|
ஜாதகத்தில் நாகதோஷம் இருப்பவர்கள் அதற்குப் பரிகாரமாக இருக்க வேண்டிய விரதம் நாக சதுர்த்தி விரதம் ஆகும். ஆடி மாதம் திருதியைத் திதியில் வரும் நாகசதுர்த்தியில் விரதம் இருந்தால் நாகதோஷம் விலகும்.
இவ்விரதத்தினைக் குடும்பத்தினர் அனைவரும் கலந்து இருக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து குளித்து அருகிலுள்ள மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.
பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்து கற்பூர ஆராதனை செய்தல் வேண்டும்.
|