|
ராகு தோஷமுள்ளவர்கள் சனிக்கிழமைகளில் இவ்விரதத்தை அனுசரிக்கலாம். சனிக்கிழமையன்று காளி கோவிலுக்குச் சென்று வேப்பஎண்ணெய் விளக்கேற்றி நவக்கிரக சந்நிதியில் ராகு பகவானை வழிபட வேண்டும்.
"வாகுசேர் நெடுமான் முன்னம் வானவருக்கு அமுதம்
ஈயப்போகும் அக்காலை உன்றன் புணர்ப்பினால் சிரமே
அற்றுப்பாகுசேர் மொழியன் பங்கன் பரன் கையில் மீண்டும்
பெற்ற ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே!'
என்ற தோத்திரம் பாடி வணங்குவதால் சகல நோய்களும் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும்.ராகு தோஷத்தால் ஏற்படும் கஷ்டங்களும் படிப்படியாக குறையும்.
|