|
சுவர்கள்:வீட்டில் சுவர்கள் எல்லாம் தொடர்ச்சியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சுவற்றிற்கு இடையில் இடைவெளி இருக்கக் கூடாது. சுவற்றில் வெட்டுக்களோ வளைவுகளோ இருக்கக் கூடாது. வீட்டுச் சுவர் இடிந்திருக்கவும் கூடாது. வீட்டில் மற்ற பகுதிகளில் கட்டபடும் சுவரின் கனத்தைவிட ஈசானியத்தில் கட்டபடும் சுவரின் கனம் குறைவாக இருக்க வேண்டும். வீட்டிற்கும் எந்த சுவரும் பாதிக் கட்டபட்ட நிலையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அது அங்கு வாழும் குடும்பத் தலைவியையும் குழந்தைகளையும் பாதிக்கும். படுக்கை அறையின் சுவரின் நடுவே செங்குத்தாக அமைவது
போல் சுவர் எழுபக்கூடாது. இவ்வாறு எழுபும் போது தம்பதிகளின் குழந்தை பாக்கியம் பாதிக்கபடும். |