ணுடைய பெண்கள் ஒன்றாம் எண்காரர்களையும், இந்த எண்ணில் பிறந்த ஆண்கள் 7ஆம் எண்ணுடைய பெண்களையும் மனந்து கொள்ளலாம். பொருத்தமாக இருக்கும்!
மகாத்மா காந்திஜி, லால் பஹதூர் சாஸ்த்ரி ஆகியவர்கள் இந்த எண்ணில் பிறந்த இந்தியப் பிரபலங்கள். |