|
போர்டிகோ
வீட்டின் முன் பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்காகவும்,அழகிற்காகவும் அமைக்கபடும் போர்ட்டிகோ வடக்கு, வடகிழக்கு, கிழக்குத் திசைகளில் மட்டுமே அமைக்கபட வேண்டும். போர்ட்டிக்கோ அமைக்கும் போது அதன் முனைபகுதி தரையை நோக்கித் தாழ்ந் திருக்கும் வகையில் அமைத்துவிடக் கூடாது. உயர்ந்தும், நிமிர்ந்தும் அது இருக்க வேண்டும். வீட்டின் தலைவாசலை வடகிழக்குத் திசையில் அமைத்தால் போர்டிகோவை எந்தத் திசையில் வேண்டுமானாலும் அமைக்கலாம். வடக்கு நோக்கிய வீட்டில் தலைவாசல் கிழக்கு சார்ந்த வடகிழக்கில் வைக்கபடாமல் சற்று மேற்கே தள்ளி வைக்கபட்டிருக்கிறது என்கிற பட்சத்தில் போர்டிகோவை வடகிழக்கு மூலைவரை வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக போர்டிகோவின் உயரம் வராடாவின் உயரத்திற்கு சமமாக அல்லது சற்றுக் குறைவாக இருக்கலாம். ஆனால் உயரமாக இருக்கக் கூடாது.
|